என் மலர்
நீங்கள் தேடியது "குழு"
- மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
- 24.01.2025 அன்று ஒன்றிய அரசும் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் தற்போது சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இதனிடையே பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசும் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
1. ககன்தீப்சிங் பேடி. இ.ஆ.ப. கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை.
2. டாக்டர்.கே.ஆர்.சண்முகம், முன்னாள் இயக்குநர், Madras School of Economics
3. பிரத்திக் தாயன். இ.ஆ.ப. துணைச் செயலாளர் (வரவு செலவு), நிதித் துறை, உறுப்பினர் செயலர்.
இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
- குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் விளக்கமாக பேசப்பட்டது.
அரவேணு
நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குஞ்சப்பனை ஊராட்சி சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் ரம்யா மற்றும் ஊராட்சி செயலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட கல்வித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் நடந்தது
- காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின்கீழ்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 474.83 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 150.60 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யப்படவுள்ளது.
இதில் 19 கிராமங்களில் நில அளவை பணிகள் முடிவுற்று முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 2013 -ம் ஆண்டு சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தப்படுகிறது.அதன்படி தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் குன்னத்தூர், புலியூர், வத்தனாகுறிச்சி, வாலியம்பட்டி, சீமானூர் மற்றும் பூங்குடி ஆகிய வருவாய் கிராமங்களில் இதுவரை 6 கட்டங்களாக 43.19 ஹெக்டேர் நிலங்கள் ரூ.44.15 கோடி மதிப்பிற்கு கைய கப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விராலிமலை தாலுகா, குன்னத்தூர் கிராமத்தில் நீர்வளத்துறை மூலம் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விராலிமலை தாலுகா குன்னத்தூர், குளத்தூர் தாலுகா புலியூர் மற்றும் வத்தனாக்குறிச்சி கிராமங்களில் நிலமெடுப்பு செய்வதினால் பாதிக்கப்பட்டுள்ள 25 குடும்பங்களுக்கு மறு குடியமர்வுக்கு வழி செய்யும் வகையில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, கோட்டாட்சியர் அறிக்கை பெறப்பட்டு மாநில மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
மேலும் மேற்கண்ட காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புகளூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தனர்.
- விரைந்து சரி செய்து தருவதாக நிர்வாகம் உறுதி
கரூர்:
கரூர் மாவட்டம், புகளூரில் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புகளூர் வாய்க்காலில் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும், விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆலையில் இருந்து வெளியேறும் கரி துகள்களால் மாசு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 7-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து நேற்று புகளூர் தாசில்தார் மோகன்ராஜ், புகளூர் நகராட்சி தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி ஆணையர் கனிராஜ், காவல் ஆய்வாளர் வினோதினி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சர்க்கரை ஆலைக்குள் அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஆலையில் இருந்து கரி துகள்கள், கரும்பு சக்கை துகள்கள் வெளியேறுவதையும், ஆலையின் கழிவு நீர் புகளூர் வாய்க்காலில் கலக்கப்படுவதையும் பார்வையிட்டனர். அப்போது ஆலை நிர்வாக நிர்வாகிகள் அனைத்தையும் விரைந்து சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்காதவாறு விரைந்து சரி செய்து கொடுக்குமாறு ஆலை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.
சேலம்:
தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ தலைமையில் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அருள், அன்பழகன், ஈஸ்வரன், எழிலரசன், செந்தில்குமார், பாலசுப்ரமணியம், முகமது ஷாநவாஸ், செல்லூர் ராஜூ ஆகியோர் சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இன்று 2-வது நாளாக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளையும், உயிரினங்களையும் பார்வை–யிட்டனர்.
பின்பு வன குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் பழைய பேருந்து நிலையம் கட்டிடம் மற்றும் வணிக வளாகம், கார் பார்க்கிங் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எருமாபாளையத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கையும் பார்வையிட்டனர். சேலம் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு பின்னர் கலெக்டர் அலுவ–லகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் சிவகுமரன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மண்டல குழு தலைவர்கள் கலையமுதன், உமாராணி, அசோக் டெக்ஸ் அசோகன், தனசேகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.