என் மலர்
நீங்கள் தேடியது "மின்மாற்றி"
- செம்பு கம்பியின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.
- மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த செம்புக்கம்பி திருடு போனது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் காரங்குடா செல்லும் சாலையின் இடதுபுறத்தில் சுடுகாடு உள்ளது.
இதன் அருகே விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகள் உள்ளன.
இப்பகுதியில், விவசாயிகளின் மின்மோட்டார்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு மின் வாரியம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவதன்று அதிகாலை இப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.
இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த செம்புக்கம்பி (காயில்) திருட்டுப்போனது தெரியவந்தது.
இதன்மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து நாடியம் உதவி மின் பொறியாளர் சிவசங்கர் சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் மின்மாற்றியில் செம்புக்கம்பி களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை.
- மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மின்சாரத்தை தடை செய்து மின்மாற்றியை சீரமைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர், பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்மாற்றி தொடர் மழையினால் பிடிமானம் இழந்து அருகே உள்ள சுவற்றின் மீது சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை, தகவல் அறிந்த பல்லடம் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் அந்தப் பகுதியில் மின்சாரத்தை தடை செய்து, உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மின்மாற்றியை சீரமைத்தனர்.
மின்மாற்றி அருகே வீடுகள் எதுவும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.
- திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.
- பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூரில் ரூ.18 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 110 கிலோவாட் திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் மற்றும் துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள துறைமங்கலம் 110 கிலோவாட் துணை மின் நிலையத்தில் ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 16 மெகாவாட் அதிக திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து துணை மின் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றியால் பெரம்பலூர் நகர், அரணாரை, எளம்பலூர் இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம், அரியலூர் மெயின் ரோடு, கவுல்பாளையம், காவலர் குடியிருப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, அருமடல் ரோடு தொழிற்சாலை பகுதிகளில் உள்ள 40 ஆயிரத்து 386 மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரமும், அதேபோல கிருஷ்ணாபுரம் துணைக்கோட்டத்தில் உள்ள கை.களத்தூரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள 8 ஆயிரத்து 324 மின் நுகர்வோருக்கு சீரான மின்சாரமும் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் மின்வாரிய அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- தலைமை மின்பொறியாளர் செல்வகுமார், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் ஆகியோர் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
- பாராட்டு விழா ஏற்பாடுகளை தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய முதன்மை மேலாளர் ராகவன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பழுது இல்லாமல் மின்மாற்றிகளை பராமரிப்பு செய்த நெல்லை மண்டல பிரிவு அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 26 பிரிவு அலுவலகம் மற்றும் 2021-22 ஆம் ஆண்டில் 31 பிரிவு அலுவலகத்திலும் மின்மாற்றிகளை பராமரிப்பு செய்து பழுது இல்லாமல் பணிகள் மேற்கொண்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நெல்லை மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மண்டல தலைமை மின்பொறியாளர் செல்வகுமார், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இந்த விழாவில் செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி, செயற்பொறியாளர் (நகர்ப்புறம் )முத்துக்குட்டி, செயற்பொறியாளர் (கல்லிடைக்குறிச்சி) சுடலையாடும்பெருமாள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய முதன்மை மேலாளர் ராகவன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.