search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெபமாலை"

    • 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலிக்கிறது
    • இந்த ஆலயம் 100-வது ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது.

    கன்னியாகுமரி :

    உலகிலேயே புனிதராக அறிவிக்கும் முன்பே சிறுமலர் தெரேசாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை புனித தெரேசா ஆலயம்.

    இந்த ஆலயம் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்றைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப் பட்டது. 1925 மே 17-ல் சிறுமலர் தெரேசா புனித ராக அறிவிக்கப்பட்டார். புனிதையின் (சிறுமலர் தெரேசா) உடன் பிறந்த 2 சகோதரிகளால் 1931-ம் ஆண்டு கண்டன்விளை ஆலயத்திற்கு தரப்பட்ட 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. புனிதையின் பேரருளிக்கம் (புனிதப்பண்டம்) ஆலயத்தில் உள்ளது. வருகிற 2024 ஏப்ரல் மாதம் இந்த ஆலயம் 100-வது ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது.

    இந்த நிலையில் கண்டன் விளை குழந்தை இயேசு வின் புனித தெரேசா ஆலயத்தில் 100 தொடர் ஜெபமாலை செய்து இறை வனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நாளை (14-ந்தேதி) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

    நாளை காலை 7 மணி முதல் 15-ந்தேதி மாலை 7 மணி வரை நடக்கும் இந்த ஜெபமாலை ஜெபம் நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ஜெபமாலை நிகழ்வை கண்டன்விளை கிளை பங்குகளான சித்தன் தோப்பு, பண்டாரவிளை, இரணியல் மற்றும் அன்பி யங்கள், சங்கங்கள், பக்தசபை இயக்கங்கள், திருத்தூது கழகங்கள், கண்டன்விளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு அருட்பணியாளர்கள் ஆகியோர் இணைந்து சிறப்பிக்கின்றனர்.

    தொடர் ஜெபமாலை முடிவில் 15-ந்தேதி மாலை 7 மணிக்கு காரங்காடு வட்டார முதல்வரும் கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாயஜஸ்டஸ் தலைமை யில் திருப்பலி நடைபெறுகிறது

    • வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப்பொய்கைநல்லூரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேராலயத்தின் உப கோவில்களில் புனித அந்தோனியார் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. முன்னதாக வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கொடி மற்றும் அந்தோணியார் சொரூபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் பேராலய அதிபரால் கொடி புனிதம் செய்யப்பட்டு கொடியேற்றபட்டது. இதனை தொடர்ந்து வண்ண மிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வரும் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது.

    • நாகர்கோவில் மேலத்தெரு கரை புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க ஆலய திருவிழா நேற்று தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • திருவிழா ஏற்பாடுகளை பங்குபேரவை பெருமக்கள் செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலத்தெரு கரை புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க ஆலயம் புகழ்பெற்ற ஆலயம் ஆகும். இக்கோவிலில் 791 ஆண்டுகளுக்கு முந்தைய புனித அந்தோணியாரின் அழியாத தோல் (திருப்பண்டம்) வைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலின் திருவிழா நேற்று 5 ஆம் தேதி தொடங்கியது. வருகிற   முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கல இசை இசைக்கப்பட்டு ஜெபமாலை நடத்தப்பட்டது. பிறகு பங்குத்தந்தை அருட்தந்தை மரிய ஜான் கொடியேற்ற விழாவை தொடங்கி வைத்தார் இரவில் அன்பின் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 2வது நாள் நிகழ்ச்சி நடக்கிறது மாலை 5 மணிக்கு புனித அந்தோனியார் நவநாள் நற்செய்திப் பெருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வருகிற 13-ஆம் தேதி 9வது நாள் முதல் திருவிருந்து வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல் நடைபெறுகிறது.

    மாலை 5 மணிக்கு வாத்தியார்விளை சந்திப்பு போலீஸ் குடியிருப்பு டவுன் ரயில்வே நகர் மாதா குடியிருப்பு வழியாக தேர்பவனி நடைபெறுகிறது.

    அதன் பிறகு புனித அந்தோ னியார் நவநாள் திருப்பண்டம் முத்தம் செய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    14ந் தேதி 10-ம் நாள் நிகழ்ச்சியாக நாகர்கோவில் மறைமாவட்ட குருக்கள் பங்குபெறும் திருப்பலி நடைபெறுகிறது பிறகு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து அன்பின் விருந்து வழங்கப்படுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரிய ஜாண் செயலாளர் சேவியர் பொருளாளர் தாசன் செய்தித்தொடர்பாளர் அருள் குமரேசன் மற்றும் பங்கு அருட்கன்னியர்கள் பங்குபேரவை பெருமக்கள் செய்து வருகிறார்கள்.

    ×