search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெங்கம்புதூர்"

    • மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
    • தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், தெங்கம் புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்க மங்கலம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழ மை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., மேல மணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்ம புரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், அனத்தங்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன் கோட்ைட, காரவிளை, பருத்திவிளை, வைராக்குடி, கணபதிபுரம், தெக்கூர்,

    தெக்குறிச்சி, காக்காதோப்பு, பழவிளை, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரிய மாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு மற்றும் ராமவர்மபுரம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை நாகர்கோவில் மின் வினி யோக செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
    • சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள வடக்குஅஞ்சு குடியிருப்பு சாஸ்தான் கோயில் விளையை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனுஷ் (23), ஜெகன் (35), வினோத் (24), சுயம்புலிங்கம் என்ற லிங்கம் (30) ஆகியோர்க்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நி லையில் நேற்று முன்தினம் இரவு விஷ்ணு தனது வீட்டின் அருகில் உள்ள கோவில் மடத்து சொத்தில் வைத்து மது அருந்தி கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த தனுஷ், ஜெகன், வினோத், சுயம்புலிங்கம் என்ற லிங்கம் ஆகியோர் விஷ்ணுவை தகாத வார்த்தைகள் பேசி, கத்தியால் குத்தினர்.

    இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் 4 பேரும் அங்கி ருந்து தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த விஷ்ணு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

    அங்கிருந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விஷ்ணுவை தாக்கிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பலன் அளிக்கவில்லை
    • உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் டாஸ் மாக் கடை முன்பு கடந்த மாதம் 31-ந்தேதி 70 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை யில் இருந்த முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தெங்கம்புதூர் கிராம நிர்வாக அதிகாரி சரஸ்வதி நேற்று சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்ற கோணங்க ளில் விசாரணை செய்து வருகின்றனர்.

    இறந்து போன முதிய வரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிண வறையில் வைக்கப்பட்டுள்ளது.

    • சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சம்பவத்தன்று வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

    மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை‌. உடனே பதறிப்போன கண்ணன் இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருசக்கர வாகனம் திருட்டுப் போன இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஏதாவது திருடனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று விசாரணை செய்தனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் இருசக்கர வாகனத்தில் மேலே ஒருவன் ஏறி இருந்து 2 நபர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தப் பதிவை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட்செல்வசிங் வழக்குப்பதிவு செய்து. இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடர்களை தேடி வருகின்றனர். வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாயமான மாணவி பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு பயின்று வருகிறார்.
    • சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனுஷா (வயது 19) நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் காலை அனுஷா வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். மாலையில் அனுஷா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவர் தந்தை மணி அனுஷாவை பல இடங்களிலும், உறவினர் வீட்டிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

    • இரவு 10.15 மணியளவில் அவருடைய மனைவியிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
    • உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள குளத்துவிளையை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 34).

    இவர் கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நண்பருடைய திருமணத்தில் கலந்து விட்டு அலெக்சாண்டர் வீட்டிற்கு வந்து தூங்க சென்றார். இரவு 10.15 மணியளவில் அவருடைய மனைவியிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

    உடனே அவரது தந்தை ஜார்ஜ்மெய்யேல் ஒரு ஆட்டோவை பிடித்து நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அலெக்சாண்டரை பரிசோதித்த டாக்டர்கள் அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜார்ஜ் மெய்யேல் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் ஆஷாஜெபகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அலெக்சாண்டரின் உடலை பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேயர் மகேஷ் தகவல்
    • 100 கோவில்களை சீரமைக்க ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோவில்கள் திருப்பணிக்கு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் கோவில்கள் திருப்பணிகள் செய்வதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது. 100 கோவில்களை சீரமைக்க ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில்களில் புரணைப்பு பணிகளை மேற் கொள்வது தொடர்பாக நாகர்கோவில் மேயரும் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் கிழக்கு மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் உள்ள பல் வேறு கோவில்களில் நடை பெற்று வரும் பணி களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் இன்று தெங்கம் புதூர் பகுதியில் உள்ள கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    தெங்கம் புதூர் தானு லிங்க சுவாமி கோவில், தெங்கம்புதூர் மறுகால் தலை கண்டம் சாஸ்தா கோயில்களில் அவர் ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்ட றிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

    குமரி மாவட்டத்தில் கோயில்களை சீரமைக்க ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் கோவில்களில் புரணைப்ப பணிகள் நடந்து வருகிறது. தெங்கம் புதூர் தானூலிங்கசாமி கோவிலில் ரூ.20 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதே போல் மறுகால் தலை கண்டன் சாஸ்தா கோவிலில்ரூ. 15 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

    கோவில்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப் பட்ட பிறகு புரணைப்பு பணிகள் அனைத்தும் நடைபெறும். இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×