search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேக்கரியில்"

    • போலி பில் மூலம் கணக்கு காட்டி ரூ.7 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     கோவை:

    கோவை உப்புக்கிணறு சந்து பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள பேக்கரியில் மேலாளராக உள்ளார். அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

    பேக்கரியில் திருச்சி வையம்பட்டி காமா ட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (42) என்பவர் கடந்த 6-6-2021 முதல் 24-4-2022 வரை காசாளராக வேலை பார்த்து வந்தார். அந்த கால கட்டத்தில் பேக்கரி கணக்குகளை ஆய்வு செய்தபோது, அவர் போலி பில் மூலம் கணக்கு காட்டி ரூ.7 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பின்னர் அவரிடம் பணம் குறித்து கேட்டபோது, பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.

    ஆனால், அவர் பணம் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே, ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட காசாளர் மணிகண்டன் மீது நடவடி க்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் தெரிவித் திருந்தார். அதன்பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப ்பதிவு செய்து ஏமாற்றுதல் பிரிவில் வழக்குப ்பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம் அம்மாபேட்டையில் துணிகரம் ரெடிமேடு கடை, பேக்கரியில் பணம் கொள்ளையடித்தனர்.

        சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அடுத்த மாசி நாயக்கன்பட்டியில் வில்சன் என்பவர் ரெடிமேட் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை எடுத்துச் சென்றனர்.

    இதேபோல அருகிலுள்ள ராமன் என்பவர் நடத்தி வந்த பேக்கரி கடைக்குள் நுழைந்த அந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்த பணத்தையும் எடுத்து சென்றனர். இரண்டு கடைகளிலும் சேர்த்து ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை போனதாக போலீசார் தெரிவித்தனர் .

    மேலும் அந்த பகுதியில் மற்றொரு கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் இங்கு பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர் .இதேபோல சேலம் உடையாப்பட்டி உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று கேட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர் . ஆனால் கோவிலில் எந்த பொருளும் திருட்டு போகவில்லை.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள் .ஒரே நாள் இரவில் 4 இடங்களில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×