என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழில்அதிபர்"
- வெளியூர் சென்ற சமீரன் சிக்தரும், அவரது குடும்பத்தினரும் ஊர் திரும்பவில்லை என்பதால் பதறி போன உறவினர்கள் கான்கர் போலீசில் புகார் செய்தனர்.
- கான்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் சமீரன் சிக்தரையும் அவரது குடும்பத்தினரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ராய்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் பகுதியை சேர்ந்தவர் சமீரன் சிக்தர் (வயது 29), தொழில் அதிபர்.
சமீரன் சிக்தருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் இவருக்கு தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது.
இதனை சரிகட்ட சமீரன் சிக்தர் பலரிடமும் கடன் வாங்கினார். வங்கியிலும் லோன் எடுத்தார். இதில் அவருக்கு ரூ.35 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை திருப்பி கேட்டு வங்கிகளும், நண்பர்களும் நெருக்கடி கொடுத்தனர்.
சமீரன் சிக்தர் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதற்கான தவணை தொகையை அவர் முறையாக கட்டி வந்தார். தற்போது அவருக்கு கடன் நெருக்கடி ஏற்பட்டதால் இந்த தவணையையும் கட்ட முடியாமல் அவர் தவித்தார்.
அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இன்சூரன்ஸ் எடுத்திருப்பதால் அவர் இறந்தால் குடும்பத்திற்கு ரூ.72 லட்சம் பணம் கிடைக்கும். எனவே இந்த பணத்தை பெற என்ன செய்யலாம் என மீண்டும் தீவிரமாக யோசித்தார்.
இதில் தொழில் அதிபர் சமீரன் சிக்தர் மனதில் ஒரு திட்டம் உருவானது. அதன்படி விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடினால் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் பணம் ரூ.72 லட்சம் கிடைக்கும். அதில் ரூ.35 லட்சத்தை கடன்காரர்களுக்கு கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொண்டு தொழிலை விரிவுப்படுத்தலாம் என முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 1-ந்தேதி சமீரன் சிக்தரும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் ஒரு காரில் சார்மா பகுதிக்கு சென்றனர்.
அங்கு தனது நாடகத்தை சமீரன் சிக்தர் அரங்கேற்றினார். அவர் சென்ற காரை ஒரு மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது போல் சித்தரித்தார். பின்னர் அந்த காரை தீவைத்து எரித்து விட்டு சென்று விட்டார்.
வெளியூர் சென்ற சமீரன் சிக்தரும், அவரது குடும்பத்தினரும் ஊர் திரும்பவில்லை என்பதால் பதறி போன உறவினர்கள் இதுபற்றி கான்கர் போலீசில் புகார் செய்தனர்.
கான்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் சமீரன் சிக்தரையும் அவரது குடும்பத்தினரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அவரது கார் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
காரில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று போலீசார் கண்டுபிடிக்க முயன்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் தொழில் அதிபர் சமீரன் சிக்தர் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் அனைவரும் அலகபாத், பாட்னா, கவுகாத்தி, ராஞ்சி ஆகிய நகரங்களில் சுற்றிதிரிவது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலமும், சமீரன் சிக்தர் பயன்படுத்திய செல்போன் மூலமும் இதனை கண்டுபிடித்த போலீசார், அவரை அதிரடியாக தொடர்பு கொண்டனர். பின்னர் அவரை உடனே ஊருக்கு வருமாறு அழைத்தனர். போலீசார் தன்னை கண்டுபிடித்ததை அறிந்து கொண்ட சமீரன் சிக்தர் நேற்று ஊர் திரும்பினார். இதன்மூலம் அவரது நாடகம் முடிவுக்கு வந்தது.
- 3 தனிப்படை போலீசார் தேடுகிறார்கள்
- பெண் ஊழியர் எரித்துக்கொலை செய்யப்பட்டார்
கோவை, ஜூன்.5-
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 50). தொழில் அதிபரான இவர் கோவை மட்டுமல்லாமல் ஈரோட்டிலும் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஈரோட்டில் உள்ள நிறுவனத்தில் பவானியைச் சேர்ந்த 37 வயது பெண் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டுக்கு வந்தார். அதன்பின் தீக்காயங்களுடன் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நவநீதன் வீட்டுக்கு சென்ற அந்த பெண் மருத்துவச் செலவுக்கு அந்த பெண் பணம் கேட்டதாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அந்த பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தன்னை தொழில் அதிபர் நவநீதன் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் தொடர்ந்து 6 முறை கர்ப்பம் ஆனேன். 6 முறையும் மிரட்டியே எனது கர்ப்பத்தை கலைக்கச் செய்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நான் மருத்துவ உதவிக்காக பணம் கேட்டுச் சென்றேன். அங்கு நவநீதனும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து என் மீது தீவைத்து எரித்தனர் என கூறியிருந்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீசார் தேடுவதை அறிந்து நவநீதன், கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ஆர்.எஸ்.புரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் நாளை கோவை மாஜிஸ்திரேட்டு கோர்டடில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
இதற்கிடையே நவநீதனின் மனைவி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெண் ஊழியர் கொலை வழக்கை விசாரித்து வரும் 3 தனிப்படை போலீசார் நவநீதன் மனைவியை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்