search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டைட்டானிக்"

    • சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பின்படி கமலா சற்று பின்தங்கியுள்ளார்.
    • தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

    உலக வல்லரசான அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்த்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. உக்ரைன் போர், பாலஸ்தீன போர்களுக்கு வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள வாக்குப்பதிவு உலக அரசியலுக்கே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இரு தரப்புக்கும் பிரபலங்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். டிரம்ப் பக்கம் தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கமலா ஹாரிஸுக்கு பாடகி டெய்லர் ஷிப்ட் ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனாலும் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பின்படி கமலா சற்று பின்தங்கியுள்ளார்.

     

    இந்நிலையில் ஆஸ்கார் விருது வென்ற டைட்டானிக் பட நாயகன், ஹாலிவுட் முன்னணி நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர், இந்த மாத தொடக்கத்தில் ப்ளோரிடா, ஜார்ஜியா, வட கரோலினா பகுதிகளில் ஹெலன் மற்றும் மில்டன் சூறாவளியால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    அதி சக்தி வாய்ந்த இந்த அட்லாடிக் சூறாவளியால் மக்கள் தங்களின் வீடுகளையும் உறவுகளையும் இழந்துள்ளனர். 100 பில்லியன் டாலர் வரை சேதங்களை ஏற்படுத்திய இந்த அசாதாரணமான சூறாவளி காலநிலை மாற்றத்தின் விளைவே. ஆனால் டிரம்ப் காலநிலை மாற்றை தொடர்ந்து மறுக்கிறார்.

    அறிவியலையே அவர் மறுக்கிறார். பாரிஸ் காலநிலை தீர்மானத்திலிருந்து அமெரிக்காவை அவர் பின்வாங்கச் செய்தார். காலநிலை மாற்றம் நமது பூமியையும் பொருளாதாரத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது. நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள நாம் செயலாற்றியாக வேண்டும். அதனால்தான் நான் கமலா ஹாரிஸ் -லி வாக்களிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர்.
    • வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது.

    இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு இனத்துக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டி காப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவிட சமயத்தில் தனது வீட்டின் பின்னால் இருந்த ஒரு அரிய பம்பை இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

    இதனைத்தொடர்ந்து இது பேசுபொருளாக நிலையில் இதை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதன்படி இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர். நேபாள் நாட்டின் மத்திய பகுதி முதல் இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம் வரை பரவி உள்ளதாக கண்டறியப்பட்ட பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் டிகாப்ரியோய் [Anguiculus dicaprioi] என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

     

    டைட்டானிக் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற லியார்னர்டோ டி காப்ரியோ காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவரை கவுரவிக்கும் விதமாக அவரது பெயரை இந்த பாம்பு இனத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் சூட்டியுள்ளனர்.

    இதைத்தவிர்த்து சிக்கிம் பூடான் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் உள்ள இமயமலை பகுதிகளில் கண்டறியப்பட்ட மற்றொரு பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் ராப்பி [Anguiculus rappii] என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை பாம்புகள் வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது. அதிலும் ஆங்குய்குலஸ் ராப்பி அரிதினும் அரிதாகவே தென்படக்கூடியதாக உள்ளது.

    • லியோனார்டோ டிகேப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது "டைட்டானிக்" திரைப்படம்.
    • கேட் வின்ஸ்லட் 2012 ஆம் ஆண்டு எடவர்டை திருமணம் செய்துக் கொண்டார்.

    1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியோனார்டோ டிகேப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது "டைட்டானிக்" திரைப்படம். இப்படம் உலகமுழுவதும் புகழ் பெற்ற திரைப்படமாகும்.

    இதில் கதாநாயகியாக நடித்த கேட் வின்ஸ்லட் 2012 ஆம் ஆண்டு எடவர்டை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதி 12 வருடங்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக கடந்துள்ளனர். தற்பொழுது அவர்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் காரணத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

    அவர் கூறியதாவது "பெண்களுக்கு வயது அதிகம் ஆக அவர்கள் உடல் சோர்விலும், காம ஆசைகளும் குறைய தொடங்கி விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் அனைவரும் தைராயிட் குறைப்பாடால் இருக்கும் என எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் இதன் முக்கிய காரணமே பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரான் எனும் ஹார்மோன் குறைப்பாடும் கூட காரணமாக இருக்கலாம்."

    இதனால் கேட் வின்ஸ்லட் Testosterone Replacement Therapy {TRT} என்ற சிகிச்சையை தான் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார். இதனால் அவரது உடல் சோர்வில்லாமலும், உடலுறவிலும் சிறப்பாக இருக்க முடிகிறது என மனம் திறந்து கூறியுள்ளார். இதனால் பெண்கள் தாங்கள்தான் அனைத்திற்கும் காரணம் என எண்ணாமல் மருத்துவரை அணுகி கேட்குமாறு கூறினார்.

    "பெண்கள் வயதாக வயதாக தங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்கின்றனர், இன்னும் ஆதிக்கத்துடன் பவர்ஃபுல்லாக இருக்கின்றனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உலகை எதிர்க்க தைரியம் வருகிறது." என்று கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஜான் லான்டௌ உயிரிழப்பை அவரது மகன் உறுதிப்படுத்தினார்.
    • இவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பர் ஆவார்.

    உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களான டைட்டானிக் மற்றும் அவதார் உள்ளிட்டவைகளை தயாரித்த தயாரிப்பாளர் ஜான் லான்டௌ (63) உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் ஜேமி லான்டௌ உறுதிப்படுத்தினார்.

    இவரது உயிரிழப்புக்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இவர் கடந்த வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உயிரிழந்துள்ளார். இவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பரும், தயாரிப்பாளரும் ஆவார்.

    கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லான்டௌ முதல் முறையாக ஜேம்ஸ் கேமரூனுடன் பணியாற்றுவது பற்றி பேசினார். அப்போது அவர் கூறும் போது, "ஜிம் கொஞ்சம் சந்தேக குணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். இதனால், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்," என்றார்.

    ஜூலை 23, 1960 ஆண்டு நியூ யார்க்கில் பிறந்தவர் ஜான் லான்டௌ. இவரது பெற்றோர் எலி லான்டௌ மற்றும் எடி லான்டௌ அமெரிக்க ஃபிலிம் தியேட்டரை துவங்கி படங்களை தயாரித்து வந்தனர். இவர் பாராமௌன்ட் உடன் இணைந்து கேம்பஸ் மேன் படத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஆனார்.

    இதைத் தொடர்ந்து இவர் டிஸ்னியுடன் இரண்டு படங்களை இணைந்து தயாரித்துள்ளார். இவர் கடைசியாக அவதார் படத்தின் அடுத்த பாகங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வந்தார்.

    • டைட்டானிக் தவிர பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
    • பார்பரா டிக்சன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

    பிரபல ஹாலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 79 ஆகும். உலகளவில் மிகவும் பிரபலமான திரைப்படம் டைட்டானிக்-இல் கேப்டன் எட்வார்ட் ஜான் ஸ்மித் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பெர்னார்ட் ஹில். டைட்டானிக் தவிர தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மற்றும் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

    பெர்னார்ட் ஹில் உயிரிழப்பு தொடர்பாக அவரது குடும்பத்தினர் விரைவில் தகவல் தெரிவிப்பர் என்று தெரிகிறது. இவரது மறைவு தொடர்பான தகவலை டைட்டானிக் படத்தில் இவருடன் நடித்த பார்பரா டிக்சன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான பதிவில், "பெர்னார்ட் ஹில் உயிரிழந்தார் என்ற தகவலை மிகவும் துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் இருவரும் ஜான் பால் ஜார்ஜ் ரிங்கோ மற்றும் பெர்ட், வில்லி ரசல்-இன் அற்புதமான நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்றியது பெருமையாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல் பென்னி," என்று குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • மதிய உணவு மற்றும் பபே முதல் காலை உணவு வரை பல்வேறு உணவு வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

    உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் பயணம் செய்த 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக தற்போதும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாசினேட்டிங் என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட 112 ஆண்டுகள் பழமையான அந்த மெனு கார்டில் கப்பலின் முதல் மற்றும் 3-ம் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட மெனு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மதிய உணவு மற்றும் பபே முதல் காலை உணவு வரை பல்வேறு உணவு வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன. முதல் வகுப்பிற்கான மெனுவில், பில்லட்ஸ் ஆப் பிரில், கார்ண்ட் பீப், காய்கறி வகைகள் மற்றும் பாலாடைகள், வறுக்கப்பட்ட மட்டன் சாப்ஸ், பிசைந்த, வறுத்த மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு, கஸ்டர்டு புட்டிங், ஆப்பிள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

    பபே வகையில் பானை இரால், நார்வேஜியன் நெத்திலிகள், ஜூஸ்ட், மத்தி, வறுத்த மாட்டிறைச்சி, பல்வேறு கோழி உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. 3-ம் வகுப்பிற்கான மெனுவில் ஓட்ஸ் கஞ்சி மற்றும் பால், ஜாக்கெட் உருளைக்கிழங்கு, ஹாம் மற்றும் முட்டை, ரொட்டி மற்றும் வெண்ணெய், தேநீர், காலை உணவாக காபி ஆகியவை அடங்கும்.

    இரவு உணவில், அரிசி சூப், ரொட்டி, பழுப்பு குழம்பு, இனிப்பு சோளம், பிளம்ப் புட்டிங், இனிப்பு சாஸ், குளிர் இறைச்சி, பாலாடை கட்டி, சுண்ட வைத்த அத்தி பழங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


    • டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு பயணித்தது
    • 4 நாட்கள் உலகமே பயணிகளை குறித்து தகவல் எதிர்நோக்கி இருந்தது

    2023 ஜூன் மாதம், ஒஷன்கேட் (OceanGate) நிறுவனத்தை சேர்ந்த டைட்டன் (Titan) எனும் சிறு நீர்மூழ்கி வாகனத்தில் நியூஃபவுண்ட் லேண்ட் (Newfoundland) கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் தரை தட்டி நிற்கும் டைட்டானிக் (Titanic) கப்பலை காண 5 பேர் கொண்ட ஒரு குழு புறப்பட்டது.

    இதில் ஓஷன்கேட் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், இங்கிலாந்தை சேர்ந்த கோடீசுவரர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் பால்-ஹென்றி நார்கியோலெட், பாகிஸ்தான் கோடீசுவரர் ஷஹ்சாதா தாவுத் மற்றும் அவர் மகன் சுலெமான் தாவுத் ஆகிய 5 பேர் பயணித்தனர்.

    ஜூன் 18 அன்று ஆழ்கடலில் இறங்கிய சில மணி நேரங்களில் டைடன் தகவல் தொடர்பை இழந்தது.

    இதையடுத்து பெரிய அளவில் அவர்களை தேடும் பணி தொடங்கியது.

    5 பேர் கதி என்ன என உலகமே அதிர்ச்சியுடன் எதிர்பார்த்த நிலையில் ஜூன் 22 அன்று அந்த நீர்மூழ்கி வாகனத்தில் உள்ளிருந்து ஏற்பட்ட வெடிவிபத்தில் அதன் பாகங்கள் சிதறியிருப்பதாகவும், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

    முன்னேற்பாடுகளுடன் இது போன்ற பயணங்கள் செய்யப்பட வேண்டும் என ஒரு சாரார் ஆதரித்தும், இவை ஆபத்தானவை மட்டுமின்றி தேவையற்றவை என எதிர்த்தும் ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர்.

    • கேட் வின்ஸ்லெட் அவதார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் படத்தின் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் தற்போது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 16-ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதனை தொடர்ந்து நடிகை கேட் வின்ஸ்லெட், எலன் குராஸ் இயக்கத்தில் 'லீ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது கேட் வின்ஸ்லெட் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


    இதனிடையே தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் இந்த வாரம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    • கலையரசன் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

    'மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கலையரசன். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரமாகவும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'குதிரைவால்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டினர்.

    இதைத் தொடர்ந்து இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டைட்டானிக். கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படதில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    டைட்டானிக்

    டைட்டானிக்

    'திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்' சார்பாக சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மே 6-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிப்பு வந்த நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் 'டைட்டானிக்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் 24-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    ×