என் மலர்
நீங்கள் தேடியது "புழல் ஏரி"
- கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஏரிகளிலும் 9.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.
- சென்னையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொடர்ந்து எடுக்கப்படுவதால் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்துள்ளது.
சென்னை:
புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி. ஆகும்.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 2.71 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. புழல் ஏரியில் 2.51 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் 0.78 டி.எம்.சி. தண்ணீரும், சோழவரம் ஏரியில் 0.18 டி.எம்.சி. தண்ணீரும், தேர்வாய் கண்டிகை ஏரியில் 0.50 டி.எம்.சி. தண்ணீரும் இருப்பில் உள்ளது.
5 ஏரிகளிலும் மொத்தம் 6.68 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த நீரை வைத்து சென்னையின் குடிநீர் தேவையை 6 மாதங்கள் பூர்த்தி செய்ய முடியும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஏரிகளிலும் 9.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.
தற்போது கடந்த ஆண்டை விட 2.82 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக உள்ளது. மேலும் சென்னையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொடர்ந்து எடுக்கப்படுவதால் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி இந்த 5 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். அதன் மூலம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உபரி நீர் திறந்துவிடுவதை ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி பார்வையிட்டார்
- புழல் ஏரியில் இருந்து பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர் திறந்துவிடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முதல்கட்டமாக ஏரியில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர் மழை காரணமாக, புழல் ஏரியில் இருந்தும், பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
- புழல் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 391 கன அடியாக குறைந்து உள்ளது.
- பலத்த மழை இல்லாவிட்டால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த 2 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நேற்று மாலை உபரி நீர் திறக்கப்பட்டது.
முதலில் 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் 2 ஏரிக ளிலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி புழல் ஏரியில் இருந்து 292 கன அடி தண்ணிர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 198 கன அடி நீர் வெளியேறி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.
புழல் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 391 கன அடியாக குறைந்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,726 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 21.20 அடி நீர்மட்டத்தில் 18.58 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1180 கன அடியாக இருந்த நீர்வரத்து 811 கன அடியாக குறைந்து இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,817 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரியின் 24 அடி நீர்மட்டத்தில் 20.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
தொடர்ந்து பலத்த மழை இல்லாவிட்டால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். உபரி நீர் வெளியேறும் கரையோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
- கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது.
- புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் உள்ளன. கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த 2 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்ததால் 2 ஏரிகளில் இருந்தும் 100 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,730 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. நேற்று 84 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 141 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.
ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 21 அடியில் 18.60 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 292 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 2,668 மி.கன அடி தண்ணீர் உள்ளன. நேற்று 33 கன அடி ஆக இருந்த நீர்வரத்து தற்போது 219 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 20.26 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
ஏரியில் இருந்து 70 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வரும் நாட்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரண்டு ஏரிகளில் இருந்தும் தலா 100 கன அடி உபரி நீரை வெளியேற்ற முடிவு.
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளை திறக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரு ஏரிகள் மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரண்டு ஏரிகளில் இருந்தும் தலா 100 கன அடி உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பெய்த பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது.
- சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மி.கன அடியில் 823 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
சென்னை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பெய்த பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது.
இதையடுத்து பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து கடந்த வாரம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது மழை இல்லாததால் ஏரிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதனால் உபரி நீர் திறப்பும் குறைக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளும் மொத்தம் 10 ஆயிரத்து 133 மி.கன அடி தண்ணீர் (10.1 டி.எம்.சி.) உள்ளது.
கடந்த வாரம் 9-ந்தேதி நிலவரப்படி ஏரிகளில் மொத்தம் 8,630 மி.கனஅடி (8.6 டி.எம்.சி.) தண்ணீர் இருந்தது. கனமழை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் குடிநீர் ஏரிகளுக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதே நாளில் 11 ஆயிரம் மில்லியன் கன அடியை தாண்டி தண்ணீர் (11 டி.எம்.சி.) தண்ணீர் இருந்தது. கடந்த ஆண்டை விட 1 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது என்றாலும் அடுத்த ஆண்டு முழுவதும் சென்னை நகர மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்திலும் பலத்த மழை கொட்டி இருப்பதால் அங்குள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் தற்போது 3,164 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு 59 கன அடி தண்ணீர் வருகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. இதில் 2,776 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 391 கன அடி தண்ணீர் வருகிறது. 287 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மி.கன அடியில் 823 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 38 கன அடி நீர் வருகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி ஆகும். இதில் 2,836 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 2,303 மி.கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு 2,150 கன அடி தண்ணீர் வருகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது.
- தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரத்து 138 பாசன ஏரிகள் உள்ளன.
- சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் குடிநீர் சேமிப்பு 11 டி.எம்.சி.யை கடந்துள்ளது.
சென்னை:
இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் மழையே வடகிழக்கு பருவமழை காலமாகும். இதன்மூலம் தமிழகம் 60 முதல் 70 சதவீதம் வரை மழை பெறுகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த அக்டோபர், நவம்பர் மற்றும் இம்மாதத்திலும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து கடந்த 18-ந்தேதி வரை பெய்த மழை அளவு 425.1 மில்லி மீட்டராகும். ஆனால் இயல்பான மழை அளவு என்பது 419 மில்லி மீட்டராகும். இயல்பை விட 1 சதவீதம் மட்டுமே கூடுதலாக மழை பெய்துள்ளது.
இருந்தாலும் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் இவற்றுடன் தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் நீர் நிலைகளிலும் நீர் வரத்து அதிகரித்தது.
தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரத்து 138 பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் இதுவரை 4,647 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. 2 ஆயிரத்து 790 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 2 ஆயிரத்து 820 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 2 ஆயிரத்து 188 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 1,607 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி (13.22 டி.எம்.சி.) இதில் தற்போது 11 ஆயிரத்து 358 மில்லியன் கன அடி (11.358 டி.எம்.சி.) நீ்ர் இருப்பு உள்ளது. இது 85.91 சதவீதமாகும்.
தமிழகம் முழுவதும் உள்ள மேட்டூர் உள்ளிட்ட அணைகள், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ளிட்ட 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன அடியாகும் (224.297 டி.எம்.சி.). ஆனால் நேற்றைய நிலவரப்படி தற்போது 2 லட்சத்து 2 ஆயிரத்து 490 மில்லியன் கன அடி (202.490 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. இது 90.28 சதவீதமாகும்.
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் குடிநீர் சேமிப்பு 11 டி.எம்.சி.யை கடந்துள்ளது. இதனால் அடுத்த 11 மாதங்களுக்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.
தற்போது ஏரிகளில் போதுமான நீர் சேமிக்கப்பட்டு வருவதால் சென்னை மாநகர பகுதிகளுக்கு 1,007 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வினியோகம் செய்யப்படுகிறது. இதே அளவு குடிநீர் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக 10 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது.
- ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த மாதம் முதல் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
இதனால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக 10 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. இதேபோல் புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இன்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 10 ஆயிரத்து 793 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 91.8 சதவீதம் ஆகும்.
இதற்கிடையே ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த மாதம் முதல் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 35 அடி முழுவதும் நிரம்பி உள்ளதால் அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் 550 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மேலும் அதிகரித்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23 அடியை நெருங்கி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.68 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
ஏரிக்கு 246 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 130 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இதில் 19.69 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் 2,950 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 351 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 187 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வருகிறது. 803 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,081 மி.கனஅடியில் 837 மி.கன அடி தண்ணீரும். கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கன அடியில் 486 மி.கன அடி தண்ணீரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
- புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3158 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழை நீர், பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர்வரத்து அதிகமானதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து முழுவதும் நிரம்பியது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 13-ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரு ஏரிகளுக்கும் வினாடிக்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே பூண்டி ஏரியில் போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதை கருத்தில் கொண்டு இன்று காலை முதல் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. புழல் ஏரிக்கு மட்டும் வினாடிக்கு 240 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 33.82 அடி ஆக பதிவானது. ஏரியில் 2.767 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரி யத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 3424 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3158 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. புழல் ஏரியும் 95 சதவீதம் நிரம்பி இருப்பதால் வரும் நாட்களில் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கும் தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்படும். எனவே கண்டலேறு அணை யில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பும் வரும் நாட்களில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அதிகாரிகள் ஏற்கனவே ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பை நிறுத்தி உள்ளனர்.
- பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 240 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணாநீர் திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி. எம். சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
அதன்படி கடந்த நவம்பர் 28-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகமானது. ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ததால் நீர்வரத்து அதிகமாகி பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது.
போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.
இதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பை நிறுத்தி உள்ளனர். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 33.68 அடியாக பதிவானது. 2.724 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 240 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி விதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நவம்பர் 28-ந் தேதியில் இருந்து நேற்று இரவு வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3½ டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- ரெட்டேரி அருகே செல்லும் ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
- ஒப்பந்ததாரர்கள் 3 குழுவை வரவழைத்து குழாயை சீரமைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர்.
கொளத்தூர்:
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல் ஏரி உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீர் 2.5 மீட்டர் சுற்றளவு கொண்ட ராட்சத குழாய் மூலம் மாதவரம் வழியாக பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார் பேட்டை பகுதிகளுக்கும் ரெட்டேரி வழியாக அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் ரெட்டேரி அருகே செல்லும் இந்த ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
அதில் இருந்து வெளியேறி தண்ணீர் சுமார் 25 அடி உயரத்திற்கு அருவி போல் பீய்ச்சி அடித்து வெளியேறியது.
இந்த தண்ணீர் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அருவிபோல் வெளியேறிய தண்ணீர் முன்பு நின்றபடி தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவது பற்றி அறிந்ததும் திரு.வி.க. நகர் மண்டல பொறுப்பு பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் குடிநீர் குழாயில் உள்ள முக்கிய வால்வை அடைத்தனர். இதனால் உடைந்த பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறுவது குறைந்தது.
எனினும் ஏற்கனவே குழாயில் இருந்த தண்ணீர் முழுவதும் சாலையில் வெளியேறியது. சுமார் 3 மில்லியன் லிட்டர் தண்ணீர் வெளியேறியதாக கூறப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் 3 குழுவை வரவழைத்து குழாயை சீரமைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர்.
இதைத்தெடர்ந்து இரவு 11 மணியளவில் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இதன் பின்னர் தண்ணீர் வெளியேறுவது முழுவதும் நின்றது. இதையடுத்து வழக்கம்போல் போல் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
ரெட்டேரி பகுதியில் கால்வாய் நீர் வெளியேற பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையால் கான்கிரீட் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி தவறுதலாக குழாய் மீது இடித்ததால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியதாக கூறப்படுகிறது. தண்ணீர் வெளியேறுவது கண்ட லாரி டிரைவர் பதட்டத்தில் லாரியை அங்கிருந்து ஓட்டிச்சென்றதாக தெரிகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதை பார்க்க ஏராளமானோர் திரண்டதால் ரெட்டேரி பகுதியில் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்ததால் கடந்த மாதம் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
- பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. இதில் 2,474 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழை நீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்புவது வழக்கம்.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்ததால் கடந்த மாதம் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இணைப்பு கால்வாய் வழியாக 150 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. இதில் 2,474 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கனஅடி. இதில் 2,957 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக 185 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.