என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முட்டம்"
- ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல்
- வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் மீட்டனர்
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்த வர் லூக்காஸ் (வயது 44). இவர் கேரளாவில் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இவர் வழக்கம்போல் கொல்லம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். படகை லூக்காஸ் ஓட்டினார்.
அவருடன் தூத்துக் குடியை சேர்ந்த 2 பேர், கொல்லம் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த தலா ஒருவர், ஆந்திராவை சேர்ந்த 5 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 3 பேருமாக 13 மீன் பிடித்தொழிலாளர்கள் சென்றனர். இவர்களது விசைப்படகு நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதி 28 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்ப்பாரா மல் திடீரென கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் படகு உடைந்து உள்ளே கடல் நீர் புகுந்தது. செய்வதறியாது தவித்த மீனவர்கள் படகில் புகுந்த நீரை இறைத்து வெளியேற்றினர். அப்போதும் நீர் படகுக்குள் புகுந்தது. இதனால் மீனவர் லூக்காஸ் படகை அருகில் கரை சேர்க்க இயக்கினார். ஆனால் பலத்த காற்று வீசியதால் படகு எதிர் திசையில் அடித்து சென்றது. படகை கட்டுப்படுத்த முடியாமல் மீனவர்கள் தவித்தனர்.பின்னர் 8 நாட்டிக்கல் தூரம் அடித்து சென்றபின் படகு கட்டுக்குள் வந்தது. அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பைபர் படகை லூக்காஸ் உதவிக்கு அழைத்தார். உதவிக்கு வந்த பைபர் படகில் மீனவர்கள் ஏறி பாதுகாப்பாக அமர்ந்தனர்.
நேற்று காலை லூக்காஸ் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தேங்காய்பட்டணம் துறைமுகம் வந்தார். ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். உடனே வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லூக்காஸ் படகு நோக்கி விரைந்து சென்றனர். பல மணிநேரம் சென்ற மேற்படி வள்ளங்கள், விசைப்படகு லூக்காஸ் படகை அடைந்தது. பின்னர் அவர்கள் பைபர் படகில் இருந்த 12 மீனவர்கள், உடைந்த லூக்காஸ் விசைப்படகையும் மீட்டு கரை நோக்கி விரைந்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் மீனவர்கள் அனைவரும் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் பத்திரமாக கரை சேர்ந்தனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- பறிமுதல் செய்த மண்எண்ணையையும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- இந்த மண்எண்ணை மீன் பிடி வள்ளங்களுக்கு அரசு மானியமாக வழங்கப்படும் மண்எண்ணை என கூறப்படுகிறது.
கன்னியாகுமரி:
குளச்சல் மரைன் இன்ஸ்பெக்டர் நவீன் உத்தர வுப்படி சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் நேற்றிரவு மணவா ளக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.
முட்டம் சோதனைச் சாவடியில் செல்லும் போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு சொகுசு கார் வந்தது.அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.அப்போது காருக்குள் 22 பிளாஸ்டிக் கேன்களில் 700 லிட்டர் மண்எண்ணை கடத்தி செல்ல முயற்சித்தது தெரிய வந்தது. இதையடுத்து மண்எண்ணையை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த மண்எண்ணை மீன் பிடி வள்ளங்களுக்கு அரசு மானியமாக வழங்கப்படும் மண்எண்ணை என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் காரை ஓட்டி வந்த சாமியார்மடத்தை சேர்ந்த ஸ்டாலின் (வயது 37) மற்றும் அவருடன் வந்த கிரிபிரசாத் (47) ஆகியோரையும், பறிமுதல் செய்த மண்எண்ணையையும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- போதை பழக்கத்தை தட்டிக் கேட்டதால் மகன் கொலை
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் புகார்
நாகர்கோவில்:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கீழ முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அல்மாண்ட்ஸ். இவரது மனைவி சகாயராணி. இவர்களது மகன் நிக்சன் (வயது 29).
இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முட்டம் துறைமுகத்தில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வெள்ளி சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாக அல்மாண்ட்ஸ், அவரது மனைவி சகாயராணி ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு நிக்சன் என்ற மகனும் 3 மகள்களும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி எனது மகன் வீட்டில் இருந்தபோது அவரை ஒரு சிலர் அழைத்து சென்றனர். பின்னர் அவர் இரவு வீட்டிற்கு வரவில்லை.
மறுநாள் காலையில் முட்டம் துறைமுகத்தில் எனது மகன் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். எங்கள் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஏற்கனவே கூறி இருந்தோம். இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
போதை பழக்கத்தை தட்டி கேட்ட காரணத்திற்காக அவரை கொலை செய்து விட்டனர். அதற்கு காரணமான 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.
- பெண்ணிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட விரோதத்தில் கொன்றது அம்பலம்
- கொலையாளி பயன்படுத்திய மங்கி குல்லாவை கைப்பற்றி விசாரணை
நாகர்கோவில்:
வெள்ளிச்சந்தை அருகே முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவுலின்மேரி (வயது 48).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2-வது மகன் சென்னையில் படித்து வருகிறார். இதனால் முட்டத்தில் உள்ள வீட்டில் பவுலின்மேரியும், அவரது தாயார் தெரசம்மாளும் வசித்து வந்தனர்.
கடந்த 6-ந்தேதி பவுலின் மேரி, தெரசம்மாள் இரு வரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கொலையாளி பயன்படுத்திய மங்கி குல்லாவை கைப் பற்றி விசாரணை மேற் கொண்டனர். பல்வேறு கோணங்களில் விசா ரணை மேற்கொண்ட போலீசார் இரட்டைக் கொலை தொடர்பாக கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அமலசுமன் (35) என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் வெளி யாகி உள்ளது. போலீசாரிடம் அமலசுமன் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி தையல் வகுப்பு நடத்தி வந்தார். அந்த தையல் வகுப்பிற்கு வந்த பெண்ணி டம் நான் தகராறு செய்தேன். இதை அந்த பெண் பவுலின் மேரியிடம் கூறினார்.
இதை பவுலின்மேரி என்னிடம் தட்டிக்கேட்டார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்ப வத்தன்று பவுலின் மேரி வீட்டிற்கு சென்றேன். வீட்டில் இருந்த அவர், என்னிடம் தகராறில் ஈடுபட்டதால் தீர்த்துக் கட்டினேன். இதை வீட்டில் இருந்த அவரது தாயார் பார்த்தார். இதனால் அவரை அயன்பாக்சால் தாக்கினேன்.
பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். கொள்ளையடித்த நகையை அந்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் அமலசுமன் அடகு வைத்த நகையை மீட்டனர்.
கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். தையல் வகுப்பிற்கு வந்த பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெண் ஒருவர் தன்னிடம் அமலசுமன் தகராறில் ஈடுபட்ட தாகவும், அதை பவுலின்மேரியிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
தகராறில் ஈடுபட்ட அமலசுமன் போட்டோவை செல்போனில் எடுத்து இருப்பதாக தெரிவித்தார். அப்போது போலீசார் அந்த புகைப்படத்தை பார்த்தனர். அதில் பவுலின்மேரி வீட்டில் இருந்து முக்கிய தடயமாக சிக்கிய மங்கி குல்லா அமலசுமன் வைத்தி ருந்தது தெரிய வந்தது. இதனால் அமல சுமன்தான் கொலையாளி என்பதை போலீசார் முடிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசார் தேடுவதை அறிந்த அமல சுமன் தலைமறைவாகி இருந்தார். எனவே அவர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் உறுதி செய்தனர். இந்த நிலையில் அமலசுமனை கைது செய்து விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
- மேலும் 5 பேருக்கு தொடர்பு
- கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்த தீவிர விசாரணை
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் அருகே முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவரு டைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இவருடைய தாயார் திரேசம்மாள் (90).
இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்களால் பயங்கரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். மேலும் 2 பேரும் அணிந்திருந்த 15 பவுன் நகை கொள்ளை யடிக்கப்பட்டு இருந்தது.
வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 2 பெண்களை யும் கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கியமாக கொலை நடந்த வீட்டில் கிடந்த மங்கி குல்லா, ஒரு ஜோடி செறுப்பு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முட்டம் மற்றும் அம்மாண்டிவிளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். எனினும் கொலை தொடர்பாக போலீசாருக்கு எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது.
எனவே கொலையாளி கள் பற்றி ஏதேனும் தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பவுலின்மேரி மற்றும் திரேசம்மாள் கொலை தொடர்பாக முக்கிய ஆதாரம் சிக்கியது. அதன்படி சந்தேகத்தின் அடிப்படையில் 2 வாலிபர்களை போலீசார் பிடித்தனர்.
ஆனால் பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கஞ்சா விவகாரத்தில் இந்த கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு இந்த கொலை வழக்கில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் கஞ்சா விவகாரத்துக்கும், கொலை செய்யப்பட்ட பவுலின் மேரி மற்றும் திரேசம்மாளுக்கும் என்ன தொடர்பு என்பது சரிவர தெரியவில்லை. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே கொலையில் தொடர்புடைய மேலும் 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் பிடிபட்டால் தான் கொலைக்கான முழு தகவலும் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் கஞ்சா விற்பனை தொடர்பாக இரட்டைக்கொலை அரங் கேறியது. இந்த நிலையில் தற்போது கஞ்சா விவகாரம் தொடர்பாக தாய்- மகள் கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- கொலைக்கான காரணம் குறித்து 3 கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை
- தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை முயற்சியில் கொலை நடந்ததா? என 3 கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே முட்டம் தூய குழந்தை ஏசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இவரது தாயார் திரேசம்மாள் (90). பவுலின் மேரியின் கணவர் ஆன்றோ சகாயராஜ். அவரது மூத்த மகன் ஆலன் (25) ஆகியோர் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
பவுலின் மேரியின் 2-வது மகன் ஆரோன் (19) சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினியரிங் பயின்று வருகிறார். இந்த நிலையில் பவுலின் மேரி, அவரது தாயார் திரேஸ் அம்மாள் இருவரையும் அடித்துக் கொலை செய்து விட்டு அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கொலையாளிகளை பிடிக்க குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், வடசேரி இன்ஸ்பெ க்டர் திருமுருகன், கொல்ல ங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம்பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது. தனிப்படை போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது வீட்டில் இருந்த சில முக்கிய தடயங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். வடமாநில வாலிப ர்கள் சிலரிடமும் விசா ரணை நடத்தப்பட்டது. இதற்கிைடயில் கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி, திரேசம்மாளின் உடல் பரிசோ தனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. பிரேத பரிசோதனையின் போது பவுலின்மேரி கையில் தலைமுடி சிக்கி இருந்தது தெரிய வந்தது. அது ஆணின் தலைமுடி என்று கூறப்படுகிறது. எனவே கொலையாளிகள் பவுலின்மேரியை தாக்கும் போது அவர், கடுமையாக போராடி இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் கொலையாளிகள் வீட்டில் விட்டு சென்ற மப்ளரையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மப்ளர் கைப்பற்றப்பட்டதால் கொலையாளிகள் பவுலின் மேரிக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகள் முகம் தெரியாமல் இருக்க மப்ளரை பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.
கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி வீட்டிற்கு செல்லும் வழியில் கஞ்சா அடித்துக்கொண்டு வாலிபர் கள் சிலர் கடந்த சில மாதங் களுக்கு முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பவுலின் மேரி புகார் அளித்துள்ளார். இேதபோல் பவுலின்மேரி நடத்திவந்த தையல் பயிற்சி பள்ளிக்கு வந்த இளம்பெண் களை வாலிபர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
இது தொடர்பாகவும் போலீசில் புகார் செய்து ள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை முயற்சியில் கொலை நடந்ததா? என 3 கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி, திரேசம்மா ளின் உடல்கள் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாலை பவுலின்மேரி, திரேசம்மாள் உடல் அடக்கம் செய்யப்படு கிறது.
இதையடுத்து முட்டம் பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
- 3 தனிப்படை போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
- கொலை செய்யப்பட்ட தாய், மகள் இருவரும் வசித்து வந்த பகுதியில் வீடுகள் குறைவாகவே உள்ளது. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டே கொலையாளிகள் இருவரை யும் கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
கன்னியாகுமரி:
வெள்ளிச்சந்தை அருகே முட்டம் தூய குழந்தை இயேசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவரது மனைவி பவுலின் மேரி (வயது 48).
இவர்களுக்கு ஆலன் (25) ஆரோன் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜ் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருடன் இவரது மூத்த மகன் ஆலனும் வேலை செய்து வந்தார். ஆரோன் சென்னையில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
வீட்டில் பவுலின் மேரி மற்றும் அவரது தாயார் திரேசம்மாள் (90) ஆகிய இருவரும் இருந்தனர். நேற்று காலை வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த உறவி னர்கள் வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பவுலின் மேரி, திரேசம்மாள் இருவரும் வீட்டின் முன் அறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.
கொலை செய்யப்பட்ட வர்கள் கழுத்தில் கிடந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிர சாத்தும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து வெள்ளி ச்சந்தை போலீசார் வழ க்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு சில முக்கிய தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
கொலையாளிகள் மின் மீட்டரை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் வீட்டில் இருந்த அயன்பாக்ஸ் ஒன்றிலும் ரத்தக்கறை படிந்து இருந்தது. எனவே கொலையாளிகள் அயன்பாக்ஸ் மூலமாக தாய், மகள் இருவரையும் தாக்கி கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
தாய், மகள் இருவரும் ஒரே அறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததால் இந்த கொலை யில் ஒன்றுக்கு மேற்பட்ட வர்கள் சேர்ந்துதான் இந்த கொலையை அரங்கேற்றி இருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ரத்தக்கறை படிந்திருந்த அயன்பாக்ஸ், இரண்டு மப்ளரையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு மாலையில் தான் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இந்த கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
கொலையாளிகள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களின் தொடர்பில்லாமல் இந்த கொலையை அரங்கேற்றி இருக்க முடியாது. எனவே அதே பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உறவினர்கள் சிலரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி, திரேசம்மாள் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுள்ளனர்.
இதற்கிடையில் வெளி நாட்டில் உள்ள பவுலின் மேரியின் கணவர், மகன் இருவரும் இன்று மாலை ஊருக்கு வருவதாக அவரது உறவினர்கள் தெரி வித்தனர். சென்னையில் உள்ள பவுலின் மேரியின் மகன் ஆரோன் இன்று ஊருக்கு வந்தார். தாயாரின் உடலை பார்த்து கதறி அழுத அவரை உறவினர்கள் சமாதானம் செய்தனர். தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட தாய், மகள் இருவரும் வசித்து வந்த பகுதியில் வீடுகள் குறைவாகவே உள்ளது. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டே கொலையாளிகள் இருவரை யும் கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
கொலையாளிகள் பவுலின் மேரி, திரேசம்மாளுக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்