search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு"

    • உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.
    • . இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.

    உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.ஆள் பாதி ஆடை பாதி என்று பழமொழியே உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் வெளிநாட்டு உடைகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். முக்கியமாக தென்னிந்தியாவில் வீட்டில் அணிந்து கொள்ளும் லுங்கிக்கு பதிலாக தற்போதுள்ள இளைஞர்கள் ஷார்ட்ஸ் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில், இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் தெருக்களில் ஒரு பெண் லுங்கி அணிந்து நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    பல ஆண்டுகளாக லண்டனில் வசிக்கும் இந்தியத் தமிழரான வலேரி, @valerydaania என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். வீடியோவில், வலேரி ஸ்டைலாக நீல நிற செக்டு லுங்கியும் டி-ஷர்ட்டும் அணிந்து லண்டன் தெருக்களில் நடந்து சென்று ஒருசூப்பர் மார்கெட்டுக்குள் நுழைகிறார். அவரின் வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.

     

    இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வலேரியின் முயற்சியை பாராட்டினர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.  

    • மன்னார்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தீவனங்கள் வழங்கப்பட்டது.
    • நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    அதன்படி மன்னார்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தீவனங்கள் (அன்னதானம்) வழங்கப்பட்டது. நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

    மன்னார்குடி அரசினர் மருத்துவமனையில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு டாக்டர்கள் என்.விஜயகுமார், கோவிந்தராஜன், அசோகன் ஆகியோர் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

    மன்னார்குடி சஞ்சீவிராயர் தெருவில் உள்ள சஞ்சீவிராயன் வளாகத்தில் 28 ஏழை ெபண்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கி அன்னதானம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேற்படி விழாக்களில் மிட்டவுன் ரோட்டரி தலைவர் டி.ரெங்கையன், மண்டல இணை இயக்குனர் கால்நடை டாக்டர் ஐ.தனபாலன், மருத்துவமனை டாக்டர் ராகவி, உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார், ரோட்டரி கால்நடை மருத்துவ முகாம்கள் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கால்நடை அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் முன்னாள் தலைவர்கள் கே.திருநாவுக்கரசு, எம்.நடராஜன், ஜி.சிவக்கொழுந்து, ஆர்.மாரியப்பன், உடனடி தலைவர் சி.குருசாமி, என்.சாந்தகுமார், ஆர்.கே.பாலகுணசேகரன், பொருளர் டி.அன்பழகன், ஹரிரவி, பன்னீர்செல்வம், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலர் வி.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ரோட்டரி 2981 மாவட்டத்தில் உள்ள 137 சங்கங்களில் கால்நடைகளுக்கு அன்னதானம் வழங்கிய முதல் சங்கம் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் என்பது குறிப்பிடதக்கது.

    • வண்டிக்காரத்தெருவில் தொடர் மின்தடை ஏற்பட்டது.
    • நகரின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரு கேயுள்ள ஆா்.எஸ்.மடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சக்கரக்கோட்டை, பட்டணங்காத்தான், ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று 10 மணிக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகே மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்பட்டது. புதிய பஸ் நிலையப் பகுதி, வண்டிக்காரத் தெரு, இளங்கோவடிகள் தெரு உள்பட முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் மாலை 4 மணி வரையில் இல்லை. நகரின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    நகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், மாவட்டக் கிளைச் சிறை, வங்கிகள், மருத்துவமனை அமைந்துள்ள வண்டிக்காரத் தெரு பகுதி யில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டதாகப் புகாா் கூறினா்.

    இது குறித்து உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் கேட்டபோது, ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. ஆகவே வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட பகுதி களில் குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை என்றனா்.

    ×