என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு நாய்கள் தொல்லை"

    • இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.
    • தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, காஞ்சி கோவில் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்க ளாகவே பட்டிக்குள் இருக்கும் ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்று வருவது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.

    இதையடுத்து நாய்களை கட்டுப்படுத்த கோரியும், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்த நிலையில் கவுந்தப் பாடி அருகே கோழிப் பண்ணைக்குள் புகுந்து 100 கோழிகளை தெரு நாய்கள் கொன்றுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த குட்டி பாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம்.

    இவர் அதேபகுதியில் சொந்தமாக கோழிப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். கோழிப் பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகளை வளர்த்து வருகிறார்.

    கோழிப்பண்ணை சுற்றி கம்பி வலைகள் அமைத்து அதில் கோழிகளை வளர்த்து வந்தார்.இந்நி லையில் சோம சுந்தரம் கோழிப் பண்ணைக்குள் தெரு நாய்கள் கூட்டம் திடீரென புகுந்தது.

    இதை தொடர்ந்து அந்த தெரு நாய்கள் அங்குள்ள கம்பி வலைகளை கடித்து உள்ளே புகுந்து 100-க்கும் மேற்பட்ட கோழிகளை கடித்துக் கொன்றுள்ளது. கோழிகள் அலறல் சத்தம் கேட்டு வந்த சோமசுந்தரம் அங்கு 100 கோழிகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சோமசுந்தரம் இறந்த கோழிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதேபோல் கவுந்தப்பாடி அடுத்த மஜரா பாப்பாங் காட்டூர், பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அதிகாலை 4 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றுள்ளது. இது தொடர்பாகவும் கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாகவே எங்கள் பகுதியில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன. தற்போது கோழிப் பண்ணைக்குள் புகுந்து 100 கோழிகளை கொன்று உள்ளது. இதேப்போல் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளையும் கொன்று உள்ளது.

    தொடர்ந்து தெரு நாய்கள் அட்டகாசம் செய்து வருவ தால் எங்களுக்கு ஒரு வித அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் வாழ்வா தாரத்தை இழந்து தவித்து வருகிறோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
    • இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. தெரு வோரங்களில் கூட்டமாக கூடியிருந்து தெருவில் வரும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன.

    பகல் நேரங்களில் சில சமயம் தெருவில் நடமாடும் பெண்கள், குழந்தைகளையும் துரத்துகின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர்.

    முன்பு கறிக்கடை முன்பு நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான். முன்பு மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

    தற்போது அது செய்யப்ப டாமல் உள்ளதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மாநகர் பகுதியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகின்றன. நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    எனவே முன்பு போல் தெருவில் சுற்றி தெரியும் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குமாரபாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
    • அவற்றை பிடிக்க பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் நாய்கள் தொந்தரவு அதிகம் இருப்பதால், சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒவ்வொரு நகராட்சி கூட்டங்களிலும் அனைத்து கவுன்சிலர்களும் புகார் கூறி வருகின்றனர்.

    பிரதான சாலைகளான சேலம் சாலை, பள்ளிபா ளையம் சாலை, இடைப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவியர், வயதானவர்கள், நடைபயிற்சி செய்பவர்கள், விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை உள்ளிட்ட பணிகளுக்கு செல்வோர் உள்ளிட்ட பலர் இந்த நாய்க ளால் பெறும் அவஸ்தைக்கும், அச்சத்திற்கும் ஆளாகி வருகிறார்கள்.

    சில நேரங்களில் சாலையில் செல்வோரை நாய்கள் துரத்துவதோடு கடித்தும் விடுகின்றன. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
    • வாகனங்களில் வந்து விழுவதும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதும், என தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

     பல்லடம்:

    பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் பெருகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களில் வந்து விழுவதும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதும், என தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி நகரில் தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக பி.ஆர். சுந்தரம் தெரு, முஹம்மது அலி கிளப் ரோடு, ஆறுமுகம் ஆசாரி தெரு, பென்னாகரம் மெயின் ரோடு,  நகர் மற்றும் புறநகர் பஸ் நிலையங்களில் சுற்றிதிரிகின்றன. காலை, இரவு நேரங்களில் தனியாக நடந்து வருபவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களை இந்த நாய்கள் துரத்தி செல்கின்றன. சில சமயங்களில் சில நாய்கள் கடித்து கொதறுகின்றது. 

    இந்த நாய்கள் நகராட்சி குப்பை வண்டிகளை கண்டால் வண்டியில் பின்னால் கூட்டம் கூட்டமாக செல்கின்றன. குப்பை வண்டியில் வரக் கூடிய கழிவுகள் மற்றும் இறைச்சிகளை நாய்கள் உண்கின்றன. 

    இத்தகைய நாய்கள் பொதுமக்களை கடித்தாள் தொற்று நோய் பரவி பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இவற்றைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×