என் மலர்
நீங்கள் தேடியது "கட்டணம்"
- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
- கன்டெய்னர் கட்டண உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பனியன் ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயத்த ஆடைகளை தயாரித்து கன்டெய்னர்களில் அடைத்து கப்பல் மற்றும் விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கன்டெய்னர் கட்டணம் அபரிமிதமாக உயர்ந்தது. துறைமுக ஊழியர்கள் விடுப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாகவும், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்ததாலும் கன்டெய்னர் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதன்காரணமாக கன்டெய்னர் கட்டணமும் பலமடங்கு உயர்ந்தது. இதனால் திருப்பூரில் இருந்து ஆடைகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதிலும், வெளிநாட்டினர் இறக்குமதி செய்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. பலமடங்கு கன்டெய்னர் கட்டண உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பனியன் ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்தநிலையில் தற்போது கன்டெய்னருக்கான கட்டணம் குறைந்து வருவது ஏற்றுமதியாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் தென்னிந்திய துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் மேற்கு பகுதிக்கு அனுப்பி வைக்க 17 ஆயிரம் டாலர் கட்டணம் இருந்தது. தற்போது 4 ஆயிரம் டாலராக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோல் ஐரோப்பிய நாடுகளுக்கான கன்டெய்னர் கட்டணம் 9 ஆயிரம் டாலரில் இருந்து 4,500 டாலராக குறைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பஞ்சு விலை குறைவு, நூல் விலை குறைவு காரணமாக ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ள நிலையில் சரக்குகளை அனுப்பி வைக்கும் கன்டெய்னர் கட்டணமும் குறைந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில்:
பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா வினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். குமரி மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வளையாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசினார்.
அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் பாரத் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திர ளான பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறை வில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தக்கலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் இரணியல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பேரூர் பாஜக தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் பத்மநாபன் பேரூர் தலைவர் ஸ்ரீகலாமுருகன் மாவட்ட செயலாளர் பிரியா சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணகுமார் மாவட்ட பார்வையாளர் குமார் தாஸ் பொது செயலாளர் வக்கீல் பத்மகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பாஜக தலைவர் பொன் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட் டத்திற்கு குமரி பா. ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டாக்டர் சிவக்குமார், ராஜக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார், கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயஸ்ரீ, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, பாஜக ஒன்றிய செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தாமோதரன் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் செல்லத்துரை, ரமேஷ் முன்னாள் வந்திய கவுன்சிலர் சுகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆசாரிபள்ளம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மேற்கு மாநகர பாஜக தலைவர் சிவசீலன் தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஆன்றோடைல்ஸ்டைனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தில் மாநகர பொதுச்செயலாளர்கள் வேலானந்தன், பிரஜாபதி, பொருளாளர் ராஜுவ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ பிரசாத் மாநகர தொழில் பிரிவு தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் நகர தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் குமாரதாஸ், நகர பார்வையாளர் சிவகுமார் பிரபு, மாவட்ட பிரசார அணி முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், நகர பொதுச்செயலாளர் ஜெனோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச்செயலாளர் பிரதீப்குமார் வரவேற்று பேசினார்.மாவட்ட முன்னாள் தலைவர் பொன் ரெத்தினமணி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சுஜித்திரா, முன்னாள் கவுன்சிலர் விஜயராணி மற்றும் ஜஸ்டின் செல்வகுமார், பகவதியப்பன், ஜெயச்சந்திரன், ராஜன், சூர்யா முருகன், அல்போன்ஸ், ஜாண்சன், டிக்சன், பெருமாள், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
- நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காங்கயம்:
காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 11 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத காங்கயம் சத்யா நகா், தொட்டியபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-
காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா்
- 4 மண்டல அலுவலகங்களும் விரைவில் திறக்கப்படும்
- மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மகேஷ் பேச்சு
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் ஆனந்தமோகன், பொறி யாளர் பாலசுப்பிரமணி யன்,மண்டல தலைவர் கள் செல்வகுமார், ஜவகர், முத்துராமன், அகஸ் டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் மீனா தேவ் அக் ஷயா கண்ணன், அனிலா சுகுமாரன், டி ஆர். செல்வம், நவீன் குமார் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது:-
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தூய்மை பணி யாளர்கள் தட்டுப்பாடு உள்ளது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். அண்ணா விளையாட்டு அரங்கத்தை சீரமைக்க மாநகராட்சி நிதியை ஒதுக்க கூடாது. குடிநீர் வசதி மட்டும் மாநகராட்சியில் இருந்து செய்து கொடுக்க வேண்டும்.
நாகர்கோவில் மாநக ராட்சியில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சிறிய தெருக்களுக்கும் அதிக வரி வசூல் செய்யப்படுகிறது. நாகர்கோவில் மாநகர பகுதி யில் சாலைகளை ஆக்கிர மித்து சந்தை உள்ளது. இதில் உள்ள கடைகளில் தனியார் வாடகை வசூல் செய்து வருகிறார்கள். ஆனால் அதில் உள்ள குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள்.
வறுமை கோடு பட்டி யலில் பல்வேறு குளறு படிகள் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். வறுமை க்கோடு பட்டியலில் உள்ள குளறுபடி காரணமாக பென்ஷன் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படு கிறார்கள். அதை உடனடி யாக சரி செய்ய வேண்டும்.
புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து மாநகர பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளூர், தெங்கம்புதூர் பகுதியில் குடிநீர் கட்ட ணத்தை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசிய தாவது:-
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம், கலெக்டரின் பொது நிதியிலிருந்து தான் சீரமைக்கப்பட்டு வருகிறது. அக்னிபாத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு நடந்த போது சீரமைக்க ப்பட்டது. மாநகராட்சி நிதியிலிருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படவில்லை.
நாகர்கோவில் மாந கராட்சி மண்டல அலுவ லகங்கள் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மாநகராட்சி புதிய அலு வலக கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வருகை தர உள்ளார்.
புதிய கட்டிடத்தில் மாநகராட்சி அலுவலகம் செயல்படும்போது ஆளூர், தெங்கம்புதூர் தற்பொழுது செயல்படும் மாநகராட்சி அலுவலகத்தில்மண்டல அலுவலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வரி விதிப்பில் குளறு படிகள் இருந்தால் அதை சரி செய்ய உடனடி நட வடிக்கை எடுக்கப்படும்.
புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.காண்ட்ராக்டரிடம் போதிய நிதி இல்லாததால் இந்த பணிகள் மெதுவாக நடை பெற்று வருகிறது. தினமும் 300 பணியாளர்கள் பணி யில் ஈடுபட்டால் 2 மாத காலத்திற்குள் அந்த பணியை முடிக்க முடியும்.அந்த குடிநீர் திட்ட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ராமன் புதூர், கணேசபுரம் பகுதியில் தனியார் சந்தைகள் செயல் பட்டு வருகிறது. அந்த சந்தைகளை ஆய்வு செய்து அதில் பிரச்சினைகள் இருந்தால் மாநகராட்சி மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டு அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க ப்படும்.
மாநகர பகுதியில் சாலை சீரமைப்பிற்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதி 52 வார்டு கவுன்சிலர்களுக்கும் பாரபட்சமின்றி சமமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ரூ.10 கோடி நிதி மண் ரோடு சீரமைக்க ஒதுக்கி உள்ளோம்.
52 வார்டுகளில் 13 வார்டு களில் மண் ரோடுகள் இல்லை. மீதமுள்ள அந்த வார்டுகளுக்கு ரூ.10 கோடி நிதி பிரித்தளிக்கப்பட்டு பணிகள் விரைவில் மேற் கொள்ளப்படும்.
தமிழகத்திலேயே நாகர் கோவில் மாநகராட்சிக்கு தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் தொடங்க ப்படும்.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் குடிநீர் கட்ட ணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை. அம்ருத் திட்டம் முடிவடைந்தவுடன் நாகர் கோவில் மாநகரப் பகுதி யிலும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும். அப்போது அனைத்து பகுதிகளுக்கும் ஒரே கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரைக்கு வருகை, புறப்பாடு என தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையிலும், விமான டிக்கெட்டுகள் விற்று தீர்வதாக அதிகாரிகள் தகவல்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டு விடுமுறையை ஒட்டி சென்னையில் விமான சேவை மற்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பண்டிகை கால விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிகம் செல்லக்கூடும் நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.
மதுரைக்கு வருகை, புறப்பாடு என தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடிக்கு 6ஆக இருந்த விமான சேவை தற்போது 8 ஆகவும், கோவைக்கு 16ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5300 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,500 வரை வசூல் செய்யப்படுகிறது.
மதுரைக்கு வழக்கமாக ரூ.3,600 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கோவைக்கு ரூ.13,500 வரையும், திருச்சிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.19,500 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையிலும், விமான டிக்கெட்டுகள் விற்று தீர்வதாக அதிகாரிகள் தகவல் வெளியாகி உள்ளன.
- சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக வருகிற பிப்ரவரி 4,11,18 மற்றும் 25-ந் தேதிகளில் இயக்கப்படும்.
- மறுமார்க்கமாக வருகிற பிப்ரவரி 5,12,19 மற்றும் 26-ந் தேதிகளில் இயக்கப்படும்.
தஞ்சாவூர்:
தெற்கு ரெயில்வே வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
எர்ணாகுளம் -வேளாங்கண்ணி (வண்டி எண்:06035) இடையே மதியம் 1.10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக (4 சேவைகள்) வருகிற பிப்ரவரி 4,11,18 மற்றும் 25-ந் தேதிகளில் (சனிக்கிழமைகள்) இயக்கப்படும்.மறுமார்க்கமாக வேளாங்கண்ணி-எர்ணாகுளம் (06036) இடையே மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக (4 சேவைகள்) வருகிற பிப்ரவரி 5,12,19 மற்றும் 26-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்) இயக்கப்படும்.
இதுவரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு கட்டண ரெயில் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டில் ரூ.70 லட்சம் லாபம்
- சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் போது ஒரு சில குழுக்களுக்கு தள்ளுபடி
நாகர்கோவில், பிப்.16-
குமரி மாவட்ட பஞ்சா யத்து கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் சிவக்குமார், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜான்சிலின் விஜிலா உள்பட கவுன்சி லர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தலைவர் மெர்லியன்ட்தாஸ் பேசிய தாவது:-
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலமாக இதுவரை எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் உரத் தட்டுப்பாடு உள் ளது. அதை சமாளிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் போது ஒரு சில குழுக்களுக்கு தள்ளுபடி செய்யப்பட வில்லை. குழந்தை தொழி லாளர்கள் குமரி மாவட் டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இது தொடர்பாக அதிகாரிகள் என்ன நடவ டிக்கை எடுத்து உள்ளார்கள். செங்கல்சூளைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக புகார்கள் வருகிறது. ஆவின் பாலகங்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படு கிறது. தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம், களியக்காவிளை பஸ் நிலையங்களில் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவ தும் பல்வேறு இடங்களில் நாய் தொல்லை உள்ளது.இதனால் விபத்துகளில் உயிரிழப்புகள் கூட நடந்துள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அதிகாரிகள் பேசிய தாவது:-
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.440 கோடி பயிர் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்டது. அதில் கடந்த ஜனவரி மாதம் வரை ரூ.160 கோடிக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மீதமுள்ள நிர்ணயிக்கப்பட்ட பயிர் கடன் தொகை முழுமையாக வழங்கப்படும். பொது சேவை மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு பட்டா, சிட்டா உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை.
ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் யூரியா தட்டுப்பாடு உள்ளது. அந்த யூரியா தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் நபர்களுக்கு ரூ.363 கோடியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 200 பேருக்கு தள்ளுபடி பட்டியல் தயார் செய்யப்பட்ட அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கூட்டு றவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை முறையாக மற்றும் தகுதியின் அடிப்படையில் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் இது தொடர்பான புகார்கள் இருக்கின்றன. அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள செங்கல் சூளை உள்பட பல கடை களிலும் குழந்தை தொழி லாளர்கள் உள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்து உள்ளோம். குழந்தை தொழிலாளர்கள் அங்கு வேலை பார்க்கவில்லை.
குமரி மாவட்டத்தில் தினமும் 21 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து 6000 லிட்டர் பால் கிடைக்கப்பெற்ற நிலையில் திண்டுக்கலில் இருந்து 15,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பாலகங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினை பொறுத்தமட்டில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் உழவர் சந்தை, கலெக்டர் அலுவலகம் உட்பட 9 இடங்களில் ஆவின் கட்டுப்பாட்டில் பாலங்களும் 26 தனியார் பாலங்களும் செயல் பட்டு வருகிறது. கடந்த 2021- 22 ம் ஆண்டில் ரூ.70 லட்சம் லாபம் கிடைத்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் செயல்பட்ட ஆவின் பாலகம் கொரோனா காலத்தில் மூடப்பட்டது. மீண்டும் அங்கு ஆவின் பாலகம் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற் பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதிதாக தொழிற் பள்ளிகள் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழிற் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீடிப்பு வழங்கவும் கூடுதல் அலகுகள் சேர்க்கவும் 28.02.2023 வரை விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அங்கீகாரம் பெற ஒரு தொழிற் பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.
என்.இ.எப்.டி மூலம் தொழிற்பள்ளி பணம் ( விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ) செலுத்தும்போது தொழிற்பள்ளியின் வங்கிக் கணக்கிலிருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் எந்த தொழிற் பள்ளிகளுக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை வங்கி ஸ்டேட்மெண்ட் -ல் கண்டறிய ஏதுவாக, தாளாளர் பெயரிலுள்ள வங்கிக் கணக்கிலிருந்து ஆர்.டி.ஜி.எஸ், என்.இ.எப்.டி மூலம் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற் பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள புரோஸ்பெக்டஸ்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.02.2023. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருச்சி மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் விபரம் பெறலாம்.
தொலைபேசி எண் :0431-2422171 மின்னஞ்சல் :tnjadtrg2018@gmail.com ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. ஆட்சியில் 2017 ஜூனில், அரசாணை வெளியிடப்பட்டு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது.
- பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
திருப்பூர் :
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறையாக பதிவுத்துறை உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் நிலத்தின் சந்தை மதிப்பைக் காட்டிலும், வழிகாட்டி மதிப்பு மிகவும் குறைவு. பெருநகரங்களை யொட்டியுள்ள புறநகர் பகுதிகளில் வழிகாட்டி மதிப்பை விட சந்தை மதிப்பு 10 மடங்கு அதிகம். இதன் காரணமாக பத்திரப்பதிவு களில் கருப்புப் பணம் பெருமளவு கை மாறுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் 2017 ஜூனில், அரசாணை வெளியிடப்பட்டு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒரு சதவீதமாக இருந்த பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்குமான இடைவெளி மேலும் அதிகரித்தது.
கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அப்போது பல ஆயிரம் கோடி கருப்பு பணம் வைத்திருந்த பலரும் அந்த பணத்தை வைத்து தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களை பேசி முடித்து ஒப்பந்தம் போட்டிருந்தனர். அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்காகவும், அரசின் வளர்ச்சி பணிகளுக்காக, நில ஆர்ஜிதத்துக்குத் தரப்படும் இழப்பீடை குறைக்கவும், வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடந்த 20ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் உயர்த்தியும், பதிவுக்கட்ட ணத்தை நான்கில் இருந்து 2 சதவீதமாக குறைத்தும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு எல்லா தரப்பிலும் கடும் அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பணப்புழக்கத்தை குறைத்து அரசின் வருவாயை அதிகரிக்க, தற்போதுள்ள சந்தை மதிப்புக்கேற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது அவசியம். இப்போதும் கடந்த 2017ல் குறைத்த 33 சதவீதம் வழிகாட்டி மதிப்புதான் மீண்டும் உயர்த்தப்படுகிறது. அதேநேரத்தில் அப்போது ஒன்றிலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்ட பதிவுக்கட்டணம் இப்போது 2 சதவீதமாக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு மக்களின் சுமையை குறைத்திருப்பதை போல் இருந்தாலும் உண்மையில் பத்திரப்பதி வுக்கு முன்பை விட கூடுதல் தொகையையே செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக தற்போது 666 ரூபாயாக உள்ள ஒரு சதுர அடி வழிகாட்டி மதிப்பு, இனி ஆயிரம் ரூபாயாக உயரும். ஒரு சென்ட் நிலத்துக்கு இதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணம் சேர்த்து பதிவு செலவை கணக்கி ட்டால் ரூ.7,092 அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும். இனிமேல் அரசு அமைத்துள்ள குழு ஆய்வு செய்து நிலத்திற்கு புதிய வழிகாட்டி மதிப்பை பரிந்துரை செய்தாலும் பதிவு கட்டணம் இதே 2 சதவீதமாகவே தொடர வாய்ப்புள்ளது. முன்பு குறைத்த வழிகாட்டி மதிப்பை கூட்டிய தமிழக அரசு, முந்தைய அரசு மூன்று சதவீதம் கூட்டிய பதிவுக்கட்ட ணத்தை மீண்டும் ஒரு சதவீதமாகக் குறைப்பது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.330 ஆக நிர்ணயம்
- கட்டண உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
நாகர்கோவில் :
தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதர சுங்கச்சாவடிகளில் செப் டம்பர் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகி றது. இதில் டோல் கேட் கட்டணம் ரூ.5 முதல் ரூ.55 வரை உயர்த்தி வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை எண்: 944ல் (பழைய 47பி சாலை)நாகர்கோவில் காவல்கிணறு பிரிவில் திருப்பதிசாரம் அருகே அமைக்கப்பட் டுள்ள சுங்கச்சாவடியில் கட்ட ணம் உயர்த்தப்பட்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி கார், ஜீப், வேன் அல்லது இலகுரக வாகனம் ஒருவழி முறை பயணம் செய்ய ரூ.40, வாகனம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய கட்டணம் ரூ.60, வாகனம் ஒரு மாதத்திற்கு 50 தடவை ஒரு வழிமுறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர கடவு சீட்டு கட்ட ணம் ரூ.1375, சுங்கச்சாவடி மாவட்ட எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு ஒருவழிமுறை பயண கட்டணம் ரூ.20 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலகுரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாக னம், மினி பஸ் போன்றவற் றுக்கு ஒருவழி முறை பயணம் செய்ய கட்டணம் ரூ.65, வாக னம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய கட்டணம் ரூ.100, மாதாந்திர கடவு சீட்டு கட்டணம் ரூ.2225, மாவட்ட எல்லைக்கு உட்பட்ட வாகன கட்டணம் ரூ.35 ஆகும்.
பஸ் அல்லது டிரக் இரண்டு அச்சுகள் ஒருவழி முறை பயணத்திற்கு ரூ.140, வாகனம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய ரூ.210, மாதாந்திர கடவுசீட்டு கட்டணம் ரூ.4655, மாவட்ட எல்லைக்குள் ஒருவழிமுறை கட்டணம் ரூ.70 ஆகும்.
3 அச்சு கொண்ட வணிக வாகனங்கள் ஒருவழிமுறை பயணம் செய்ய ரூ.150, வாகனம் அதே நாளில் திரும்ப பயண கட்டணம் ரூ.230, மாதாந்திர கடவு சீட்டு ரூ.5080, மாவட்ட எல் லைக்குள் பயண கட்டணம் ரூ.75 ஆகும். பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்தி ரங்கள், மண் ஏற்றி செல்லும் வாகனம், 4 முதல் 6 அச்சுகள் கொண்ட வாகனம் ஒரு வழி முறை பயணம் செய்ய கட்ட ணம் ரூ.220, வாகனம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய ரூ.330, மாதாந்திர பயண சீட்டு ரூ.7305, மாவட்ட எல்லைக்குள் பயண கட்டணம் ரூ.110.
அதிக அளவு கொண்ட வாகனம் 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண் டவை ஒருவழிமுறை பயண கட்டணம் ரூ.265, வாகனம் அதே நாளில் திரும்ப பயண கட்டணம் ரூ.400, மாதாந்திர கடவு சீட்டு ரூ.8890, மாவட்ட எல்லைக்குள் பதிவு செய்யப் பட்ட வாகனத்திற்கு ரூ.135 ஆகும்.
வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங் களுக்கு 2023-24ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.330 ஆகும். இது ஏற்கனவே ரூ.315 ஆக இருந்தது. தற்போது ரூ.15 அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மாதாந்திர கட்டணம் ரூ.425 உயர்த்தப்பட்டது
- தமிழகத்தில் 29 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
நாடு முழுவதும் சுங்கச்சா வடிகளில் கட்ட உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 29 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தேரேக்கால்புதூர் பகுதியில் சுங்க சாவடி உள்ளது. நெல்லை, மதுரை போன்ற பெருநகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக நாகர்கோவில் நகருக்கு வருகிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.கட்டண உயர்வு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்துள் ளது. இதையடுத்து கார், வேன், பஸ் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டணம் வசூல் செய் யப்பட்டது.
கார், வேன், ஜீப், இலகு ரக வாகனங்களுக்கு ஏற்க னவே ஒருமுறை பயணிக்கு ரூ.40 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.திரும்ப பயணிக்க ரூ.60 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.தற்பொழுது இந்த கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் ஏற்க னவே ரூ.1310 வசூல் செய்யப் பட்டுள்ள நிலை யில் தற்போது ரூ.1375 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகன வகைகள், இலகு பொருள் வாகனங்கள் மினிபஸ் ஆகியவற்றிற்கு ஒருமுறை பயணிக்குரூ. 65 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந் தது. தற்போது அந்த கட்டணம் மாற்றம் செய் யப்படவில்லை. திரும்ப பயணிக்க ரூ.95 வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டணம் தற்பொழுது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாதாந்திர கட்டணம் ரூ.2115-ல் இருந்து ரூ.2225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பஸ், லாரிகளுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.135-லிருந்து ரூ.140 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. திரும்ப பயணிக்க ரூ. 200-ல் இருந்து ரூ.210 ஆகவும் மாதாந்திர பயண சீட்டு ரூ.4435-லிருந்து ரூ.4665 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக வாகனங்களுக்கான கட்டணம் ஒருமுறை பயணிக்க ரூ.145-ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட் டுள்ளது. திரும்ப பயணிக்க ரூ.220 லிருந்துரூ. 230 ஆகவும் மாதாந்திர பயண கட்டணம் ரூ.4835-ல் இருந்து ரூ.5080 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பல அச்சுகள் கொண்ட கனரக கட்டுமான எந்தி ரங்கள் மண் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஒரு முறை கட்டணம் ரூ.210-லிருந்து ரூ.220 ஆகவும் திரும்ப பயணிக்க ரூ.315-லிருந்து ரூ.330 ஆகவும் மாதாந்திர கட்டணம் ரூ.6950-ல் இருந்து ரூ.7305 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.அதிக அளவு கொண்ட வாகனங்கள் ஒருமுறை பயணிக்கரூ. 255-லிருந்து ரூ.265 ஆகவும் திரும்ப பயணிக்க ரூ.380-லிருந்து ரூ.400 ஆகவும் மாதாந்திர பயண கட்டணம் ரூ.8465- லிருந்து ரூ. 8,890 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.இதையடுத்து வாகனங்களில் புதிய கட்டணத்தில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டது. கார், வேன், ஜீப், இலகு ரக வாகனங்களுக்கு கட்டண உயர்வில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இலகு ரக வணிக வாகன வகைகள், இலகு பொருள் வாகனங்கள் மினி பஸ்களுக்கான ஒரு முறை கட்டணம் மாற்றம் செய்யப்படவில்லை. மற்ற அனைத்து கட்டணங்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.425 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- தற்போது இறுதியாண்டு கட்டணமும், இ-தேர்வு கட்டணமும் வழங்கப்பட்டது.
- மாணவ- மாணவிகளுக்கு சுமார் ரூ. 13 லட்சம் வரை கல்வி உதவி தொகை வழங்கல்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஜோதி அறக்கட்ட ளை சார்பில் விளிம்புநிலை குடும்பங்களை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அலுவ லகத்தில் நடைபெற்றது.
இதில் தஞ்சையில் உள்ள தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் தந்தையை இழந்த மாணவிக்கு ஏற்கனவே 2 ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதியாண்டு கட்டணமும், இ-தேர்வு கட்டணமும் வழங்கப்பட்டது.
இதே போல், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தை சேர்ந்த தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிக்கும் கல்விக்கட்டணம் வழங்கப்பட்டது.
மேலும், சலவை தொழிலாளி ஒருவருக்கு சுயமாக தொழில் செய்ய புதிய இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்:-
கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட அறக்கட்டளை தற்போது வரை மாணவ- மாணவிகளுக்கு சுமார் ரூ. 13 லட்சம் வரை கல்வி உதவி தொகையாகவும், விளிம்புநிலை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்த வரையில் சுமார் ரூ. 34 லட்சம் வரையில் செலவிடப்பட்டுள்ள தாகவும், விளிம்புநிலை மக்களின் துயர் துடைக்கும் வகையில் சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபடும் என்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.