என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்வு"

    • புத்தளம் பேரூராட்சி கீழ புத்தளம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து மக்களுக்கு குடிநீர் வசதி செய்திட வேண்டும்
    • சாமிதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவ சுடுகாடு வழி செல்லும் சாலை பலப்படுத்தி மேம்பாடு செய்ய வேண்டும்.

    நாகர்கோவில்

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் உட்பட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் நீண்டகாலம் தீர்க்கப்படாத 10 பிரச்சினைகள் தொடர்பாக முதல்-அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    புத்தளம் பேரூராட்சி கீழ புத்தளம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து மக்களுக்கு குடிநீர் வசதி செய்திட வேண்டும்.தெரிசனம்கோப்பு பழையாற்றில் உறைகிணறு அமைத்து காட்டுப்புதூர் ஊராட்சி வரை பைப்லைன் நீட்டிப்பு செய்து கடுக்கரை, திடல், காட்டுப்புதூர் ஊராட்சிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். கேசவன்புத்தன்துறை ஊராட்சி புத்தன் துறை பாலன் ஏசு நடுநிலைப்பள்ளியில் பின்புறம் முதல் பொழிமுகம் வரை மழை நீர் ஓடை அமைக்க வேண்டும்.

    ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும். சாமிதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவ சுடுகாடு வழி செல்லும் சாலை பலப்படுத்தி மேம்பாடு செய்ய வேண்டும்.

    பள்ளந்துறை முதல் மணக்குடி ரோடு சீர் செய்தல் வேண்டும், தெள்ளாந்தி ஊராட்சிக்கு உட்பட்ட மண்ணடி கிராமத்திற்கு செல்லும் நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் பழுதடைந்துள்ளது உபரி நீர் வழிந்தோடியை சரி செய்து அதன் மேற்பகுதியில் புதிய பாலம் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும்.

    சுசீந்திரம் கவிமணி நகர் பகுதியில் பழையாற்றில் தடுப்புசுவர் அமைத்து சிறு பாலங்கள் அமைக்க வேண்டும் என்பது உட்பட 10 கோரிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக்அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
    • நாடு முழுவதும் இன்று லோக்அதாலத் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில்:

    தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக்அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காசோலை வழக்குகள், விபத்து காப்பீடு வழக்குகள்,குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் இன்று லோக்அதாலத் நிகழ்ச்சி நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, இரணியல், பூதப்பாண்டி, குழித்துறை ஆகிய 5 நீதி மன்றங்களில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான அருள் முருகன் தொடங்கி வைத்தார்.

    முதன்மை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நம்பிராஜன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், கூடுதல் சார்பு நீதிபதி அசன் முகமது, குற்றவியல் நீதிபதி தாயு மானவர், கிருத்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காசோலை வழக்குகள், காப்பீடு தொடர்பான வழக்குகள், குடும்ப நல வழக்குகள் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் இன்று 2084 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    • 68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார்.

    பல்லடம்  : 

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தொங்குட்டி பாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பிரியா நடராஜன் வரவேற்றார். பொங்கலூர் ஒன்றிய குழுத் தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மொத்தம்68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதம் 42 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிகழ்ச்சியின் போது விபத்தில் காயம் அடைந்த தொங்குட்டி பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் (வயது 61) என்பவர் ஆட்டோவில் இருந்து இறங்கி வர முடியாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். இதனை அறிந்த சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேரடியாக ஆட்டோவின் அருகில் சென்று அவருக்கு விபத்து உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார். தொடர்ந்து அவர் முகாமில் கலந்து கொண்டு பேசும்போது, கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தெரிவிப்பதுடன் அவர்களை தினசரி கண்காணித்து ஊக்கப்படுத்த வேண்டும். குப்பை இல்லாத ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மக்கள் தொடர்பு முகாமில் ஒன்றிய கவுன்சிலர் பாலுசாமி, ஊராட்சி துணைத் தலைவர் பத்மா ஆனந்தன், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், தனி தாசில்தார் (ஊட்டச்சத்து) கோவிந்தராஜ், (சமூக பாதுகாப்பு திட்டம்) பாபு, வருவாய் ஆய்வாளர் மா.கருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், ஊராட்சி செயலர் ஆனந்த் மற்றும் கால்நடை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு குறைதீர் முகாம்களில் 57 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நேற்று நடந்தன. இதில் பெரம்பலூர் தாலுகாவில் எளம்பலூரிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் தொண்டமாந்துறையிலும் (கிழக்கு), குன்னம் தாலுகாவில் புதுவேட்டக்குடியிலும், ஆலத்தூர் தாலுகாவில் மேலமாத்தூரிலும் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தன. முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 57 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • நீதிபதி வீ.ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.

    அரியலூர்:

    தேசிய அளவில் நுகர்வோர் வழக்குகளை தீர்க்க சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள், நுகர்வோர் ஆணையங்களில் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நீதிபதி வீ.ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் விசாரிக்கப்பட்ட 2 புகார்களில், விற்கப்பட்ட பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனையாளர்கள் வசூலித்து உள்ளது தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் கூடுதலாக பெறப்பட்ட தொகை மற்றும் இழப்பீடாக ரூ.1 லட்சம் தருவதற்கு மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.

    மற்றொரு வழக்கில் உற்பத்தி குறைபாடுள்ள செல்போனை விற்பனை செய்த கடைக்காரர் அதனை மாற்றி புதிய செல்போனை வழங்க மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு தீர்வு ஏற்பட்டது. சூரிய மின்சக்தி உபகரணத்தின் குறைபாடு ஏற்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அதனை வழங்கிய நிறுவனத்தினர் உபகரணத்தின் குறைபாடுள்ள பகுதிகளை மாற்றி இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக ஒப்புக்கொண்டனர்.

    மேலும் வீடு தீப்பற்றியதால் ஏற்பட்ட இழப்புகளுக்கு கொடுக்க வேண்டிய காப்பீட்டுத்தொகையை கொடுக்கவில்லை என்று காப்பீட்டு நிறுவனம் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், உயரதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று இரண்டு வார காலத்திற்குள் ரூ.5 லட்சத்தை புகார்தாரருக்கு வழங்க காப்பீட்டு நிறுவன மேலாளர், மக்கள் நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளார்.

    மேலும் சேவை குறைபாடு, கூடுதல் தொகை பெற்றது, நியாயமற்ற வணிக நடைமுறை, உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் குறைபாடு தொடர்புடைய 55 நுகர்வோர் புகார்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்கு மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த மக்கள் நீதிமன்ற அமர்வில் உறுப்பினராக வீரம் லாவண்யா பங்கேற்றார். இதில் அரசு வக்கீல் கதிரவன் உள்ளிட்ட வக்கீல்களும், புகார்தாரர்களும், எதிர் தரப்பினரும் என பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசாரின் சிறப்பு முகாமில் 29 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.

    பெரம்பலூர்

    மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், வளவன், சஞ்சீவ்குமார், ஜனனி பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 47 மனுக்களில், 29 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். எனவே இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு மணி தெரிவித்தார்.

    • பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
    • வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல்,மற்றும் வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம், பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 154 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 95 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு தொகையாக ரூ.2,31,98,192 வழங்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக காசோலை வழக்கில் ரூ.90,49,351வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல்,மற்றும் வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,120 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 10 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி இன்பகார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 100 குற்றவியல் வழக்குகளும், 164 காசோலை மோசடி வழக்குகளும், 185 வங்கிக் கடன் வழக்குகளும், 112 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 86 குடும்பப் பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 405 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 991 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 2,043 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

    இதில் 1060 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.2 கோடியே 99 லட்சத்து 34 ஆயிரத்து 270 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்கு களில் 850 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டது. இதில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ.78 லட்சத்து 14 ஆயிரத்து 850 வரை வங்கிகளுக்கு வரவானது.

    இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள்

    செய்திருந்தனர்.

    • அரியலூர் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 13ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • இதில் 4 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் மாவட்ட மூன்சிப் கோர்ட் நீதிபதி செந்தில்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவு, செந்தில்குமார், கற்பகவல்லி, ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் லதா, கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட் நீதிபதி கணேஷ், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜசேகரன், செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் முன்சீப் கோர்ட் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அக்னேஷ்ஜெயகிருபா, அரியலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 331 சிறு, குறு வழக்கு, 19 சிவில் வழக்கு, 4 மோட்டார் வாகன விபத்து வழக்கு, 1 காசோலை வழக்கு, 2 நுகர்வோர் கோர்ட் வழக்கு, 287 வங்கி வழக்கு, 2 நகராட்சி சம்பந்தப்பட்ட வழக்கு, 6,538 போக்குவரத்து காவல்துறை விதி மீறிய வழக்கு மற்றும் 484 நிலம் கையகப்படுத்துதல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 13,184 வழக்குகளில் ரூ.4.80 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.


    • குளித்தலை மக்கள் நீதிமன்றத்தில் 760 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • சிவில் வழக்குகள். வங்கி கடன் வழக்குகள்‌ என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

    குளித்தலை:

    குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் குளித்தலை வட்ட சட்டம் பணிகள் குழு நடத்தும் தேசிய மக்கள் நீதிமன்றமம் நீதிபதிகள் சார்பு நீதிபதி சண்முககனி, மாவட்ட உரிமையியல் நீதிபதி, பாலமுருகன், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 நீதிபதி தினேஷ்குமார், குற்றவியல் நடுவர் எண் 2 நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது.தேசிய மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நலம், வாகன விபத்துக்கள் இழப்பீடு வழக்கு, காசோலை மோசடி வழக்குகள், இடப் பிரச்சனை தொடர்பான சிவில் வழக்குகள். வங்கி கடன் வழக்குகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சமரசம் செய்ததில் 760 வழக்கு களுக்கு சம்பந்தப்ப ட்டவர்களிடம் சமரசம் பேசி தீர்வு காணப்பட்டு ரூ.5.63.70.551 தொகையாக முடிக்க ப்பட்டது.இதில் அரசு வழக்கறி ஞர்கள் சாகுல்ஹமீது, நீலமேகம் மற்றும் குழு வழக்கறிஞர் பாலசு ப்பிரமணியன், மோட்டார் வாகன விபத்து வழக்கறிஞர் நிகில்அரவிந்த், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி டிவிசனல் மேனேஜர் ராஜேந்திரன், கிளை மேலாளர் பாலசு ப்ரமணியன் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.குளித்தலை ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் குளித்தலை வட்ட சட்டம் பணிகள் குழு நடத்தும் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி சண்முக கனி விபத்தில் காயமடைந்த நபருக்கு இழப்பீடு வழங்கினார்,




    • புதுக்கோட்டை அருகே ெபாதுபாதை பிரச்சனையில் சுமூக தீர்வு காணபட்டது
    • கல்லறை என குறிப்பிடும் இடத்தில் யாரும் சுறறுசுவர் எழுப்ப கூடாது என முடிவு செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை,:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருங்களுர், முல்லைநகர் அருகே உள்ள இடத்தை முஸ்லீம் சமூகத்தினர் சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் அந்த இடத்தை முல்லை நகர் மக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி பொதுபாதையை மறித்து சுற்றுசுவர் எழுப்ப முயற்சி செய்துள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே பாதை பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு புதுக்கோட்டை தாசில்தார் விஜயலெட்சுமி தலைமையில் சமாதான கூட்டம் நடைப்பெற்றது. அதில் இருதரப்பினரும் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் ஏற்கனவே இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும், முஸ்லீம் தரப்பில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தடை செய்ய கூடாது, குறிப்பிட்ட இடம் அரசுக்கு சொந்தமான இடமாகும் பொதுபாதையை பயன்படுத்துவதை யாரும் தடை செய்ய கூடாது, கல்லறை என குறிப்பிடும் இடத்தில் யாரும் சுறறுசுவர் எழுப்ப கூடாது என முடிவு செய்யப்பட்டது. சமாதான கூட்டத்திற்கு பெருங்களுர்ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர், செந்தில், ஜெயராமன், சந்திரசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாத்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இலஞ்சி நான்கு முக்கு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
    • சாலையில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகில் உள்ள இலஞ்சி மிக முக்கியமான சாலையாகும். இலஞ்சி நான்கு முக்கு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குற்றாலம் வரும் பயணிகள் இந்த சாலையையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதான சாலையில் மிக முக்கியமான பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவ்வழியாக சாலையில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. பள்ளத்தில் மண்ணை கொட்டி பராமரிப்பு வேலைகளில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அதற்கு ஒரு நிரந்தர தீர்வு இல்லாமல் தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இரவு நேரத்தில் அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே உடனடியாக அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×