என் மலர்
நீங்கள் தேடியது "ரோகன் போபண்ணா"
- செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 4ம் சுற்றுக்கு முன்னேறினார்
- மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், பல்கேரியா நாட்டை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 7-6 ,6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றியபோது, காயம் காரணமாக அவதிப்பட்டார். தொடை தசைநாரில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இவ்வாறு இரண்டு முறை சிகிச்சை பெற்ற நிலையிலும், அடுத்தடுத்த 2 செட்களையும் வசமாக்கி வெற்றி பெற்றுள்ளார் ஜோகோவிச். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது. இவர்கள், ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸ்- லூக் சேவில்லே ஜோடியை 7-5, 6-3 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு முன்னேறினர். இதேபோல மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, 7-6 (6), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 5ம் தரநிலை ஜோடியான இவான் டோடிக் மற்றும் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியைத் தோற்கடித்தது.
ஜூனியர் பிரிவில், இந்தியாவின் இளம் வீரர் மனாஸ் தாம்னே (வயது 15), ஆஸ்திரேலியாவின் ஜெர்மி ஜாங்கை 6-3, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
- இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
- சானியா மற்றும் போபண்ணா ஜோடி காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியை எதிர் கொள்கிறது.
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் உருகுவேயின் ஏரியல் பெஹர் மற்றும் ஜப்பானின் மகோடோ நினோமியா ஜோடியை வீழ்த்தியது.
சானியா மற்றும் போபண்ணா ஜோடி நாளை நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியான ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
- காலிறுதியில் ஆடவிருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியது.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
2-வது சுற்று ஆட்டத்தில் அரியெல் பெஹர்(உருகுவே)-மகோட்டோ நினொமியா(ஜப்பான்) ஜோடியுடன் மோதிய சானியா-ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், காலிறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.
- இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
வாஷிங்டன்:
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லே- பிரிட்டனின் நியல் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 2-6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயைக்கும் மூன்றாவது செட்டை 10-8 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து பெற்ற தொடரில் கோப்பை வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை போபண்ணா படைத்துள்ளார்.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
பார்சிலோனா:
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, மெக்சிகோவின் சாண்டியாகோ - பிரான்சின் வாசலின் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜூலியன் கேஷ், ஹென்றி பேட்டன் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் நடந்தது.
இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் லேமன்ஸ், வித்ரோ ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது.
இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, பிரான்சின் நிகோலஸ் மஹத், பியர்-ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகன் போபண்ணா அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி தோற்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடந்தது.
இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஜோ சாலிஸ்பெரி ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என கைப்பற்றியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அமெரிக்க
ஜோடி அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றியது.
இறுதியில், அமெரிக்க ஜோடி 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
13 ஆண்டுக்குப் பிறகு ரோகன் போபண்ணா அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி மொராக்கோ ஜோடியை வென்றது
- 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டியாகும்.
லக்னோ:
டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் 2 சுற்றில் இந்தியா, மொராக்கோ அணிகள் இடையிலான ஆட்டம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கியது.
முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களில் சுமித் நாகல் வெற்றி பெற்றார். சசிகுமார் முகுந்த் காயத்தால் பாதியில் விலகினார்.
இந்நிலையில், 2-வது நாளான நேற்று இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் மொராக்கோவின் பென்செட்ரிட், யுனெஸ் லலாமி லாரோசி ஜோடியை எளிதில் வென்றது.
பெங்களூருவைச் சேர்ந்த 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டி ஆகும். இந்தப் போட்டியில் இருந்து அவர் வெற்றியோடு விடைபெற்றார்.
இதையடுத்து, நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் யாசினே டிலிமியையும், இந்தியாவின் திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் மொராக்கோவின் வேலிட் அஹோடாவையும் வீழ்த்தினர். முடிவில் இந்தியா 4-1 என்ற கணக்கில் மொராக்கோவை தோற்கடித்தது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- ஆஸ்திரேலியாவின் டக்வொர்த், பால்மன்ஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-5), 4-6, 7-6 (10-2) என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
- முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இப்போட்டி வரும் 28-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி வரும் 28-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன்-எட்வர்ட் வின்டர் ஜோடியுடன் மோதியது.
இதில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி ஆஸ்திரேலிய ஜோடியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.