search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடி"

    • பணத் தகராறு காரணமாக ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • மதேகஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த வீடுகளில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து வைரலாகத் தொடங்கியது.

    லக்னோவில் பணத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஐந்து பேர் சேர்ந்து ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மதேகஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த வீடுகளில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து வைரலாகத் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பூட்டும் அந்த வீடியோவில், ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து வந்து அவரை உதைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் துண்டுக்கட்டாக தூங்கி கீழே வீசியது பதிவாகியுள்ளது. அதிஷ்டவசமாக அந்த நபர் சிறிய காயங்களுடன் உயிர்பிழைத்தார்.

     

    இருப்பினும் அதற்குப் பிறகும் கீழே இறங்கி வந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தடுக்க முயன்றும் அவர்கள் தங்கள் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • அனுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • திர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    கேரள மாநிலம் வெள்ளறடை பகுதியை சேர்ந்தவர் விக்ரமன். இவரது மகன் அனு.

    இவர் கழுவன்திட்டை பகுதியில் செயல்பட்டு வரும் சலூண் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அனுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற அனு, செல்போன் பேசுவதற்காக கடையின் மேல் மாடிக்குச் சென்றுள்ளார். அங்கு மாடி சுவரில் இருந்து செல்போன் பேசும் போது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதில் அனுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அனு இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் பேசிய வாலிபர் கட்டிடத்தின் மேல் இருந்து விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே சுங்கான் கடை திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 61). இவரது சகோதரர் கணபதி (52). இருவரும் கோட்டார் இடலாக்குடி பகுதியில் கட்டிட வேலை செய்தனர்.

    அப்போது சொக்கலிங்கம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சொக்கலிங்கத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கோட்டார் போலீசில் கணபதி புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகர்கோவில்:

    தென்தாமரைகுளம் அய்யாகோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது45) கொத்தனார். இவருக்கு பாஞ்சாலி என்ற மனைவி உள்ளார்.

    முருகன் கடந்த 1-ந் தேதி தென்தாமரை குளம் பகுதியை சேர்ந்த சவுந்தர் என்பவரது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது வீட்டின் முதல் மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார் .

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் முருகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பாஞ்சாலி அளித்த புகாரின் பேரில் தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலியானான்.
    • ஆபத்தான நிலையில் இருந்த சுஜித் பரிதாபமாக இறந்தான்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள மேலதுலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி புவனாதேவி (வயது 31). இவர்களுக்கு 6 வயதில் சுஜித் என்ற மகன் இருந்தான். பகல் நேரங்களில் மகனை மாடியில் உள்ள அறையில் தூங்க வைத்து விட்டு புவனாதேவி வீட்டு வேலைகளை செய்வது வழக்கம்.

    அதன்படி சம்பவத்தன்று சுஜித்தை வீட்டின் மாடி அறையில் தூங்க வைத்து விட்டு கீழ் வீட்டில் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விழித்துக் கொண்ட சுஜித் தூக்க கலக்கத்தில் கீழே இறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். இதில் சிறுவன் படுகாயமடைந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த புவனாதேவி மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் இருந்த சுஜித் பரிதாபமாக இறந்தான்.

    மகன் உடலை பார்த்து பெற்றோர்கள், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×