search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைப்போட்டி"

    • 5-8, 9-12, 13-16 என்ற வயது வரம்பில் போட்டிகள் நடைபெறும்.
    • குரலிசை போட்டி, பரதநாட்டியபோட்டி, கிராமிய நடனப்போட்டி நடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டக்கலைப்போட்டிகள் திருப்பூர் மாவட்டம் மண்ணரை கிராமம் சத்யா காலனி (கிழக்கு) ல்உள்ள நைருதி வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில்வருகிற 17 -ந்ேததி( சனிக்கிழமை) அன்றுநடைபெற உள்ளது.இப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம்மற்றும்ஓவியம் ஆகிய பிரிவுகளில் நடைபெறுகிறது. மேலும் 5-8, 9-12, 13-16 என்ற வயதுவரம்பில்போட்டிகள் நடைபெறும்.ஜுன் 17-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு குரலிசை போட்டி, பரதநாட்டியபோட்டி, கிராமியநடனப்போட்டி நடைபெறும். குரலிசை போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்குபெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள்பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப்போட்டியில் அதிகபட்சம் 3நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமாபாடல்களுக்கான நடனம்மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. கிராமிய நடனப்போட்டியில் நமதுபாரம்பரிய கரகம், காவடி , பொய்க்கால்குதிரை போன்ற நடனங்கள் மட்டும் ஆடப்பெறவேண்டும்.

    மதியம் 2 மணிக்கு ஓவியப்போட்டி நடைபெறும். ஓவியத்தாள், வண்ணங்கள்தூரிகைகள்உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டுவருதல் வேண்டும்.தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

    பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்புசான்றிதழ் வழங்கப்படும். 9-12, 13-16 என்ற வயது வரம்பில் முதல் பரிசு பெறும் சிறார்கள் அரசின்செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர். மேலும் விவரம் வேண்டுவோர்கோயம்புத்தூர் மண்டலக் கலைபண்பாட்டு மைய அலுவலகத்தை 0422 2610290, 94422 13864 ஆகியஎண்களில்தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பேச்சு, நடனம் மற்றும் பாடல் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்தனர்.
    • வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    பெருமாநல்லூர் : 

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற இருக்கும் கலைப் போட்டியில் பங்கேற்க பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர் இதில் 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பேச்சு, நடனம் மற்றும் பாடல் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்தனர்.

    இதில் வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.இந்த தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    • பெங்களூரு, கேரளாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    திருப்பூர் :

    இக்னீஷியா என்கிற பெயரில் தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான போட்டி தொடங்கியுள்ளது.

    இதனை அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி தொடங்கி வைத்தார். அப்பேரல் பேஷன் டிசைன் துறை தலைவர் அருந்ததிகோஷல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், வாழ்த்தி பேசினார். பெங்களூரு, கேரளாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    முதல் நாள் முக ஓவியம், சிகை அலங்காரம், காய், பழங்களில் அலங்காரம் செய்தல், படத்தொகுப்பு, ஓவியம், மின்னணு கழிவுகளில் புதிய கண்டுபிடிப்பு, கழிவு பொருட்களில் கலை பொருட்கள் தயாரிப்பு, மெஹந்தி, நகத்தில் ஓவியம் தீட்டுதல், விளம்பர படம், குறும்படம் தயாரிப்பு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.2-ம் நாள் பேஷன் ஷோ, குழு நடனம், தனிநபர் நடன போட்டிகள் நடைபெற்றன.

    அனைத்து வகை இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிகள் அங்கேரிபாளையம் ரோடு, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வாய்ப்பாட்டிசை (செவ்வியல்), வாய்ப்பாட்டிசை, கருவி இசை (தாள வாத்தியம்), கருவி இசை (மெல்லிசை), நடனம் (செவ்வியல்), பாராம்பரிய நாட்டுப்புறக்கலை, காட்சிக்கலை (2டி), காட்சிக்கலை, மூன்று பரிமாணங்கள் (3டி), ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம், 430 பேர் பங்கேற்றனர். இறுதிநாளன்று நடனம் மற்றும் நாடகம் போட்டி நடந்தது.பாரம்பரியம் மற்றும் கிராமிய நடனத்தில் 120 பேரும், நாடகத்தில் 35 பேரும் பங்கேற்றனர்.

    • தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் குரலிசை கருவி, இசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 6000-ம், இரண்டாம் பரிசு ரூ.4500-ம், மூன்றாம் பரிசு ரூ. 3500-க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் குரலிசை கருவி, இசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டியில் 105 பேர் கலந்து கொண்டனர். குரலிசை போட்டியில் சங்கீதப்பிரியா முதலிடம் பிடித்தார். இரண்டாமிடம் கமிர்லானி, மூன்றாமிடம் ஜெயஸ்ரீதேவியும் பிடித்தனர். இதேப்பபோல் பரதநாட்டியம் போட்டியில் முதலிடம் லக்சா சிவகுமார், இரண்டாமிடம் தேவிபிரியா, மூன்றாமிடம் ஜான்சிபெசியா, கருவியிசை போட்டியில் முதலிடம் சிவச்சந்திரன், இரண்டாமிடம் கீர்த்தனா, மூன்றாமிடம் ச இந்திரஜித், கிராமிய நடனம் போட்டியில் முதலிடம் மோசஸ் , இரண்டாமிடம்நாகார்ஜுன், மூன்றாமிடம் விஷாலிபிரியா, ஓவிய போட்டியில் முதலிடம்அபினேஷ், இரண்டாமிடம்அல்காலிக், மூன்றாமிடம் மனோஜ் ஆகியோர் பெற்றனர்.

    இந்த 15 வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 6000-ம், இரண்டாம் பரிசு ரூ.4500-ம், மூன்றாம் பரிசு ரூ. 3500-க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மண்டலக் கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×