என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர்"

    • போக்குவரத்துதுறை அமைச்சர் தவறான தகவல்களை தருகிறார்.
    • தமிழகத்தின் கடன்சுமையை இந்த அரசு உயர்த்தி விட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சசிகலா மற்றும் அவரது தம்பி திவாகரன் ஆகியோர் சாமிதரிசனம் செய்ய வந்தனர்.

    அவர்கள் 2 பேரும் கோவிலில் உள்ள சாமி சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர். அதன்பிறகு சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போக்குவரத்துதுறை அமைச்சர் தவறான தகவல்களை தருகிறார். தற்போதைய அரசு பஸ்களில் மக்கள் ஏறுவதற்கே பயப்படுகின்றனர். அரசு பஸ்களின் நிலை மோசமாக தான் உள்ளது.

    வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். மாற்றம் கண்டிப்பாக இருக்கும். ஆளும் தி.மு.க. அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. அதற்கு ஆண்டுதோறும் வட்டி கட்டி கொண்டிருந்தால் எப்படி மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்க முடியும். இவர்கள் வட்டி கட்ட முடியாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கி கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தின் கடன்சுமையை இந்த அரசு உயர்த்தி விட்டது.

    மேலும் இவர்கள் திட்டங்களை கொண்டு வந்து அதில் பெருமளவு கமிஷன் பெற்று கொள்கிறார்கள். அப்படி கமிஷன் பெறுவதால் ஒப்பந்ததாரர்களால் அந்த பணியை முடிக்க முடியவில்லை. பேரூராட்சிகளை நகராட்சிகளாக்கும் பணிகளில் இந்த அரசு மிக தீவிரமாக உள்ளது. பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்றிய பிறகு 3 மடங்கு, 4 மடங்கு வரிகட்டும் நிலை பொதுமக்களுக்கு ஏற்படும்.

    தி.மு.க. அரசு ஒவ்வொரு பொதுமக்களின் வீட்டை தட்டி வரி வசூலிப்பதிலேயே குறியாக உள்ளது. சொத்துவரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தி.மு.க. அரசு உயர்த்திவிட்டது. இதனால் விலைவாசி அதிகமாக உயர்ந்து பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த தி.மு.க. அரசிடம் இருந்து தமிழக மக்களுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் துர்காலயா சாலையை சேர்ந்த மகாலிங்கம் மகன் அசோக்குமார். இவர் எல்லையம்மன் கோவில் சன்னதி தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென கடையில் வைக்கப்பட்டிருந்த யு.பி.எஸ் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் மளமளவென பற்றி எரிந்தது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

    இதில் பெரும்பாலான தங்க நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்ததால் தப்பித்தது. இருந்தாலும் கடை ராக்கரில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் தீயில் உருகி சேதமானது என்று நகைக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.

    இந்த தீ விபத்து குறித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
    • மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது.

    திருவாரூரில் வானில் திடீரென ஒலித்த பலத்த சத்தத்தால் மக்கள் பீதியமடைந்துள்ளனர். சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.

    மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது. சத்தம் கேட்ட அதே நேரத்தில் விமானமும் சென்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி காரணமாக சத்தம் எழுந்ததாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனம் விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும், "பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டனர்" என்றார்.

    • மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
    • போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாகவும், சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் அதிரடியாக தனியார் தங்கும் விடுதியில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த பால கோலானு விஷ்ணுவர்த ரெட்டி என்பவரின் ஆதார் அடையாள அட்டையை கொடுத்து இந்த தனியார் தங்கும் விடுதியில் 2 கார்களில் வந்த 5 பேர் தங்கியுள்ளது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் கைது செய்தனர்.

    மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தங்கும் விடுதிக்குள் சென்ற போது, 5 பேரை அழைத்துச் செல்வதற்காக வந்த நபர் அங்கிருந்து தப்பி விடுதியின் கேட்டில் ஏறி சாலையில் ஓடிவிட்டார்.

    அவரை பின்தொடர்ந்து போலீசார் ஒருவரும் விரட்டி பிடிக்க முயற்சி செய்கிறார். இந்த சி.சி.டி.வி. காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கஞ்சா முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் வழியாக படகு மூலமாகவும் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து படகுகள் மூலமாகவும் இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் தெரிகிறது.

    மேலும் இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த இந்த நபர்களிடமிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சாவை பெற்று இலங்கைக்கு அனுப்பி இருக்கலாம் என்கிறரீதியிலும் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேரிடம் தனியார் தங்கும் விடுதியில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா தொடர்ந்து எவ்வாறு பல சோதனை சாவடிகளை கடந்து எடுத்து வரப்படுகிறது என்பது குறித்தும் இதுவரை இந்த கும்பல் எத்தனை முறை இதே போன்று இலங்கைக்கு கஞ்சா கடத்தி இருக்கிறது என்பது குறித்தும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று திருவாரூர் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • மர நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற முழுக்கமிட்டு இந்த விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
    • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தின் தாளாளர் வெங்கடராஜூலு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகம் ஏற்ப 500 மரக்கன்று களை கல்லூரி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மர நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் பிளாஸ்டி க்கை ஒழிப்போம் என்ற முழுக்கமிட்டு இந்த விழிப்புணர்வு பேரணி துவங்கியது.

    இதில் கல்லூரியின் செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் மேம், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் மற்றும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் துணை முதல்வர்கள் துறை தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
    • மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் களப்பால் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி 400மீ குழாய் அமைப்பு மற்றும் மின்விசை அறை ஆகியவற்றை ஓ.என்.ஜி.சி செயல் இயக்குனர் அனுராக் தலைமையில் செல்வராஜ் எம்.பி. திறந்து வைத்து ஊராட்சியிடம் ஒப்படைத்தார்.

    இவ்விழாவில் மாரிமுத்து எம்.எல்.ஏ, கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் சுஜாதா பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி பாலசுந்தரம், ஓ.என்.ஜி.சி பொறியியல் துறை அதிகாரி சுதிஷ், பொது மேலாளர் சம்பத், ஏரியா மேனேஜர் சரவணன், மேலாளர் கண்ணன், கட்டுமானபிரிவு மேலாளர் ரெத்தினம், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தம், கார்த்தி கேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்குப் பகுதியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பொதுமக்களின் மழை மற்றும் வெள்ளக்கால பயன்பாட்டிற்காக, ஓ.என்.ஜி.சி சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு தங்கும் முகாம் கட்டிடங்களை ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குனர் அனுராக் முன்னிலையில் செல்வராஜ் எம்.பி. மற்றும் மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த செல்வராஜ் எம்.பி., அவை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளதால் மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.

    இவ்விழாவில் ஒன்றி யப் பெருந்தலைவர்பாஸ்கரன், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி ராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரெத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கார் மூலம் திருச்சி செல்லும் முதல்-அமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
    • முதல்-அமைச்சரின் 4 நாள் பயணம் நாளையுடன் நிறைவடைகிறது.

    திருவாரூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு 4 நாள் பயணமாக வந்துள்ளார்.

    நேற்று திருக்குவளையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், நேற்று மாலை நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆய்வு செய்தார்.

    இன்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு திருவாரூர் வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்குகிறார்.

    மாலையில் சிறிது ஓய்வெடுக்கும் முதலமைச்சர் நாளை (27.8.23) திருவாரூர் அருகில் உள்ள பவத்தரமா ணிக்கத்தில் நடைபெறும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற நான்கு நாள் பயணம் நாளையுடன் நிறை வடைகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை ஒட்டி திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது. மேலும் நாளை மாலை வரை திருவாரூர் பகுதியில் டிரோன்கள் பறக்க கூடாது என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

    • இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.
    • இதன்மூலம் சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.

    சைவத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத் திருநாள் பண்டைய காலந் தொட்டே கொண்டாடப்பட்டு வந்தது என்பதை புராணங்கள் வாயிலாக நாம் அறியலாம்.

    சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மையை ஒரு பங்குனி உத்திர திரு நாளில் தான் மணம் செய்தார் என புராணங்கள் பேசுகின்றன.

    எனவே இந்நாளில் சிவாலயங்களில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது மரபு.

    இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.

    இதை நாயன்மார்களின் வாழ்வின் மூலம் அறியலாம்.

    இறைவனின் தோழராக போற்றப்படும் சுந்தரர் பங்குனி உத்திரநாளில் திருவாரூர் சென்று தியாகராஜரின் திருமண வைபவத்தை கண்டு தரிசிப்பது வழக்கம்.

    சுந்தரமூர்த்தி நாயனர் தம் துணைவியார் பரவையாரை விட்டுப்பிரிந்து திருவொற்றியூரில் சங்கலியாரைத் திருமணம் செய்து கொண்ட காலத்தில் பங்குனி உத்திர விழாவன்று திருவாரூர் செல்ல முடியாத நிலையில்,

    தன் தோழரான சிவபெருமானிடமே பங்குனி உத்திரத்தன்று தியாகராஜர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் தன் விருப்பதைச் சொல்லி பரவையாரிடம் தூது அனுப்பியதாக பெரிய புராணம் பேசுகிறது.

    இவ்வரலாற்றில் இருந்து சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.

    • எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.
    • இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

    இங்கு சிவன் சயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி. 850-ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும் கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 133-வது தேவாரத்தலம் ஆகும்.

    ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் கவசமிட்ட கொடிமரம் பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, நட்டுவன், பிள்ளையார் சந்திடு தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார்.

    மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மூலவர் சிவலிங்கத் திருமேனி சுயம்பு-சற்று தடித்த உயர்ந்த பாணம், உள் சுற்றில் வெண்ணெய் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன.

    தெற்கு நோக்கிய சன்னதியில் எமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம் கதை சூலம் ஏந்தி இடதுகாலை மடித்து வலதுகாலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தாகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலாவடிவம் உள்ளது. மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர். மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம். பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.

    தலபெருமை:

    கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும் கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். குப்த கங்கை ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழிகூற வேண்டும் என வேண்டினாள் அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோச்சனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.

    அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும். காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த தங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியைவிட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது

    கார்த்திகை ஞாயிறு:

    தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர், இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார் ஸ்ரீயை வாஞ்சித்து (ஸ்ரீ என்ற மகாலட்சமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆனது. இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால் நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை

    கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில் இங்கு அபயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள். துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள். ராகுவும் கேதுவும் ஓரே வடிவில் இருப்பதை இக்கோயிலில் மட்டுமே. காண முடியும் என்று கூறப்படுகிறது.

    யோக நிலையில் எமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார் எமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம் காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    தலவரலாறு

    எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும்போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார் என்று எமதர்மராஜா மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இன்றவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, `வேண்டும் வரம் கேள் என்றார்

    அதற்கு எமனும், `இறைவர் அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர் திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் ரோத பிரம்மா பிடித்து என்னை வாட்டுகிறது பாவமும் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை என்றார்.

    எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், `எமதர்மனே இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என்று கூறமாட்டார்கள் நோய் வந்ததாலும் வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என்றும் கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும் நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமடுக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு. மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய் இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்னரே என்னை தரிசிப்பார்கள் என்று அருளினார். அதன்படி இங்கு எமதர்ம ராஜனுக்கே முதல் வழியாடு நடக்கிறது.

    திறக்கும் நேரம்:

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    முகவரி:

    அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீவாஞ்சியம்  610 110 திருவாரூர் மாவட்டம்.

    • தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன்.
    • மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று மாணவி தெரிவித்தார்.

    மின் வசதி இன்றி குடிசை வீட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் 2ம் பிடித்த அரசுப்பள்ளி மாணவி துர்காதேவியின் வீட்டிற்கு இலவச மின்சார இணைப்பு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும் மாவட்ட அளவில் 2ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை பாலா மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    மாணவி துர்கா தேவி கூறுகையில், "தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் தொடர்ந்து சார்ஜர் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன். எனவே என்னுடைய வீட்டிற்கு மின்சார வசதி கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த தகவல் அறிந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று மாணவியின் வீட்டை ஆய்வு செய்தனர். பின்னர் மாணவியின் வீட்டின் முன் 3 மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு தந்துள்ளனர்.

    இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாணவி, என்னுடைய நோக்கம் மருத்துவராக வேண்டும் என்பதுதான், மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

    • மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கோட்டகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். கூலித் தொழிலாளி. இவரது மகன் மதன்ராஜ் (வயது 15). இவர் மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் மாரியம்மன் கோவிலில் ஆனி மாத திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறுவதை ஒட்டி கோவில் திருவிழாவிற்காக மதன்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் ரூபன் (21) சஞ்சய் ( 19), சித்தார்த்தன் (22) ஆகியோர் கோவிலின் அருகே பேனர் வைத்தனர்.

    அப்போது அந்த பேனர் மேலே சென்ற மின் கம்பி உரசியதில் 4 பேர் மீதும் மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

    உடன் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மதன்ராஜ் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவித்தனர். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இறந்த மதன்ராஜ் உடலை உடற்கு ஆய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது கோவில் திருவிழாவில் பேனர் வைக்கும் பொழுது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது.

    திருவாரூர்:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நேற்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது. அவ்வப்போது தூறல் மழை பெய்து வந்தது. நேற்று மாலை முதல் அங்கு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் திருவாரூரில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ×