என் மலர்
நீங்கள் தேடியது "கனடா பிரதமர்"
- கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரியில் ராஜினாமா செய்தார்.
- கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஒட்டாவா:
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றி பெற்றதாக அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்க உள்ளார்.
மார்க் கார்னி 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத வாக்குகளாகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (11,134 வாக்குகள்), கரினா கோல்ட் (4,785 வாக்குகள்), பிராங்க் பேலிஸ் (4,038 வாக்குகள்) பெற்றிருந்தனர்.
இந்நிலையில், கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், மார்க் கார்னி பிரதமராக பதவியேற்றுள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சரக்கு போக்குவரத்து மற்றும் மக்களின் பயணத்தை எளிதாக மாற்ற நடவடிக்கை.
- இரு நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க இது வழிவகுக்கும்.
பாலி:
கொரோனா தொற்று காலத்தில் இந்தியா-கனடா இடையேயான விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்துள்ள நிலையில், கனடாவில் உள்ள பெரிய எண்ணிக்கையிலான புலம் பெயர்ந்த இந்திய சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு தரப்பு தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
விசா மற்றும் பரஸ்பர சட்ட உதவி ஒத்துழைப்பை மேம்படுத்துவது, இரு நாட்டு மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்து குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாலி நகரில் நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
இந்தியா-கனடா இடையே ஒரு ஒப்பந்தம் ஒன்றை அறிவிப்பதாகவும், அது எங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் அதிக அளவில் விமானங்களை இயக்க உதவும் என்றும் அப்போது அவர் கூறினார். இரு நாடுகளுக்கு இடையே சரக்கு போக்குவரத்து மற்றும் மக்களின் பயணத்தை வேகமாகவும் எளிதாகவும் மாற்றவும், பரஸ்பரம் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தோ-பசிபிக் பகுதியில் கனடா தனது நீண்ட கால ஈடுபாட்டை வலுப்படுத்துவதுடன் பெரிய முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- 1980களில் இந்தியாவில் காலிஸ்தான் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது
- வெறுப்புணர்வுக்கும், வன்முறைக்கும் நாங்கள் எதிரானவர்கள்
சுதந்திர இந்தியாவில், 1940களில், வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கென தனி நாடு கேட்டு பிரிவினைவாதிகள் போராட தொடங்கினர். தங்களுக்கென "காலிஸ்தான்" என பெயரிட்டு ஒரு தனி நாடு கேட்டு போராடி வந்த இவர்களின் போராட்டம், 1980களில் தீவிரமடைந்தது. பிறகு, இந்தியாவில் நடந்த தொடர் காவல்துறை நடவடிக்கைகளின் பலனாக இந்தியாவில் இந்த அமைப்பு நசுக்கப்பட்டது.
ஆனால், அவ்வப்போது சில அயல்நாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்ந்து தங்கள் பிரச்சாரத்தை தொடர்கின்றனர். குறிப்பாக, கனடா நாட்டில் அவர்களின் இந்தியா எதிர்ப்பு சமீப காலமாக தீவிரம் அடைந்திருக்கிறது.
இந்நிலையில், ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாட்டின் 2-நாள் மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்திருந்தார்.
கனடாவில் அதிகரித்துள்ள இந்தியர்களுக்கு எதிரான காலிஸ்தான் செயல்கள் குறித்தும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:
"நானும் உங்கள் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த 2 விஷயங்களை குறித்தும் சில வருடங்களாக பேசி வருகிறோம். கருத்து சுதந்திரம் மற்றும் அமைதிவழி போராட்டத்திற்கான சுதந்திரம், எங்களுக்கு முக்கியமானது. அதே சமயம், வெறுப்புணர்விற்கும், வன்முறைக்கும் நாங்கள் எதிரானவர்கள். அவற்றை எதிர்க்க நாங்கள் எப்போதும் முன் நிற்போம்."
"ஒரு சமூகத்தை (சீக்கிய) சேர்ந்த சிலரின் நடவடிக்கை ஒரு ஒட்டு மொத்த சமூகத்தையோ அல்லது ஒரு நாட்டையோ (கனடா) குறிப்பதாக பொருளில்லை. ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பதன் அவசியம் குறித்தும் நாங்கள் இருவரும் கருத்துக்கள் பரிமாறிக்கொண்டோம்," என்று ட்ரூடோ கூறினார்.
கனடாவின் வேன்கூவர் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை பூட்ட போவதாக "நீதிக்காக சீக்கியர்கள்" எனும் அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதற்கு அடுத்த நாள், கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள சர்ரே நகரத்தில் உள்ள ஸ்ரீமாதா பாமேஷ்வரி துர்கா கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்த முயன்றனர்.
இப்பின்னணியில், ட்ரூடோவின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
- ஜெலன்ஸ்கியுடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா பாராளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.
- கனடா பாராளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஒட்டாவா:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த 22-ந்தேதி கனடா வந்திருந்தார். அவருடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா பாராளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.
இதனிடையே அவர் 2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர் எனவும் தகவல் பரவியது.
இதற்கு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த விவகாரம் கனடா பாராளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு வருந்துகிறேன்.
அப்போதைய சூழலை அறியாமல் யூத மக்களின் நினைவுகளை மீறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
- கனடா பிரதமர் ட்ரூடோ இந்தியா மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்
- செப்டம்பர் 21ல், இந்தியா, கனடா குடிமக்களுக்கு விசா வழங்குதலை தடை செய்தது
கடந்த ஜூன் மாதம், கனடாவின் மேற்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இந்தியாவை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திப்சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார்.
இதையடுத்து, இந்த கொலையில் இந்திய அரசின் உளவு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு தரப்பு உறவுகள் நலிவடைய தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக இந்தியா, கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த "விசா" (visa) எனப்படும் நாட்டிற்குல் நுழையும் அனுமதியை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக கூறி, கடந்த செப்டம்பர் 21 அன்று ரத்து செய்தது.
இந்நிலையில் இன்று, இந்தியாவிற்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு அனுமதி வழங்கும் எலக்ட்ரானிக் விசா (e-visa) எனப்படும் இணையவழி அனுமதி வழங்கல் முறையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.
கிட்டத்தட்ட 2 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த அனுமதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கனடா குடிமக்களுக்கு இந்தியா சில மாதங்கள் விசாவை நிறுத்தி வைத்தது
- தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் என கனடா மக்கள் அஞ்சியதாக ட்ரூடோ கூறினார்
இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி துவக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினை அமைப்பு. இதன் முக்கிய தலைவராக இருந்தவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார் (45).
கடந்த ஜூன் மாதம், கனடாவின் வேன்கூவர் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டு தலத்திற்கு வெளியே ஹர்திப் துப்பாக்கி ஏந்திய இருவரால் சுட்டு கொல்லப்பட்டார்.
இப்பின்னணியில் கடந்த செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஹர்திப் சிங் கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக அறிவித்தார்.
பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த நல்லுறவை பின்னுக்கு தள்ளியது. கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் குடிமக்களுக்கு சில மாதங்களுக்கு இந்தியா விசா வழங்குதலை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது:
இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் மட்டத்திலும் அமைதியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது போதாது என நாங்கள் கருதினோம். எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெற கூடாதென வலியுறுத்தும் விதமாக ஒரு அழுத்தமான நடவடிக்கை எடுக்க விரும்பினோம். இங்கு கனடாவில் பலர் தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் எனும் அச்சத்தில் வாழ்ந்து வந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நாங்கள் செயல்பட வேண்டி இருந்தது. அதன் காரணமாகவே எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு இது போன்ற சம்பவங்களில் பங்குள்ளது என உரக்க கூறினோம். இதன் மூலம், இது போன்ற சம்பவங்களில் இந்தியா ஈடுபட்டாலோ அல்லது ஈடுபட நினைத்தாலோ அது தடுக்கப்படும் என உறுதி செய்து கொள்ள விரும்பினோம்.
இவ்வாறு ட்ரூடோ தெரிவித்தார்.
- அனைத்து குடிமக்களையும் பாதுகாக்கும் அடிப்படை உறுதிப்பாடும் பின்பற்றப்படுகிறது.
- நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
டொரண்டோ:
கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் 18-ந் தேதி காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களான கரண் பிரார், கமல்பிரீத் சிங், கரன்பிரீத் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:-
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. இங்கு வலிமையான, சுதந்திரமான நீதித்துறை செயல்படுகிறது. அனைத்து குடிமக்களையும் பாதுகாக்கும் அடிப்படை உறுதிப்பாடும் பின்பற்றப்படுகிறது.
நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 3 பேர் கைது விவகாரத்தை தாண்டியும் விசாரணை நடக்கும். நிஜ்ஜார் கொலையை தொடர்ந்து கனடாவில் உள்ள சீக்கியர்கள் பாதுகாப்பில்லாத நிலையை உணர்ந்தனர். இருப்பினும், ஒவ்வொரு கனடா குடிமகனும் பாதுகாப்பாக வாழ அடிப்படை உரிமை இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடி காரணமாக ஜஸ்டின் ட்ரூடோராஜினாமா செய்ததாக தகவல்
- அக்டோபரின் பிற்பகுதியில் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது.
கனடா நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி மற்றும் சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 9 ஆண்டுகளாக வகித்து வரும் கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
ட்ரூடோவின் விலகல், அக்டோபரின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியிடம் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
- பாராளுமன்றத்திற்கும் மீண்டும் போட்டியிடப்போவதில்லை.
- அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி.
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் விலகினார். அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா ஆனந்த் உள்பட 9 பேர் களத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த், தான் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, பிரதமர் பதவிப் போட்டியில் இருந்து விலகியுள்ளேன். மேலும் பாராளுமன்றத்திற்கும் மீண்டும் போட்டியிடப்போவ தில்லை. தனக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி. என்னை எம்.பி.,யாக்கிய ஓக்வில்லி தொகுதி மக்களுக்கு உண்மையாகவே நன்றியுடன் இருக்கிறேன். கல்வித்துறைக்குத் திரும்புவதன் மூலம் எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க உள்ளேன் என்றார்.
- டாக்டரான அவர் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார்.
- ரூபி தல்லா 3 முறை எம்.பியாக இருந்துள்ளார்.
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகியதையடுத்து புதிய பிரதமர் வருகிற மார்ச் மாதம் தேர்வு செய்யப்படுகிறார். இதில் பலர் களத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்திய வம்சாவளி பெண் எம்.பியான ரூபி தல்லா அறிவித்துள்ளார். டாக்டரான அவர் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார். ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த ரூபி தல்லா 3 முறை எம்.பியாக இருந்து உள்ளார்.
இதற்கிடையே ரூபி தல்லா கூறும்போது, கனடாவில் 5 லட்சம் பேர் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. புலம்பெயர்ந்தோர் நம் நாட்டை மகத்தானதாக கட்டியெழுப்ப உதவியிருப்பதை நன்கு அறிவேன்.
ஆனால் மனிதர்கள் கடத்தி வரப்படுவதை நாம் தடுக்க வேண்டும். கனடாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொருவரையும் நான் நாடு கடத்துவேன். இப்போது தொடங்கி கனடா மீண்டு வருகிறது என்றார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா்.
இந்த தொடா் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சட்டமாகிவிட்டால், கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது என்று ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவும் ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.
- ஜஸ்டீன் ட்ரூடோ கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார்.
ஒட்டாவா :
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடல் நலக்குறைவால் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவரின் இறுதி சடங்கு லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவும் ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.
இந்த நிலையில் ராணியின் இறுதி சடங்குக்கு முன்பாக ஜஸ்டீன் ட்ரூடோ லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பியானே வாசித்தபடி மகிழ்ச்சியாக பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ஜஸ்டீன் ட்ரூடோ கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார்.
கனடா நாட்டினர் பலரும் சமூக வலைத்தளங்களில் ஜஸ்டீன் ட்ரூடோவை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் "ராணியின் மறைவுக்கான துக்கத்தில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது அவமானம்" என குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் இது ஒரு சாதாரண விஷயம் என்றும் வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்பட்டதாகவும் சிலர் ஜஸ்டீன் ட்ரூடோவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.