என் மலர்
நீங்கள் தேடியது "திற்பரப்பு அருவி"
- திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
- குழித்துறை ஆற்றில் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் சுட்டெரிக்கு வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இரணியல், குருந்தன் கோடு, கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, பூதப்பாண்டி, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்ததால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
திற்பரப்பில் அதிகபட்சமாக 68.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று காலையில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
மேற்கு மாவட்ட பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக குழித்துறை ஆற்றிலும் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
தற்பொழுது மழை குறைந்ததையடுத்து சப்பத்து பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு சாரல் மழை பெய்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையினால் 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30.18 அடியாக இருந்தது. அணைக்கு 233 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.05 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 48.2, பெருஞ்சாணி 41.4, சிற்றாறு 1-29.8, சிற்றாறு 2-18.6, நாகர்கோவில் 4.2, கன்னிமார் 20.6, பூதப்பாண்டி 12.4, முக்கடல் 20, பாலமோர் 6.2, தக்கலை 20, குளச்சல் 8, இரணியல் 6.2, அடையாமடை 27, குருந்தன்கோடு 4.4, கோழிப்போர்விளை 4.8, மாம்பழத்துறையாறு 20.2, ஆணைக்கிடங்கு 18.6, களியல் 15.4, குழித்துறை 5.2, புத்தன் அணை 41, சுருளோடு 62.6, திற்பரப்பு 68.4, முள்ளங்கினாவிளை 5.4.
- பேச்சிப்பாறை அணைக்கு 589 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
- பெருஞ்சாணி அணைக்கு 566 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் 700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருவட்டார்:
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மலையோர கிராமங்களான பேச்சிப்பாறை, கோதையாறு, மோதிரமலை, தச்சமலை, கல்லாறு போன்ற பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது.
நேற்று குலசேகரம், திற்பரப்பு, சிற்றாறு, கடையாலுமூடு அருமனை, திருவட்டார் போன்ற பகுதிகளில் காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது.
மலைப்பகுதியான கோழிப்போர்விளையில் 88.4 மில்லி மீட்டர் மழையும், இரணியலில் 63 மில்லி மீட்டரும், சிவலோகம் பகுதியில் 54.6, அடையாமடை 51.2, பெருஞ்சாணி 47, குளச்சல் 46.4 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
புத்தன் அணையில் 44.8, முள்ளங்கினாவிளை 32.8,சுருளோடு 30.4, பேச்சிப்பாறை 27, குருந்தன் கோடு 23, கன்னிமார் 21.2, நாகர்கோவில் 20, ஆனைகிடங்கு 16, கொட்டாரம் 15.6, பூதப்பாண்டி 15.4, சிற்றார் 15.4, மாம்பழத்துறையாறு 15, பாலமோர் 11.2, திற்பரப்பு 7.8, மைலாடி 7.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு 589 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 41.47 அடியாக உள்ளதால் 546 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணைக்கு 566 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் 700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றார்-1 அணைக்கு 37 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு 62 கன அடியும் நீர்வரத்து இருந்த போதிலும் வெளியேற்றம் எதுவும் இல்லை. பொய்கை அணை, மாம்பழத்துறையாறு அணைகளில் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை.
பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வருவதால் ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது.
இதன் காரணமாக இன்று 3-வது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- சுற்றுலா தலங்களில் போலீஸ் கண்காணிப்பு
- 17 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதி
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழி கிறது.
இதையடுத்து பேச்சிப்பா றை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் கோதை ஆறு, வள்ளியாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கின் காரணமாக திற்ப ரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டு இருந்தது.
தற்போது மழை சற்று குறைந்ததையடுத்து அணை களுக்கு வரக்கூடிய நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரும் நிறுத்தப்பட்டுள் ளது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் குறைந்ததையடுத்து திற்ப ரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவி யில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 17 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவி யில் கூட்டம் அலை மோதி வருகிறது.
தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநி லங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலாப் பயணி கள் சபரிமலையில் தரிச னம் செய்துவிட்டு கன்னியா குமரிக்கு வருகை தர தொடங்கியுள்ளார்கள். கன்னியாகுமரிக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் திற்பரப்பு அருவிக்கு செல்கிறார்கள். அங்கு செல்லும் அய்பப்ப பக்தர் கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.இதனால் திற்பரப்பு அருவி யில் கூட்டம் அலைமோதி வருகிறது.
விடுமுறை தினமான இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்திருந்தனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், குளச்சல் பீச் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் காலை மாலை நேரங்களில் சுற்றுலா தலங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர்.
- கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.79 அடியை எட்டியது.
நாகர்கோவில்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குமரி மாவட்டத்திலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சிற்றார்-1-ல் அதிகபட்சமாக 14 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இன்று காலையில் தண்ணீர் சிறுவர் பூங்காவை தாண்டி பாய்வதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு அந்த பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.56 அடியாக இருந்தது.அணைக்கு 1602 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 791 கன அடி தண்ணீரும், உபரிநீராக 1024 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.79 அடியை எட்டியது. அணைக்கு 893 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.32 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.41 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 18 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 49.21 அடியாகவும் உள்ளது.
- பேச்சிபாறை, பெருஞ்சாணி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் சாரல் மழை பெய்தது.
- பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிபாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் மழை குறைந்திருந்த நிலையில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.
பேச்சிபாறை, பெருஞ்சாணி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் சாரல் மழை பெய்தது. புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குழித்துறை ஆறு, கோதை ஆற்றின் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உள்ளது. அணைக்கு 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 788 கன அடி தண்ணீரும் உபரிநீராக 1024 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.10 அடியாக உள்ளது. அணைக்கு 448 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 50 அடியை நெருங்குகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.40 அடியாக உள்ளது.
- அருவியில் தண்ணீர் மிதமாகப் பாய்வதால் மதியம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க விதித்திருந்த தடை விலக்கப்பட்டது.
- பள்ளி, கல்லூரி விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து அருவியில் குளித்து உற்சாகமாய் சென்றனர்.
குமரி:
மலையோரப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 6-ம் தேதி ஆயிரம் கன அடி உபரி நீர் மறுகால்வழியாக திறந்து விடப்பட்டது.
இந்த உபரி நீரும், கோதையாற்று தண்ணீரும் சேர்ந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழைய் பெய்யாவிட்டாலும் அருவியில் தண்ணீர்வரத்து குறையவில்லை. இதனால் நேற்று வரை திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமுடன் திரும்பிச்சென்றனர்.
இந்நிலையில் பேச்சிப்பாறை அணையில் தண்ணீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் இயல்பு நிலைக்கு வந்தது. தற்போது தண்ணீர் மிதமாகப் பாய்வதால் இன்று மதியம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதித்திருந்த தடை விலக்கப்பட்டது. இன்று பள்ளி, கல்லூரி விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து அருவியில் குளித்து உற்சாகமாய் சென்றனர்.
மேலும், அவ்வப்போது பெய்துவரும் சாரல் மழையால் திற்பரப்பில் குளு குளு சீசன் நிலவியது.
- இரணியலில் 22 மி.மீ. மழை பதிவு
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழு வதும் கடந்த இரண்டு வாரங்களாக கொட்டி தீர்த்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரணியல் பகுதியில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தக்கலை, குளச்சல், கோழிபோர்விளை, ஆணைக்கிடங்கு, குருந்தன் கோடு, முள்ளங்கினாவிளை, கன்னிமார், பூதப்பாண்டி, குழித்துறை பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தார மாக காணப்பட்டது. அவ் வப்போது மழை பெய்தது.
ஆரல்வாய்மொழி, கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் சாரல் மழை நீடித்தது. திற்பரப்பு அருவிப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்ப தற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர். கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வந்திருந்தனர். அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் சாரல் மழை நீடித்தது.இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. தோவாளை சேனல், அனந்தனார் சேனல், புத்தனார் சேனல்களில் ஷிப்ட் முறையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.66 அடியாக இருந்தது.அணைக்கு 775 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 788 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.63 அடியாக உள்ளது. அணைக்கு 195 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி 1.6, களியல் 5.5, கன்னிமார் 1.4, குழித்துறை 7.8, நாகர்கோவில் 6.6, சுருளோடு 5, தக்கலை 13.2, குளச்சல் 18.4, இரணியல் 22, பாலமோர் 8.4, மாம்பழத் துறையாறு 17.2, திற்பரப்பு 5.4, கோழிப்போர்விளை 20.4, அடையாமடை 7.4, குருந்தன்கோடு 2.8, முள்ளங்கினாவிளை 12.8, ஆணைக்கிடங்கு 16.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.88 அடியாக உள்ளது. அணைக்கு 193 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவில்:
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றாழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. குழித்துறை பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 49.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கன்னிமார், களியல், முள்ளங்கினாவிளை, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவியது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. ஐயப்ப பக்தர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 888 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.83 அடியாக இருந்தது. அணைக்கு 790 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 788 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.88 அடியாக உள்ளது. அணைக்கு 193 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 21 அடியை எட்டியது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 2.4, பெருஞ்சாணி 1, பூதப்பாண்டி 5.2, களியல் 18.6, கன்னிமார் 4.6, கொட்டாரம் 16.4, குழித்துறை 49.4, மயிலாடி 22.4, நாகர்கோவில் 1, சுருளோடு 2, பாலமோர் 5.4, திற்பரப்பு 31.4, ஆரல்வாய்மொழி 4.2, அடையாமடை 6.2, முள்ளங்கினாவிளை 6.8.
- சுற்றுலா பயணிகள் திற்பரப்பு வந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
- சிறுவர்கள் நீச்சல் குளத்தில் ஆனந்தமாக நீராடியதோடு, நீச்சல் அடித்தும் மகிழ்ந்தனர்.
கன்னியகுமரி:
குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தொடர் மழை காரணமாக கடந்த சில நாட்களாக தண்ணீர் அதிக அளவில் கொட்டியது. இது அவ்வப்போது வெள்ளப்பெருக்காக மாற, சுற்றுலா பயணிகள் குளிக்க சில நேரங்களில் தடையும் விதிக்கப்பட்டது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் தினமும் அருவிக்கு நீராட வந்து கொண்டே உள்ளனர். தற்போது அருவியில் மிதமான தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது வருகையும் அதிகரித்து உள்ளது.
அதிலும் விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவில் இருந்தும் பைக், கார், வேன், பஸ் போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு வந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
சிறுவர்கள் நீச்சல் குளத்தில் ஆனந்தமாக நீராடியதோடு, நீச்சல் அடித்தும் மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவையும் சுற்றி பார்த்தனர்.
- நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது.
- பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.38 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து உள்ளது. இருப்பினும் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, அஞ்சுகிராமம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலையில் கன மழை பெய்தது.
இதைத் தொடர்ந்து வானத்தில் கருமேகங்கள் திரண்டு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. நாகர்கோவிலிலும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. புத்தன்அணை, ஆணைக்கிடங்கு, கன்னிமார், நிலப்பாறை பகுதிகளிலும் மழை பெய்தது. நிலப்பாறையில் அதிகபட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. தற்பொழுது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அங்கு அலைமோதி வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.38 அடியாக இருந்தது. அணைக்கு 803 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 785 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.98 அடியாக உள்ளது. அணைக்கு 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருஞ்சாணி-1.6, பாலமோர்-2.4, மயிலாடி-6.4, கொட்டாரம்-5.2, நிலப்பாறை-8.4, கன்னிமார்-1.8, பூதப்பாண்டி-1, நாகர்கோவில்-7, ஆணைக்கிடங்கு-3.2, புத்தன்அணை-1.2.
- பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள முதல் தட்டு பகுதியில் அருவிப் பாறையிலிருந்து சுமார் 100 கிலோ எடை கொண்ட ஒரு பாறைத் துண்டு பெயர்ந்து கீழே விழுந்தது.
- அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள முதல் தட்டு பகுதியில் அருவிப் பாறையிலிருந்து சுமார் 100 கிலோ எடை கொண்ட ஒரு பாறைத் துண்டு பெயர்ந்து கீழே விழுந்தது. இதைக்கண்டு அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் அதிர்ச்சியடைந்து விலகினர். அதே வேளையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து அருவி ஊழியர்கள் விரைந்து வந்து அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களை பாதுகாப்பாக வேறு பகுதிக்கு மாற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, செயல் அலுவலர் பெத்ராஜ், பொறியாளர் தங்கபாய் ஆகியோர் அருவிப்பகுதிக்கு வந்து பாறை உடைந்த பகுதியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் நின்று யாரும் குளிக்கக் கூடாது என்று அறிவுறித்தியதுடன், அப்பகுதியில் தண்ணீர் விழாத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இன்று அந்த பகுதியில் யாரும் குளிக்க வேண்டாம் என்று பேரூராட்சி ஊழியர் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
- திற்பரப்பு அருவி பகுதியிலும் லேசான சாரல் மழை பெய்தது.
- சாரல் மழை பெய்ததையடுத்து அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது
நாகர்கோவில் :
குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று பெருஞ்சாணி அணை பகுதிகளில் மழை பெய்தது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் லேசான சாரல் மழை பெய்தது. அங்கு 7.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.
சாரல் மழை பெய்ததையடுத்து அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.