search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலிடெக்னிக்"

    • 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள்.
    • காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே முதலார் பகுதியை சேர்ந்தவர் கிப்சன் (வயது 19). இவர் நாகர்கோவில் கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 16-ந்தேதி கிப்சன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள். இதில் கிப்சன் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கிப்சன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நேசமணிநகர் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கிப்சனை தாக்கியவர்கள் குறித்த கும்பல் அடையாளம் தெரிந்த நிலையில் போலீ சார் 3 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 3 பேரிடம் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. கிப்சனை எதற்காக தாக்கினார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் தலை மோதியதால் உயிர் இழந்த சோகம்
    • பாலிடெக்னிக் மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் புனித சவேரியார் தெருவை சேர்ந்தவர் ஜோஸ் ராஜ். கடலில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சகாய அஜய் (வயது 22). வெள்ளமோடியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2- ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று பிற்பகல் சகாய அஜய் தனது மோட்டார் சைக்கிளில் குளச்சல் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார். மோட்டார் சைக்கிள் மண்டைக்காட்டை கடந்து கூட்டுமங்கலம் பகுதியில் செல்லும்போது எதிர்பாராமல் நிலை தடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்குளானது சகாய அஜய் சாலையில் உருண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சகாய அஜய் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து அவரது தாய் ஜூலியட் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக் டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்து பாலிடெக்னிக் மாணவர் பலியான சம்பவம் கடியபட்டணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜபாளையம் ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் 60-வது ஆண்டு விழா நடந்தது.
    • இதில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழில் நுட்பக் கல்லூரியின் 60-வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா தலைமை தாங்கினார். ராம்கோ கல்வி குழுமங்களின் முதன்மை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை முதல்வர் சீனிவாசன் சமர்பித்தார். மாணவர் தலைவர் நிர்தேவ் குமார் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும், மதுரை கோட்ட ரெயில்வே மூத்த முதுநிலை பொறியாளருமான வில்லியம் ஜாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • தனியார் பாலிடெக்னிக்கில் ரூ.41 ½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கல்லூரி நிர்வாக குழு தலைவர் சுதர்சன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் எங்களது கல்லூரியில் 2017-18, 2019-20 ஆகிய ஆண்டின் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை ஆய்வு செய்த போது கல்லூரியில் கணக்காளராக பணிபுரிந்த சிவகாசி செங்கமலநாச்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஜோசப் லயோலா (47) மற்றும் சிவகாசி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த செல்வசுதா (35) ஆகியோர் ரூ.48 லட்சத்து 5 ஆயிரத்து 863 மோசடி செய்துள்ளனர்.

    இது தொடர்பாக 2 பேரிடமும் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஜோசப் லயோலா ரூ.6 லட்சத்தை திருப்பி கொடுத்து விட்டார். மீதமுள்ள 41 லட்சத்து 51 ஆயிரத்து 863 ரூபாயை 2 பேரும் மோசடி செய்து விட்டனர் என கூறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பணம் மோசடி செய்த ஜோசப் லயோலா, செல்வசுதா ஆகிய 2 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×