search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனைகள்"

    • நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
    • முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் சுகாதாரத் துறை சார்பில் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது பற்றியும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் கலெக்டர் பழனி அறிவுரை வழங்கினார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிரசவங்கள், மக்களை தேடி மருத்துவச் சேவைகள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை சேவைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசைகளோடு ஒப்பிட்டு கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

    பொது மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்தும் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் இதர துறைகளின் ஒத்துழை ப்பு குறித்தும் விவாதித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில்குமார், அரசு விழுப்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) கீதாஞ்சலி மருத்துவப் பணிகள் மற்றும் குடும்பநலத் துறை இணை இயக்குநர் லட்சுமணன், நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீபிரியா மற்றும் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக இரண்டாம் நிலை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், முதன்மை மருத்துவ அலுவல ர்கள், சுகாதாரத்து றை அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை அலுவலர்கள், மற்றும் முண்டியம்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைதுறை, கால் நடைதுறை, ஊராக வளர்ச்சிதுறை ஆகிய துறைகள் இணைந்து விவசாயி களுக்கு ஆலோ சனைகள் நேற்று வழங்கப்ப ட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் வரவேற்றார். இதில் தொழில் நுட்பங்கள் மற்றும் அரசு செயல்படுத்தும் வேளாண் திட்டங்கள் குறித்து விவ சாயிகளுக்கு தெரிவிக்க ப்பட்டது. மேலும், மண்மா திரி சேகரித்தல், மண்வள அட்டை பயன்பாடு குறித்தும், மண்வளம், இணை யதளம் மற்றும் மத்திய மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

    அதேபோல் கால்நடை மருத்துவர் கவிதா கலந்து கொண்டு கோமாரி நோய் தடுப்புமுறை, தடுப்பூசி பயன்பாடு, கால்நடை பராமரிப்பு குறித்து எடுத்து கூறினார். தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்க லை உதவி இயக்குனர் சிவாமலை கலந்து கொண்டு நுண்ணீர்பாசனத்தின் முக்கியத்துவம், பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழமர செடி தொகுப்புகள் வழங்கப் பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ஆரோக்கியசாமி, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கோடு கல்யாணி கிருஷ்ணன், செல்வராஜ், ஆன்டி சீனுவாசன், குப்புசாமி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்கள் அணியும் ஆடைகள் பெண்களின் தேர்வாகவே இருக்கும்.
    • 'கலர் காம்போ' ஆலோசனைகள் இங்கே.

    பல வீடுகளில் ஆண்களுக்கு பொருத்தமான ஆடைகளை பெண்களே தேர்ந்தெடுப்பார்கள், தினசரி அலுவலகத்துக்கு அணிய வேண்டிய ஆடைகள், நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்ல வேண்டிய ஆடைகள் என எதுவாக இருந்தாலும், ஆண்கள் அணியும் ஆடைகள் பெண்களின் தேர்வாகவே இருக்கும்.

    அந்த வகையில் தங்கள் அப்பா, கணவர், மகள், அண்ணன், தம்பி அல்லது நண்பர்களுக்காக ஆடை வாங்கும் பெண்களுக்கான பிரத்தியேக 'கலர் காம்போ' ஆலோசனைகள் இங்கே..

    ஆடைகளை பொறுத்தவரை அடர் நிற காம்போ. வெளிர் நிற காம்போ, அடர் மற்றும் வெளிர் நிறம் கலந்த காம்போ என்று மூன்று 'காம்போ வகைகள் உள்ளன. அனைத்து வகையான சரும நிறம் கொண்டவர்களுக்கும், பின்வரும் காம்போ நிறங்கள் எடுப்பாக இருக்கும்.

    அடர் நிற காம்போ:

    அடர் நிற காம்போவோடு கருப்பு நிறத்துடன் எந்தவொரு அடர் நிறத்தை இணைத்தாலும், அது எளிதில் ஒத்துப்போகும். எனினும், தற்போது கருப்பு நிற பேண்ட்டுடன் சாம்பல், அடர் பழுப்பு நிறம், இண்டிகோ நீலம், அடர் சந்தன மஞ்சள், ஒயின் சிவப்பு, பேஷன் பெர்ரி மற்றும் திராட்சை நிற பழுப்பு நிற சட்டையும் தற்போது டிரெண்டில் இருப்பவையாகும். இதுதவிர மல்பெர்ரி, ராசின், பிளம், கத்தரி, சங்கரியா, மெர்லட் போன்ற நிறங்களை கொண்ட பர்பிள் மற்றும் சிவப்பு நிற களிலும் ரக்ரோஸ் நிறம், ஆக்கேர் மஞ்சள் நிறம். ஆர்மி மற்றும் ஹண்டர் பச்சை நிற வகைகளிலும், இஸ்டிகோ, நேவி, பீக்காக், டினிம், பெர்ரி போன்ற நிற எண்களைக் கொண்ட நீல நிற வகைகளிலும் பேண்ட் மற்றும் சட்டைகளை தேர்ந்தெடுக்கலாம்.

    வெளிர் நிற காம்போ:

    வெளிர் நிற காம்போ உடைகளை பொறுத்த வரை பேண்ட், சட்டை என இரண்டுமே வெளிர் நிறத்தில் இருக்கும். இதற்கு பெரும்பாலும் பேஸ்டல் நிறங்களும், பழத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிர் நிறங்களும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஆலிவ் பச்சை, எலுமிச்சை மஞ்சள், புதினா பச்சை, டிபானி மற்றும் பிரிக்கியோசிஸ் நீலம், கிரீம், பிரிட்ஜ், பிளக்ஸ் மற்றும் ஷாபரான் மஞ்சள், பிளஸ் சிவப்பு, பபுள்கம், பிளம்மிங்கோ, கோரல் மற்றும் சாலமன் ரோஸ் நிற வகைகள் தற்போது டிரெண்டில் உள்ளன.

    பழங்களை அடிப்படையாகக் கொண்ட நிறங்கள்:

    மாம்பழத்தை அடிப்படையாகக் கொண்ட மஞ்சள், பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறம், வாழைப்பழத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிர் பச்சை மற்றும் நடுநிலையான மஞ்சள் மற்றும் மெரூன் நிறம், தர்பூசணியை அடிப்படையாகக் கொண்ட அடர் பச்சை, அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம், கொய்யாப் பழத்தை அடிப்படையாக கொண்ட வெளிர் சிவப்பு, வெளிர் ரோஸ், கிரீம் வெள்ளை மற்றும் பச்சை நிறம், எலுமிச்சை பழத்தின் அடிப்படையில் வெளிர் பழுப்பு, பொளிர் மற்றும் அடர் பச்சை நிறம் போன்ற பழத்தை அடிப்படையாகக் கொண்ட அடர் மற்றும் வெளிர் நிற காம்போக்கள் இப்போது டிரெண்டில் உள்ளன.

    • பயணம் மேற்கொள்வது மேலும் சிரமத்தை உண்டாக்கும்.
    • எலுமிச்சம் பழச்சாறு குடிப்பதன் மூலம் உதிரப்போக்கை கட்டுப்படுத்த முடியும்.

    மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு பிரச்சினைகளை அனுபவிப்பார்கள். இந்த நேரத்தில் சரியான முன்னேற்பாடுகளை செய்யாமல் பயணம் மேற்கொள்வது மேலும் சிரமத்தை உண்டாக்கும். அவற்றை தவிர்ப்பதற்கான வழிகளை தெரிந்துகொள்வோம். நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு. உங்களது மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதற்கு ஏற்றதுபோல பயணத்தை திட்டமிட வேண்டும்.

    * மாதவிடாய் காலத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சானிட்டரி நாப்கின்கள் அல்லது மாதவிடாய் கோப்பைகளை கூடுதல் எண்ணிக்கையில் உடன் கொண்டு செல்ல வேண்டும்.

    * கூடுதலாக உள்ளாடைகள் மற்றும் வெட் டிஷ்யூ எனப்படும் ஈரப்பதமுள்ள துணிகளை உடன் வைத்திருப்பது நல்லது. அதிக உதிரப்போக்கு ஏற்படக்கூடிய சமயங்களில் இது உங்களுக்கு உதவும்.

    * எப்போதும் ஒரு பாலிதீன் பையை உடன் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் கறை படிந்த உடைகளை அதில் போட்டு பாதுகாப்பாக வைக்க முடியும்.

    • மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலிகளை பயணத்தின்போது சமாளிப்பது சற்றே சிரமமானது. எனவே ஹீட்டிங் பேடு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

    * பயணத்தின்போது இறுக்கமான ஆடைகளை அணியாமல், அடர் நிறத்தில் இருக்கும் மெல்லிய பருத்தி உடைகளை அணியலாம். இதன் மூலம் அந்தரங்க பகுதிகளில் வியர்வை படிவதன் காரணமாக அரிப்பு ஏற்படு வதை தடுக்கலாம்.

    * அதிக அளவு உத்திரப்போக்கை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை பயணத்தின்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பப்பாளி, எள் போன்றவற்றை கொண்டு தயாரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    * பயணத்தின்போது எலுமிச்சம் பழச்சாறு அதிகமாக குடிப்பதன் மூலம் உதிரப்போக்கை கட்டுப்படுத்த முடியும்.

    * பயணத்தின்போது சுத்தமான கழிப்பறைகள் எங்கு இருக்கின்றன என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    மாதவிடாய் நாட்களில் செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்:

    * ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் தொடங்கும் மற்றும் முடிவடையும் நாட்களை தவறாமல் குறித்து வையுங்கள்.

    * மாதவிடாய் நாட்கள் நெருங்கும் சமயத்தில், உடல் மற்றும் மன ரீதியாக அதற்கு தயாராகுங்கள்.

    * மாதவிடாய் நாட்களில் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். மிதமான சூடுள்ள தண்ணீர் குடிப்பது நல்லது.

    * தினமும் இரவில் எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்குங்கள். இதன்மூலம் ஹார்மோன்கள் சமநிலைப்படும்.

    * மாதவிடாய் நாட்களில் இனிப்புகள், நொறுக்குத் தீனிகள் மீது அதிக ஈர்ப்பு ஏற்படும்.

    * சர்க்கரை சேர்த்த பொருட்களை அதிகமாக சாப்பிடும்போது மன அழுத்தம் அதிகரிக்கும். அதிகப்படியான உப்பு கலந்த உணவுகள் உடலில் வீக்கத்தை உண்டாக்கும்.

    * மிதமான நடைப்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளை செய்யலாம்.

    • இலவசமாக சேவைபுரிய குற்றவியல் வக்கீல்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
    • தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் வசதியற்ற வா்களுக்கான குற்றவியல் வழக்குகளை நடத்த குற்றவியல் வழக்குரை ஞா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த அலுவலகத்தை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஜெசிந்தா மாா்ட்டின் திறந்து வைத்து பேசியதாவது:

    வசதி இல்லாதவா்கள் தங்களுடைய குற்றவியல் வழக்குகளைத் தொடா்புடைய நீதிமன்றத்தில் வழக்காட, எதிா் வழக்காட, பிணையில் எடுக்க ஆகியவற்றுக்கு இலவசமாக சேவை புரிய குற்றவியல் வழக்குரைஞா்கள் தோ்ந்தெடுக்கப்ப ட்டுள்ளனா். இவா்களை வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மாவட்ட, அனைத்து வட்ட நீதிமன்ற வளாகங்களிலும் சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இம்மையத்தை அணுகி தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இந்திராணி, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மலா்விழி, மோட்டாா் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வடிவேல், சாா்பு நீதிபதியும், மையச் செயலருமான இந்திராகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    ×