search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227210"

    • கூலி தொழிலாளியான சிங்கராவணன் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி என்ற கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. ஏகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

    அந்தவகையில் இந்தாண்டு இன்று காலை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் மஞ்சுவிரட்டு போட்டியில் உற்சாகமாக பங்கேற்றிருந்தன.

    வழக்கம் போல் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்ததை ஆரவாரம் செய்து ஏராளமானோர் ரசித்துக்கொண்டிருந்தனர்.

    இதனிடையே இதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிங்கராவணன் (வயது42) என்பவர் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடி வந்த காளை அவரை முட்டி தள்ளியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மஞ்சுவிரட்டு போட்டி என்பது ஜல்லிக்கட்டு போன்று இல்லாமல் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விடுவது போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூரில் புனித ஜெபமாலை மாதா ஆலய சப்பர திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஒய்.எம்.சி.ஏ கத்தோலிக்க இளைஞர் மன்றத்தால் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. 20 நிமிடங்களுக்குள் காளையை அடக்க வேண்டும் என்று விழா குழுவினரால் நேரநிர்ணயம் செய்யப்பட்டது.

    இதில் 9 பேர் கொண்ட 15 குழுவினர் களம் இறங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதை பார்பதற்காக சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். விழாவில் காரைக்குடி வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் முதலுதவி வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • திருச்சுழி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் தேவர் குருபூஜை விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒரு குழுவிற்கு 12 பேர் என 10 குழுக்களை சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இதை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

    வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கப்பணம் சேர், கட்டில், குத்துவிளக்கு மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
    • விழா நிறைவடைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் முத்தாலம்மன் நிறை குளத்துஅய்யனார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி பொங்கல் மற்றும் முத்துராம லிங்கதேவர் 31-வது குருபூஜை விழா நடை பெற்றது.

    விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் வைத்து வழிபடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுக்கோட்டை கிராம ஊரணியின் மைதானத்தின் நடுவில் உரல் புதைத்து அதில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக, மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 13 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கபட்டன.

    இந்த காளைகளை அடக்க 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்க மதுரை, விருது நகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்திருந்தன.இந்த எருது கட்டு விழாவை பெண்கள், சிறுவர்கள், முதியோர் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தலா 2 அண்டா, 2 குக்கர், ரூ.5000 ரொக்கம் மற்றும் மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டது.

    இந்த வடமாடு மஞ்சு விரட்டு விழா நிறைவ டைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    • மேலூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
    • மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகு வலையபட்டியில் பெரிய கருப்பசாமி மற்றும் பூத கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த பகுதி மக்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இன்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி அங்குள்ள கம்புலியன் கண்மாயில் தொழு அமைக்கப்பட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து 220 காளைகள் கொண்டு வரப்பட்டன. கிராம முக்கியஸ்தர்கள் வேட்டி, துண்டுகளை மாடுகளுக்கு அணிவித்தனர். மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    இதில் மாடுகளை பிடித்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
    • டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் கிராமத்தில் மலை மருந்தீஸ்வரர்-முனிநாத சுவாமி கோவில்உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மிக்க மஞ்சுவிரட்டு நடை பெற்றது.

    ஏரியூர் கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராம மக்கள் ஏரி கண்மாயில் மீன்பிடி திருவிழாவும், அதனை தொடர்ந்து பாரம்பரியமிக்க மஞ்சு விரட்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் மஞ்சு விரட்டு போட்டி நேற்று மாலை நடந்தது.

    முன்னதாக ஏரியூர், மயில்ராயன் கோட்டை, வலையபட்டி, கலிங்கப்பட்டி போன்ற 10-க்கு மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன. விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டு ஓடிய காளைகளை வீரத் தோடு திமிலைப் பிடித்து அடக்க முற்பட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வடவன்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மயில்ராயன்கோட்டை நாடு வடவன்பட்டி கிராமத்தில் முனிநாதர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    முன்னதாக இப்பகுதிகளை சேர்ந்த கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் முனி நாதர் பொட்டலிலும், கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.

    விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு ஓடிய காளைகளை வீரத்தோடு அடக்க முற்பட்டனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்.

    • அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு செய்தனர்.
    • தென்கரை கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நாச்சியார்புரம் போலீசில் புகார் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தென்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதுதொடர்பாக தென்கரை கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நாச்சியார்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக அதே ஊரை சேர்ந்த வாசுதேவன் (வயது 75), சுப்பிரமணியன் (62), சொக்கலிங்கம் (46), செல்வராஜ் (27), குமார் (36) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • ஆலங்குடி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது
    • ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே துவரங்கொல்லைப்பட்டியில் பிடாரியம்மன், சித்திவிநாயகர், முத்துமுனீஸ்வரர், உருமநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு சித்தி விநாயகர் திடலில் நேற்று நடந்தது. கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி உறுதிமொழி வாசிக்க அதனை வீரர்கள் ஏற்றுக்கொண்டனர். முத்துராஜா எம்.எல்.ஏ., கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன், துணை தாசில்தார் செல்வராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 காளைகள் கலந்து கொண்டன. 11 சுற்றுகளாக நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 99 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். இதில் காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், வெள்ளி நாணயம், மின்விசிறி, சில்வர் அண்டா, குக்கர், ஹாட் பாக்ஸ், மின்சார அடுப்பு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



    • திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
    • தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் ஆகாச கருப்பர் அந்த நாச்சி அம்மன் கோவிலில் பூச்செரிதல் மற்றும் பால்குட சித்திரை திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது. முன்னதாக தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டது. திரளோனோர் இதில் கலந்துகொண்டு அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க முயன்றனர். விழாவிற்கான பணிகளை வாசுதேவன் அம்பலம், தலைவர் சுப்பிரமணியன், சொக்கலிங்கம், ராமராஜன், கவுதமன் மற்றும் ஊர் மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட தரியம்பட்டி கிராமத்தில் வழி விடு விநாயகர் வடக்கு வாசல் செல்வி அம்பாள் கருப்பர் ஆலய வருடா பிஷேக விழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. பாய்ந்து ஓடிய காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கிய காட்சிகளை பார்வை யாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் அம்பலக்காரர் ராஜா மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் செய்தி ருந்தனர். போட்டிக்கான விழாக்குழு பணிகளில் கமிட்டி நிர்வாகிகளான பரமசிவம், போஸ், சிங்காரம், மணிமாறன், பெரியசாமி ஆகியோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
    • 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஆதினமிளகி அய்யனார் முத்துமணிஅய்யா கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 252 காளைகளும், 70 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு சேர், பீரோ, அண்டா, சைக்கிள் போன்ற பரிசுகளும் அமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது.

    இந்த போட்டிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் சுரேஷ் கருப்பையா அம்பலம், லேனா பெரிய தம்பி அம்பலம், மஞ்சரி லட்சுமண் ஆகியோர் செய்திருந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ×