என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒழுங்கு"
- அத்திக்கடவு-அவினாசி திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4-வது குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது
- தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் பிரச்சினைகளால் சிக்கி தவிக்கிறது.
திருப்பூர் :
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. தமிழகத்தில் விஷசாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:- தி.மு.க.ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளசாராயம், போலி மது, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. திருப்பூரில் பனியன் தொழில் நலிவடைந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்திக்கடவு-அவினாசி திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4-வது குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 4-வது திட்ட குடிநீரை செயல்படுத்தினால் அ.தி.மு.க. அரசுக்கு பெயர் கிடைத்து விடும் என்று காலதாமப்படுத்துகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் பிரச்சினைகளால் சிக்கி தவிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் வெகுண்டெழுந்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு விஜயகுமார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், பகுதி செயலாளர்கள் திலகர்நகர் சுப்பு, மகேஷ்ராம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
- அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏல விற்பனை நாளை தொடங்குகிறது
- ஈரோடு விற்பனை குழுவின் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூட த்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏல விற்பனை நடைபெற உள்ளது.
ஈரோடு:
ஈரோடு விற்பனை குழுவின் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூட த்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏல விற்பனை நடைபெற உள்ளது. இதை யொட்டி அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாளை (திங்கட் கிழமை) முதல் மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை தொடங்குகிறது.
இந்த மறைமுக ஏல விற்பனையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட மொத்த வியாபாரிகள், அறவை ஆலை மற்றும் நூற்பு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டு கொள் முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே விவசாயிகள் நன்கு முதிர்ந்த மலர்ந்த வெடித்த பருத்திகளை பறித்து நிழலில் உலர வைத்து தூசி மற்றும் சருகுகளை நீக்கி ரகம் வாரியாக தனித்தனியாக பிரித்து விற்பனை கூடத்தில் நடக்கும் ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இதன் மூலம் விவசாயி களின் விளை பொரு ட்களுக்கு சரியான எடை, போட்டி விலை உடனடி பணம் எந்த விதமான பிடித்தம் இன்றி நல்ல விலைக்கு விற்று பயன் பெறலாம் என ஈரோடு விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குனர், செயலாளர் மற்றும் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆகி யோர் தெரிவித்தனர்.
- ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படுகிறது
- இக்கொள் முதல் மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் 2022-ம் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் ஈரோடு விற்பனைக்குழுவில் செயல்படும் சத்தியமங்கலம், அவல்பூந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட வுள்ள கொப்பரையானது அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தில் இருக்க வேண்டும். மேலும் ஒரு கிலோ பந்து கொப்பரை ரூ.110 மற்றும் அரவை கொப்பரை ரூ.105.90 வீதம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த ப்படும்.
எனவே இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார்அ ட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முகப்பு, சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் சத்திய மங்க லம், அவல்பூ ந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்க ப்படுகிறது.
இக்கொள் முதல் திட்டத்தில் ஈரோடு மாவட்ட த்தை சேர்ந்த தென்னை சாகுபடி செய்துள்ள வேளாண் பெருங்குடி மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.
- பொதுதேர்வு விடைதாள் திருத்தும் பணியையும் ஆசிரியர்கள் புறக்கணித்து உள்ளனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் அ.ம.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து தலைமை கழகபேச்சாளரும், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளருமான வக்கீல் குரு முருகானந்தத்தின் புதிய வழக்கறிஞர் அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி தொ டங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக அம்மாவால் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தி.மு.க. அரசால் கைவிடப்பட்டு உள்ளது. அம்மா உணவகம் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது.
விடியல் அரசு என கூறி வரும் தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எவ்விதமான பயன்படக்கூடிய திட்டங்கள் எதுவும் இல்லை. தினமும் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.
மின்வெட்டு மக்களை பெரிதும் பாதிப்படைய செய்து உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 அறிவித்து ஓராண்டு முடிந்தும் இன்னும் வழங்க முடிய வில்லை. மக்களுக்கு எவ்வித வகையிலும் பயன் அளிக்காத திட்டங்கள்பல இடங்களில் செயல்படுத்த ப்படுகிறது.
குறிப்பாக அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டங்களை தேர்வு செய்கின்றனர். மக்களுக்கு எவ்வித பயனும் இல்லாத வகையில் கடலூர் மற்றும் இளையான்குடி பகுதி யில் பொதுமக்களின் எதிர்ப்பை யும் கண்டு கொள்ளாமல் புதிய பஸ்நிலையம் அமைக்க ப்படுகிறது. தற்போது அரசு பொதுதேர்வு விடைதாள் திருத்தும் பணியையும் ஆசிரியர்கள் புறக்கணித்து உள்ளனர். இதனால் தி.மு.க. அரசிற்கும் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட தலைவர் தேர்போகி பாண்டி, மாநில அம்மா பேரவை செய லாளர் டேவிட் அண்ணா துரை, தமிழ்நாடு-பாண்டிச் சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் கார்த்திகேயன், மாநில சிறுபான்மைப்பிரிவு செயலாளர் துருக்கி ரபீக்ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் மற்றும் மாவட்ட, மானாமதுரை ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்