என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வானிலை ஆய்வு மையம்"

    • 15-ந்தேதி முதல் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் குஜராத்திலும் புதிய வெப்ப அலை வீசத் தொடங்கும்.
    • மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் வெப்ப அலையும் வீசுகிறது.

    நேற்று அதிகபட்சமாக குஜராத்தில் 107 டிகிரி வெயில் அடித்தது. இந்த நிலையில் டெல்லி மற்றும் வடமாநிலங்களில் வருகிற 18-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை மையம் கூறியதாவது:-

    15-ந்தேதி முதல் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் குஜராத்திலும் புதிய வெப்ப அலை வீசத் தொடங்கும். நாளை மற்றும் நாளை மறுநாளில் மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    16-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை சில கடுமையான வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளது. குஜராத், பஞ்சாப், அரியானா, டெல்லி, கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலை ஏற்படக் கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
    • காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து மழை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவி வந்தது. தற்போது அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளையும் அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து மழை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, 36 மணி நேரத்தில் உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்னதாகவே உருவானது குறிப்பிட்டத்தக்கது. 

    • நாளை இரவுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
    • காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதால் காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு. நாளை இரவுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவில வழக்கமாக 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும்.
    • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதம் வழக்கமான அதிகபட்ச வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும்.

    புதுடெல்லி:

    நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.இது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான அதிகபட்ச வெப்ப நிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும். இதைப்போல பெரும்பாலான பிராந்தியங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பை விட அதிகமாக இருக்கும்.

    அதேநேரம் மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் வழக்கமான வெப்பநிலை இருக்கும்.

    ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு சமவெளிப்பகுதிகளில் வழக்கத்தை விட 2 முதல் 4 நாட்கள் வரை கூடுதலான வெப்ப அலை நாட்கள் இருக்கும்.

    ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவில வழக்கமாக 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த முறை அதிக நாட்களை எதிர்பார்க்கலாம்.

    ராஜஸ்தான், குஜராத், அரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களும், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் வட பகுதிகளும் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்களை கொண்டிருக்கும்.

    இந்த காலகட்டத்தில் கிழக்கு உத்தரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில் 10 முதல் 11 வரை வெப்ப அலை நாட்கள் இருக்கும்.

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதம் வழக்கமான அதிகபட்ச வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும். எனினும் தெற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் சாதாரண வெப்பநிலை இருக்கலாம்.

    வடமேற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களை சேர்ந்த ஒருசில இடங்களை தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும்.

    இவ்வாறு மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறினார்.

    • தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மற்றும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இதன் எதிரொலியால், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நேற்று மற்றும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மஞ்சள் அலர்ட்டாக குறைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • சில இடங்களில் மிதமானதாகவும், சில இடங்களில் கன மழையாகவும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை, நவ.2-

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கிறது.

    நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சிறிது நேரம் ஓய்வதும் மீண்டும் கொட்டி தீர்ப்பதுமாக தொடர்கிறது.

    மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிவடைந்த பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. ஓரளவு தண்ணீர் தேங்கி னாலும் மழை ஓயும்போது வடிந்து விடுகிறது.

    ஆனால் உட்புற சாலை கள், தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மோட்டார் கள் மூலம் அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், செங்குன்றம், பூந்தமல்லி, மணலி, மாதவரம் உள் ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.

    சிறு சிறு கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அந்த தண்ணீர் சாலைகளை சூழ்ந்தது.

    சென்னையை பொறுத்த வரை 32 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 1-ந் தேதியன்று அதிகமழை பெய்துள்ளது. அதாவது நுங்கம்பாக்கத்தில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இதே நாளில் 13 செ.மீட்டரும், 1964-ம் ஆண்டு 11 செ.மீட்டரும் மழை பெய்து இருக்கிறது.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில இடங்களில் மிதமானதா கவும், சில இடங்களில் கன மழையாகவும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள வானிலை முன்னறி விப்பில் கூறி இருப்பதா வது:-

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இந்த மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் கூறப் பட்டுள்ளது.

    கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சுநிற அலர்ட் கொடுக் கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் வருமாறு:-

    சென்னை, செங்கல் பட்டு, காஞ்சீபுரம், ராணிப் பேட்டை, வேலூர், திருவண் ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி.

    கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட் டங்களில் இன்று 2-வது நாளாக பள்ளி கல்லூரி களுக்கு விடுமுறை விடப் பட்டு உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் வசிப் பவர்கள் கவனமாக இருக் கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார்கள்.

    சென்னை மாநகர பகுதி யில் 19,500 ஊழியர்கள் வெள்ள நிவாரண பணி களில் ஈடுபட்டுள்ளார்கள் கால்வாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குதல், தேங் கிய தண்ணீரை மோட்டார் கள் மூலம் அகற்றும் பணி களை செய்து வருகிறார்கள்.

    கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

    நுங்கம்பாக்கத்தில் நேற்று காலை வரை 8 செ.மீ. மழை பெய்திருந்த நிலையில் நேற்று முதல் இன்று காலை வரை அதை விட அதிகமாக பெய்துள் ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 12.9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் மீனம் பாக்கத்தில் 10.2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

    • புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 10, 11-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும்.
    • தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே, வங்கக் கடலில் நவம்பர் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது 10, 11-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
    • இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கிய பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

    நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவை விட தற்போது கூடுதலாக 25 சதவீதம் மழை பெய்துள்ளது.

    இந்தநிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் கடந்த 9ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரியில் கனமழையை கொடுத்தது. அது புயலாக மாறாமல் வலுவிழந்து சென்றது.

    இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது.

    சீர்காழியில் ஒரேநாளில் 44 செ.மீ மழை பெய்ததை அடுத்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    சென்னையில் அரசின் முன்னேற்பாடு மற்றும் மழைநீர் வடிகால் திட்டத்தால் தண்ணீர் வடிந்துவிட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

    இதற் கிடையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. இதுமேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று காலையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். இது மேற்கு, வடமேற்கு திசையில் படிப்படியாக நகர்ந்து 18ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைகிறது.

    இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    20ம் தேதி தமிழகம் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் இன்றும் நாளையும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடை இடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

    18ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடை இடையே 55 கி.மீ. வேகத் திலும் வீசக்கூடும்.

    19ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத் திலும் இடைஇடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும்.

    20, 21ம் தேதிகளில் புதுச்சேரி, கடற்கரை பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் குறிப்பிட்டுள்ள நாட்களில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுவடைகிறது. அது புயலாக மாறுமா? அல்லது வலுவிழந்து கரையை கடக்குமா என்பதை வானிலை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இருப்பினும் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    கடந்த 24 மணிநேரத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. அரியலூர் 9 செ.மீ., சிவகிரி 7 செ.மீ., தென்காசி கருப்ப நதி அணை 6 செ.மீ., தென்காசி 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • தெற்கு வங்க கடலில் மத்திய பகுதி மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறையாத காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைக்கொண்டு இருந்தது.
    • வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தெற்கு வங்க கடலில் மத்திய பகுதி மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறையாத காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைக்கொண்டு இருந்தது.

    இது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் இது நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் இலங்கை கடற்கரையை நெருங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    • இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரிகடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று 45 முதல் 55 மீட்டர் வேகத்தில் வீசும்.
    • இடையில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்தது. நேற்று இரவு 11.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு, தென் கிழக்கே நிலை கொண்டிருந்தது.

    இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து 480 கிலோமீட்டர் கிழக்கேயும் அது நிலை கொண்டுள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சற்றே வலுகுறைந்து மேற்கு-தென் மேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை கடலோர பகுதியை அடையும்.

    அதன்பிறகு நாளை (26-ந்தேதி) காலையில் மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிக்கு சென்றடையும்.

    இதனால் இன்றும், நாளையும் தமிழகத்துக்கு கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்கள், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மேலும் இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரிகடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று 45 முதல் 55 மீட்டர் வேகத்தில் வீசும். இடையில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • அடுத்த 4 நாட்களுக்கு மூடுபனி, கடும் குளிர் நிலை தொடரும்.

    வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. தலைநகர் டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, 14 ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.

    அடுத்த நான்கு நாட்களுக்கு இமாச்சலப் பிரதேசம், டெல்லி, பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் வடக்கு ராஜஸ்தானிலும் இரவு மற்றும் காலை நேரங்களில் அடர்ந்த மூடுபனி காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என்றும் அதன் பின் நிலைமை படிப்படியாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மூடுபனி மற்றும் கடும் குளிரை கருத்தில் கொண்டு, பீகார் மாநிலம் பாட்னாவில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் டிசம்பர் 31 வரை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • 2-ந்தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
    • ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை இலங்கை கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-திரிகோண மலையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே சுமார் 380 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே சுமார் 610 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    இது இன்று மாலை வரை மேற்கு திசையிலும் அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையிலும் நகர்ந்து நாளை காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என கணக்கிடப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    நாளை (1-ந்தேதி) தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    2-ந்தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் இன்று முதல் 2-ந்தேதி வரை வீசக்கூடும்.

    எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ×