என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் துரைமுருகன்"
- கடந்த 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா்.
- மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.
சென்னை:
மூத்த அமைச்சா் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத்துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது. கனிம வளத்துறை பொறுப்பானது சட்டத்துறையை கவனித்து வந்த எஸ்.ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை பல்வேறு தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணி, சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். 2009-ம் ஆண்டு ஜூலையில் அவரது இலாகா அதிரடியாக மாற்றப்பட்டது.
தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பொதுப்பணித்துறையை தனது வசம் வைத்திருந்த துரைமுருகனிடம் இருந்து அந்தத் துறையை திடீரென பறித்த கருணாநிதி, தனது வசமே அதை வைத்துக் கொண்டாா். அதன்பிறகு, சட்டத்துறை மட்டுமே துரைமுருகன் வசம் இருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியிலும் அதே போன்ற அதிரடி மாற்றத்தை மூத்த அமைச்சரான துரைமுருகன் சந்தித்து உள்ளாா். நீா்வளத்துறையுடன் முக்கியத் துறையான கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை அவா் வசம் இருந்தது. இந்நிலையில், அவரிடம் இருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவா் மீது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஊழல் தடுப்புத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சமீபத்தில் ஐகோர்ட்டு தீா்ப்பு அளித்தது. இந்தத் தீா்ப்பு துரைமுருகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், கனிமம் மற்றும் சுரங்கத்துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளும் அரசுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, குவாரிகளுக்கான குத்தகை காலத்தை அதிகரித்தது, பசுமை வரி செலுத்தி அண்டை மாநிலங்கள் மணல் எடுத்துச் செல்லும் நடைமுறை, இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவாரிகளை மீண்டும் இயக்க அனுமதி அளித்தது போன்ற செயல்பாடுகள் அரசு மீது கடுமையான விமா்சனங்களை முன் வைத்தன. இந்த நிகழ்வுகளின் பின்னணி காரணமாகவே துரைமுருகனிடமிருந்து கனிமம் மற்றும் சுரங்கத்துறை பறிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அமைச்சா் துரைமுருகன் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்நோக்கு மருத்துவத்துறையினா் சிகிச்சை அளித்தனர்.
அவருக்கு நெஞ்சகப் பகுதியில் அசவுகரியம் மற்றும் சளி பிரச்சனை இருப்பதாக தெரிய வந்து உள்ளது. மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.
- உங்களுக்கு கை சரியான பின்னர் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறேன், அமருங்கள்.
- யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
சட்டசபையில் வினாக்கள், விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது, பேசுவதற்கு வாய்ப்பு தருமாறு கை தூக்கித் தூக்கி கை வலிக்கிறது என அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி கூறினார்.
உங்களுக்கு கை சரியான பின்னர் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறேன், அமருங்கள் என எம்.எல்.ஏ. ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், உறுப்பினர்கள் அனைவரும் அவை மரபை காக்க வேண்டும், நையாண்டி செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.
சபாநாயகர் அப்பாவு பேசுகையில், எம்.எல்.ஏ. ரவி 3 கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பு தந்துள்ளேன். யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த ஆட்சி. அதை கடைபிடித்து எல்லோருக்கும் எல்லாம் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.
- 12 மாவட்டங்களில் 5,021 கி.மீ. நீளத்திற்கு பாசன கால்வாயை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
- சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன.
மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
* 12 மாவட்டங்களில் 5,021 கி.மீ. நீளத்திற்கு பாசன கால்வாயை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
* சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன.
* மே மாதம் இறுதிக்குள் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு வரும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு இதெல்லாம் நடக்காது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 10-வது வார்டு காங்கேயநல்லூர் பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ1.20 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தந்தை வழியை முதல்-அமைச்சர் பின்பற்றவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். என்ன ஒரு சிறு பிள்ளைத்தனமான பேச்சு இது. ஒரு மத்திய மந்திரி இப்படியா பேசுவது.
ஒரே நாடு ஒரே தேர்தல் எல்லாம் நடக்காது... ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு இதெல்லாம் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை
- யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் விஜய் தி.மு.க.வுக்கும் அவரது கட்சிக்கும் தான் போட்டி என கூறியிருக்கிறார். யார், யாருக்கு போட்டி என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.
நாங்கள் உழைப்போம், ஜெயிப்போம். யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தாலும் சரி யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. காட்பாடி ரெயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
- வேண்டிய நீரை பெறுவதற்கான வழியைத்தான் கூறுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-
அண்டை மாநில முதல்வர்களுடன் தமிழகத்திற்கான பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
நல்ல நட்புறவை பயன்படுத்தி கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதற்கிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வும் கலந்து கொண்ட நிலையில் குற்றச்சாட்டுகள் வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அதற்கு, நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது, அண்டை மாநில முதல்வர் என்ன விரோதிகளா? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
நான் முதல்வராக இருந்தபோது கேரள முதல்வருடன் பேசினேன், அதன் தொடர்ச்சியாக தான் சொல்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதற்கு, நல்லெண்ண அடிப்படையில் தான் ஆலோசனையை சொல்கிறேன். குறை எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டவில்லை, வேண்டிய நீரை பெறுவதற்கான வழியைத்தான் கூறுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
- நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டசபையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அமைச்சர் துரைமுருகன் இத்துறையின் கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டா பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 13 டெல்டா மாவட்டங்கள், அதேபோல், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதேபோல், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+2
- அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருவதால் எந்த சேதாரமும ஏற்படாது.
- வரும் 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள்
சென்னை:
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில்வ நீரின் இருப்பு குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இப்போது 2786 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினையில்லை. இன்னும் தண்ணீர் வந்தாலும் தாங்கும் சக்தி ஏரிக்கு உண்டு. இன்னும் மழை வரும் என எதிர்பார்க்கிறோம். 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கணித்து, நீர் வரத்து, நீர் வெளியேற்றுதல், பருவநிலை, மழை அளவு ஆகியவற்றை அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். ஆகவே எந்த சேதாரமும ஏற்படாது.
ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் அனகாபுத்தூர் வழியாக அடையாற்றில் கலக்கிறது. ஏரியின் கரைகள் கட்டப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்கள் பாதுகாப்பாக உள்ளன. தண்ணீர் வரத்து அதிகமாகி, கரையோர பகுதிகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி மற்றும் நீர்வளத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்,
- தென்பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. இதில் நீர் வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை செயலாளர் டெல்லி சென்றுள்ளார். அவர் வந்த பின்னர் அதை பற்றி கருத்து தெரிவிக்கிறேன்.
தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார். பாவம் கவர்னர் அவர் எதையாவது சொல்லுவார்.
தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அது உப்பு சப்பில்லாதது. அவர் ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார்.
- தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற்போதாவது மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அதனை சமாளித்து வருகிறோம். நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் பணிகள் படிப்படியாகத்தான் நடக்கும். அதுவரையில் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற்போதாவது மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழக கவர்னர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
- அமைச்ர் துரைமுருகன் இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். இதையடுத்து துரைமுருகன் இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி.
- காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.