என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரப்பதிவு"

    • சர்வே எண்ணை சுற்றியுள்ள மதிப்பில் எது அதிகப்பட்சம் மதிப்பு உள்ளதோ அதன் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்துகொடுப்பது நடைமுறையில் உள்ளது.
    • தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பதிவுத்துறையின் தொடர் நடவடிக்கையால் பாமர மக்களும், நடுத்தர மக்களும் தொடர்ந்து பணத்தாலும், மனத்தாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு கடந்த இரண்டு வருடங்களில் சொத்து மதிப்பை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. புதிதாக உருவாக்கவுள்ள மனைப்பிரிவு மதிப்பு நிர்ணயம் செய்வதற்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மனு அனுப்பினால் மனைப்பிரிவிற்கு மதிப்பு நிர்ணயம் செய்ய உள்ள சர்வே எண்ணை சுற்றியுள்ள மதிப்பில் எது அதிகப்பட்சம் மதிப்பு உள்ளதோ அதன் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்துகொடுப்பது நடைமுறையில் உள்ளது.

    தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்த்தினால் கூட தமிழ்நாடு அரசுக்கு வருமானம் வரும், மக்களும் பயனடைவார்கள். ஆனால் சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கும் வருமான வரி சுமை கூடுகிறது, பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் அடைவதில்லை. ஆகவே தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தான செட்டில்மென்ட் பதிவை பொறுத்தமட்டில் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

    சென்னை:

    சமூகத்தில் மட்டுமன்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

    இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில், 'தற்போதைய பதிவுகளில் 75 சதவீதம் மகளிர் இந்த சலுகையை பெற தகுதியை பெறுவார்கள். இந்த சலுகையின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை, நிதி சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என அரசு உறுதியாக நம்புகிறது' என கூறப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அனைத்து பத்திரப்பதிவு அலுவலர்களும், இந்த அரசாணைப்படி செயல்பட பத்திர பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    இதன்மூலம் பத்திர பதிவு மேற்கொள்ளும் மகளிருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து ஓய்வுபெற்ற பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதிவு கட்டணமாக 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் அதிகபட்சம் ரூ.10 லட்சத்துக்கு ரூ.20 ஆயிரம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

    தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம் பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் போதும். இதன்மூலம் ரூ.10 ஆயிரம் மிச்சமாகும்.

    ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு மட்டுமே இந்த பதிவு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை பதிவு செய்யும் மகளிர் இந்த சலுகையை பெற முடியாது.

    தற்போது கிராமப்புறங்களில் கூட நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் வெறும் ரூ.10 லட்சத்துக்கு சொத்துகள் வாங்க முடியாது.

    எனவே, ரூ.10 லட்சத்துக்கு அதிகமான சொத்துகளை பதிவு செய்யும் மகளிரும் இந்த சலுகையை பெறும் வகையில் இந்த திட்டத்தை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.

    தான செட்டில்மென்ட் பதிவை பொறுத்தமட்டில் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். தான செட்டில்மென்டை பொறுத்தமட்டில் அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.40 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட சொத்தின் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடியாக இருந்தாலும் பதிவு கட்டணமாக ரூ.40 ஆயிரம் செலுத்தினால் போதும்.

    அதிக மதிப்புள்ள சொத்துகளை கொண்ட பெரும் செல்வந்தர்களுக்கு சலுகை அளிக்கும்போது மகளிருக்கு சலுகை அளிப்பதில் உச்சவரம்பை நிர்ணயித்து இருப்பது சரியானது அல்ல.

    உச்சவரம்பை நீக்கி விட்டு எவ்வளவு மதிப்பிலான சொத்துகள் என்றாலும் பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் கட்டணம் அளிக்கும்போதுதான் அனைத்து தரப்பு மகளிரும் பயன்பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த மாதம் மாசி மாதம் என்பதால் பத்திரப்பதிவுகள் அதிகம் நடக்கிறது.
    • மார்ச் மாதம் முடிய இன்னும் 17 நாட்கள் இருப்பதால் பத்திரப்பதிவு எண்ணிக்கையும், வருமானமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை, அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்காற்றுகிறது. பொதுமக்களின் நிலம்-மனை உள்ளிட்ட சொத்துக்களின் ஆவணங்கள் பதிவு மற்றும் நகல் பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றின் கட்டணங்கள் மூலம் வருமானம் கிடைத்து வருகிறது.

    கடந்த 2023-24-ம் நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறை ரூ.18 ஆயிரத்து 800 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்து இருந்தது. தற்போது அந்த சாதனையை விஞ்சி தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய சாதனையாக ரூ.20 ஆயிரம் கோடி வருவாயை நேற்று எட்டி பிடித்துள்ளது.

    ஏற்கனவே இந்த மாதம் மாசி மாதம் என்பதால் பத்திரப்பதிவுகள் அதிகம் நடக்கிறது. எனவே வருமானமும் அதிகரித்துள்ளது. மேலும் கடந்தாண்டு 33.3 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த 2024-25-ம் நிதியாண்டில் இதுவரை 32 லட்சம் பத்திரப்பதிவுகள் நடந்தாலும் வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. இந்த நிதியாண்டு, அதாவது மார்ச் மாதம் முடிய இன்னும் 17 நாட்கள் இருப்பதால் பத்திரப்பதிவு எண்ணிக்கையும், வருமானமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
    • ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகங்களின் பணிகள் இந்த மண்டல அலுவலகத்தின் மூலமாக செயல்பட தொடங்கும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பத்திரப்ப திவுத்துறை அலுவலகத்தில் ராமநாதபுரம் மண்டல அலுவலகம், மதுரையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், மதுரை மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ராமநாதபுரம் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் தனியாக பிரித்து ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் செயல்பட தொடங்கியுள்ளது.

    இந்த மண்டல அலுவலகத்தில் இருந்து ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகங்களின் பணிகள் இந்த மண்டல அலுவலகத்தின் மூலமாக செயல்பட தொடங்கும்.

    இதற்கு முன்னர் மதுரை மண்டல அலுவலகத்தில் இந்த மாவட்டங்களுக்கான பணிகள் நடந்து வந்தன. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மண்டல பத்திரப்பதிவு அலுவலகமாக பிரிக்கப்பட்டு செயல்பட தொடங்கி உள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர்கள் ரத்தினவேல், ரமேஷ், ராமநாதபுரம் நாகராட்சி தலைவர் கார்மேகம், நாகராட்சி துணைத்தலைவர் பிரவீன் தங்கம், பத்திரப்பதிவு அலுவலக கண்காணிப்பு அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.
    • இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    உடுமலை:

    குடிமங்கலம் அருகே பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாமல் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பாளையம்,அடிவள்ளி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலக வரம்பில் வருகிறது.இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வந்தனர்.இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராம குடியிருப்புகளில் காலி இடம்,வீடுகள் விற்பனை செய்யும்போது கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.இதற்காக உரிய காரணமும் தெரிவிக்க மறுக்கின்றனர்.இதனால் இந்த கிராமங்களில் காலி இடங்களை வாங்கியவர்கள் பத்திரப் பதிவு செய்ய முடியாமலும்,இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.எனவே பத்திரப் பதிவுத்துறை உரிய விளக்கம் அளிக்கவும்,பிரச்சினைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    • முகூர்த்த நாள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.
    • இரவு 8 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடந்தது.

    பல்லடம் :

    பல்லடம் மங்கலம் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பத்திரம் பதிவு செய்வதற்காக பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் தினமும் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

    இந்தநிலையில் நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் முகூர்த்த நாள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். அவர்களை பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் முறைப்படுத்தாமல் விட்டதால், அலுவலகத்தினுள் மற்றும் முன்புற வாயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டனர்.மேலும் அலுவலகத்திற்குள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.நேற்று பத்திரப்பதிவுக்கு 100க்கும் அதிகமானோர் பத்திர பதிவு செய்ய வந்ததால் இரவு 8 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடந்தது .பத்திரப்பதிவுக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில், பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.முறையாக டோக்கன் கொடுத்து பத்திரப்பதிவு செய்தால் ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் கூட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இதே நாளில் ரூ.24,527.39 கோடி வருவாயை வணிக வரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளது.
    • கடந்த வருடம் இதே நாளில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.12,161.51 கோடியை விட ரூ.3,523.32 கோடி அதிகமாக நடப்பு ஆண்டில் பதிவுத்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வணிக வரித்துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக வணிக வரி வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    வணிக வரித்துறையில் நடப்பு நிதியாண்டில் 28.2. 2023 வரையிலான மொத்த வருவாய் ரூ.1,17,458.96 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதேநாளில் இத்துறையின் வருவாய் ரூ.92,931.57 கோடியாக இருந்தது.

    இவ்வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இதே நாளில் ரூ.24,527.39 கோடி வருவாயை வணிக வரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளது.

    அதே போன்று பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவின் மூலம் பெறப்படும் வருவாய் நடப்பு ஆண்டில் வரலாற்று சாதனையை எட்டியுள்ளது. நடப்பாண்டில் 28.2.2023 வரை பதிவுத்துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.15,684.83 கோடி ஆகும்.

    கடந்த வருடம் இதே நாளில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.12,161.51 கோடியை விட ரூ.3,523.32 கோடி அதிகமாக நடப்பு ஆண்டில் பதிவுத்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.

    வணிக வரி மற்றும் பதிவுத்துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வு கூட்டங்களினாலும் இத்துறைகளின் வருவாய் அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
    • எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில்,

    நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க பதிவு கட்டணத்தை 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8.6.2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் 2017 ஜூனில், அரசாணை வெளியிடப்பட்டு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது.
    • பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

    திருப்பூர் :

    தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறையாக பதிவுத்துறை உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் நிலத்தின் சந்தை மதிப்பைக் காட்டிலும், வழிகாட்டி மதிப்பு மிகவும் குறைவு. பெருநகரங்களை யொட்டியுள்ள புறநகர் பகுதிகளில் வழிகாட்டி மதிப்பை விட சந்தை மதிப்பு 10 மடங்கு அதிகம். இதன் காரணமாக பத்திரப்பதிவு களில் கருப்புப் பணம் பெருமளவு கை மாறுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் 2017 ஜூனில், அரசாணை வெளியிடப்பட்டு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒரு சதவீதமாக இருந்த பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்குமான இடைவெளி மேலும் அதிகரித்தது.

    கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அப்போது பல ஆயிரம் கோடி கருப்பு பணம் வைத்திருந்த பலரும் அந்த பணத்தை வைத்து தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களை பேசி முடித்து ஒப்பந்தம் போட்டிருந்தனர். அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்காகவும், அரசின் வளர்ச்சி பணிகளுக்காக, நில ஆர்ஜிதத்துக்குத் தரப்படும் இழப்பீடை குறைக்கவும், வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    கடந்த 20ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் உயர்த்தியும், பதிவுக்கட்ட ணத்தை நான்கில் இருந்து 2 சதவீதமாக குறைத்தும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு எல்லா தரப்பிலும் கடும் அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.

    கருப்பு பணப்புழக்கத்தை குறைத்து அரசின் வருவாயை அதிகரிக்க, தற்போதுள்ள சந்தை மதிப்புக்கேற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது அவசியம். இப்போதும் கடந்த 2017ல் குறைத்த 33 சதவீதம் வழிகாட்டி மதிப்புதான் மீண்டும் உயர்த்தப்படுகிறது. அதேநேரத்தில் அப்போது ஒன்றிலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்ட பதிவுக்கட்டணம் இப்போது 2 சதவீதமாக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு மக்களின் சுமையை குறைத்திருப்பதை போல் இருந்தாலும் உண்மையில் பத்திரப்பதி வுக்கு முன்பை விட கூடுதல் தொகையையே செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    உதாரணமாக தற்போது 666 ரூபாயாக உள்ள ஒரு சதுர அடி வழிகாட்டி மதிப்பு, இனி ஆயிரம் ரூபாயாக உயரும். ஒரு சென்ட் நிலத்துக்கு இதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணம் சேர்த்து பதிவு செலவை கணக்கி ட்டால் ரூ.7,092 அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும். இனிமேல் அரசு அமைத்துள்ள குழு ஆய்வு செய்து நிலத்திற்கு புதிய வழிகாட்டி மதிப்பை பரிந்துரை செய்தாலும் பதிவு கட்டணம் இதே 2 சதவீதமாகவே தொடர வாய்ப்புள்ளது. முன்பு குறைத்த வழிகாட்டி மதிப்பை கூட்டிய தமிழக அரசு, முந்தைய அரசு மூன்று சதவீதம் கூட்டிய பதிவுக்கட்ட ணத்தை மீண்டும் ஒரு சதவீதமாகக் குறைப்பது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • குடியிருப்போர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது.
    • வங்கியில் கடன் பெற்று வீடு கட்டி வசித்து வருகிறோம்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி காளை பாரதிநகர், வி.பி. கார்டன் பகுதி குடியிருப்போர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் குடியிருப்போர் 130 பேர்கலந்துகொண்டனர்.

    இதில் பாரதிநகர் பகுதியில் 200 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக மனைப்பிரிவு பெறப்பட்டு வங்கியில் கடன் பெற்று வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால் இந்த பகுதியில் பத்திரப்பதிவை மேற்கொள்ளாமல் தடை செய்யப்பட்டுள்ளதாக சார்பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை உள்ளது. புதிய கட்டிடங்கள் கட்ட வங்கியில் கடனுதவி பெற இயலாது. கடன்தொகை முழுவதும் செலுத்தினாலும் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து திரும்பப்பெற இயலாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சார்பதிவாளர், வட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் ஆகியோர்க ளிடமிருந்து உரிய தகவல் பெற்றுசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கொரோனா தொற்று கடந்த ஆண்டில் குறைந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வேகம் எடுத்தது.
    • இனிவரும் காலங்களில் வீடு, நிலம் வாங்கும் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியது. புதிய வீடுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கட்டுமான தொழிலிலும் தொய்வு நிலை காணப்பட்டது.

    இந்நிலையில் கொரோனா தொற்று கடந்த ஆண்டில் குறைந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வேகம் எடுத்தது. புதிய கட்டுமான திட்டங்களும் தொடங்கப்பட்டன.

    வீடு வாங்குவதில் பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். இதன் காரணமாக வீடுகள் மற்றும் மனைகள் விற்பனை கடந்த ஆண்டு முதல் அதிகரித்து உள்ளது. தமிழகம் முழுவதும் இதே நிலை காணப்பட்டது.

    தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 34.41 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இதன் மூலம் ரூ.17 ஆயிரத்து 296 கோடி வருமானம் கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள 63 பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் 5.83 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இதன் மூலம் ரூ.7 ஆயிரத்து 727 கோடி வருமானம் கிடைத்துள்ளது.பத்திரப்பதிவுத்துறை மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 44 சதவீதம் சென்னையில் இருந்தே கிடைத்துள்ளது.

    கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் சென்னை மண்டலத்தில் 3.4 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது.

    சென்னை குன்றத்தூர், திருப்பத்தூர், கூடுவாஞ்சேரி, சேலையூர், ஆவடி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மட்டும் கடந்த நிதி ஆண்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் இந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சென்னையில் முக்கியமான இடங்களில் நிலத்தின் விலை அதிகரித்துள்ளதால் நடுத்தர மற்றும் உயர்வருவாய் பிரிவினர் குன்றத்தூர், அம்பத்தூர், ஆவடி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், திருப்போரூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வாங்குகிறார்கள்.

    சென்னையில் அதிகபட்சமாக குன்றத்தூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் 27 ஆயிரத்து 705 பத்திரங்கள் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்த படியாக திருப்போரூரில் 25 ஆயிரத்து 941 பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இனிவரும் காலங்களில் வீடு, நிலம் வாங்கும் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சொத்து பத்திரம், வீட்டு மனைப்பட்டா ஆகியவை இருந்தும் வங்கிகளில் கடன் உதவி பெற முடியவில்லை.
    • மருத்துவ சிகிச்சை, திருமணம், வீடு உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் இன்றி பலரும் சிரமப்பட்டு வருகின்றனா்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் நத்தம் நிலங்களை பூஜ்ஜியம் என்ற மதிப்பின்மை வகைப்பாடு ஆக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் சொத்து கிரயம் செய்ய முடியாத பிரச்னைக்கு அரசு தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் பனப்பாளையம் பாலசுப்பிரமணியம், பத்திர ஆவண எழுத்தா்கள் சங்க பல்லடம் கிளைத் தலைவா் ஜெகதீசன், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் பல்லடம் பத்திரப்பதிவு துறை சாா்பதிவாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

    பின்னா் அவா்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக நத்தம் நில பட்டா உரிமையாளா்கள் தங்களது இடத்தை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். ஏனெனில் நத்தம் நிலத்திற்கு அரசு மதிப்பு பூஜ்ஜியமாக பத்திரப்பதிவு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் சொத்து பத்திரம், வீட்டு மனைப்பட்டா ஆகியவை இருந்தும் வங்கிகளில் கடன் உதவி பெற முடியவில்லை. அவசர செலவுக்கு இடத்தை அடமானம் வைக்கமுடியவில்லை. இதனால் மருத்துவ சிகிச்சை, திருமணம், வீடு உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் இன்றி பலரும் சிரமப்பட்டு வருகின்றனா். அரசு நத்தம் நில வகைப்பாட்டிற்கு உரிய மதிப்பு தொகையை நிா்ணயம் செய்து பத்திரப்பதிவு துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நத்தம் நிலங்களை கிரையம், அடமானம் போன்ற வழக்கமான நடைமுறைப்படி பத்திரப்பதிவு செய்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். 

    ×