search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்மஅடி"

    • இரவு நேரத்தில் தூங்கிகொண்டிருந்த தம்பதி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
    • உங்கள் ஊரில் பிழைக்க வழியில்லை என தமிழகத்திற்கு வந்துவிட்டு எங்கள் ஊரை தரக்குறைவாக பேசுவதா என அவரை சத்தம் போட்டனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் ஆத்துமேடு பயணிகள் நிழற்குடையில் பச்சைகுத்தும் தொழிலாளிகளான தம்பதிகள் இரவு நேரத்தில் தங்குவது வழக்கம். அதன்படி இரவு நேரத்தில் அங்கு தூங்கிகொண்டிருந்த தம்பதி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு குடிபோதையில் வந்த வடமாநில ஆசாமி ஒருவர் அவர்களது சண்டையை தனது செல்போனில் படம் பிடித்தார்.

    அதனை வீடியோ எடுத்து கொண்டிருந்தபோதே தமிழகத்தில் இதுபோல்தான் அனைத்து இடங்களிலும் நடக்கிறது. எங்கள் ஊரில் இதுபோல் நடக்காது என பேசினார். இதைபார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை சத்தம்போட்டனர். இருந்தபோதும் அந்த வாலிபர் கேட்காமல் தமிழகத்தில் இதுபோல்தான் நடக்கிறது என்று பேசிக்கொண்டே இருந்தார்.

    இதனால் அங்கிருந்த வியாபாரிகள் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் இதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். உங்கள் ஊரில் பிழைக்க வழியில்லை என தமிழகத்திற்கு வந்துவிட்டு எங்கள் ஊரை தரக்குறைவாக பேசுவதா என அவரை சத்தம் போட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. .
    • 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் காலனி புதுதெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரேமகுமாரி (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பருகம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. அக்கம் பக்கதினர் வெளியே வந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 2 வாலிப ர்களையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

    வீட்டின் உரிமையாளர் பிரேமகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பிரேமகுமாரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மட்டும் உடைத்திருந்தது.இதற்கிடையில் பொதுமக்கள் திருவெண்ணை நல்லூர்போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்இதில் திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனியை சேர்ந்த கலியன் மகன் ஜெகதீஸ்வரன் (21), சரவணம்பாக்கம் காலனியை சேர்ந்த ரகு மகன் உதயா (26) என தெரியவந்தது. மேலும் 2 பேரும் வீட்டின் பூட்டை உடைத்து திருடமுயற்சி செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து அவர்களி டமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார் .
    • மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார். அப்போது அந்த பஸ்சில் படிக்கட்டில் நின்றிருந்த முதியவர் ஒருவர் அந்த மாணவியிடம் பேக்கில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார் .

    அந்த மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்து தர்மஅடி கொடுத்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் முதியவரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எம்.புதூர் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு வருகிறது.
    • வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் அருகே எம்.புதூர் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்காக அந்த பகுதியில் இரும்பு உள்ளிட்ட தளவாட பொருட்கள் போடப்பட்டு உள்ளது. இதனை அந்த பகுதி மக்கள் கண்காணித்து வருகிறார். நேற்று இரவு 3 வாலிபர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். இதனை பார்த்த கிராம மக்கள் அந்த வாலிபர்களை பார்த்து திருடர்கள் வந்து உள்ளனர் என கருதி துரத்தினர். அப்போது அவர்களில் 2 பேர் தலைதெறிக்க ஓடிவிட்டனர். இதில் ஒருவர் சிக்கினார்.

    அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். ஆனால் அந்த வாலிபர் வேதனையால் கதறினார். உடனே கிராம மக்கள் அந்த வாலிபரை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் எம்.புதூர் பகுதியை சேர்ந்த பிரபு என தெரியவந்தது. இவருடன் வந்த வாலிபர்கள் அந்த பகுதியில் அமர்ந்து மது குடிக்க சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  

    • கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் அவினாசிபாளையத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
    • ஒர்க்‌ஷாப்பில் கடந்த மாதம் 26-ந் தேதி 30 கிலோ இரும்பு திருட்டு போனது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 34). இவர் அவினாசிபாளையத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மாதம் 26-ந் தேதி 30 கிலோ இரும்பு திருட்டு போனது. இதனைத்தொடர்ந்து அவர் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது 2பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இந்த நிலையில் நேற்று சி.சி.டி.வி. கேமராவில் காணப்பட்ட இருவரும் அவினாசிபாளையம் பகுதியில் சுற்றித்திரிந்ததை மகேஷ் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த இருவரையும் விரட்டி பிடித்தனர். பின்னர் இருவருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவர்களில் ஒருவர் திருப்பூர் புதுரோட்டை சேர்ந்த சுப்பிரமணி மகன் சேகர் (43 ), மற்றொருவர் திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் ஆனந்த் (53) தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் போலீசார் அவர்கள் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி உள்ளனர்.

    இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் அவர்கள் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ×