search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்கவுன்டர்"

    • கவுகாத்தி நீதிமன்றத்தில் பொதுநல மனு நிராகரிக்கப்பட்டது.
    • ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல

    அசாமில் ஒரே வருடத்தில் போலீசாரால் 171 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த 2021-22 காலக்கட்டத்தில் அசாம் போலீசால் 171 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. 

    இந்த என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடந்த வேண்டும் என்றும் கவுகாத்தி நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பொதுநல மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குச் சென்ற நிலையில் நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வின் முன் தற்போது விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல, காவல்துறை குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிவைக்கின்றனரா? தங்களது அதிகார வரம்பை மீறுகின்றனரா? என்பதை அசாம் போலீஸ் விளக்க வேண்டும் என்றும் என்கவுன்டர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

    • தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    • கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு அதிகாரி உள்பட ஐந்து பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.

    குல்காம் மாவட்டத்தின் தேவ்சர் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது,

    இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (போக்குவரத்து) மும்தாஜ் அலி உள்பட 4 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர்.

    இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழுவின் தொடர்பு கண்டறியப்பட்டு வருகிறதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • எல்லைக்கோடு அருகே குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
    • ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று (ஜூலை 18) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

    தொடர்ந்து நடந்த நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஒரு வாரத்திற்குள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.

    வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் கெரான் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் என்கவுன்டர் தொடங்கியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் மேற்கொண்டு தகவல்கள் இனி வெளிவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆறு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் சுட்டுக்கொலை.
    • இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

    சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில் போலீசாருடன் இணைந்து கமோண்டோ படை வீரர்கள், நக்சலைட்டைடுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சண்டையில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

    12 நக்சலைட்டுகளின் உடல்களை மீட்ட நிலையில் போலீசார் ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு INSAS துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.

    நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த சண்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கமோண்டோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி துதேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

    • உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டார்.
    • பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் இன்று போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற, மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.

    செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.

    வாகனத்தை நிறுத்தியபோது பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடினார்.

    உடனடியாக பாதுகாவலராக சென்ற காவலர்கள் திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை.

    வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.

    உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டார்.

    காயமடைந்த திருவேங்கடம் உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    M3 புழல் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக முதல் தகவல் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் கடந்த மே 7 ஆம் தேதி ரவுடி கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கும்பலைச் சேர்ந்த அஜய் சிங்கோரா என்ற முக்கிய ரவுடி, டெல்லி புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று (மே 16) மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் கடந்த மே 7 ஆம் தேதி ரவுடி கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்தனர். கார் ஷோரூம் முற்றிலுமாக சேதமடைந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் ஹிமான்சு பாகு என்ற ரவுடியின் கும்பலைச் சேர்த்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் தங்களின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி ததுப்பாகிச்சூடு நடத்திய ஷோரூமில் பகிரங்கமாக விட்டுச் சென்றுள்ளனர்.

    இதனையடுத்து குற்றவாளிகளை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த அஜய் சிங்கோரா என்ற முக்கிய ரவுடி, டெல்லி புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று (மே 16) மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்த போலீசார் குற்றவாளியை சுற்றி வளைத்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் அஜய் சிங்கோராவை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

    இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றொரு கொலை வழக்கிலும் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த என்கவுன்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்தகட்டமாக ரவுடி கும்பலின் தலைவன் ஹிமான்சு பாகுவை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். டெல்லியை பயமுறுத்தி வந்த ரவுடி கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரை போலீசார் என்கவுன்டர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
    • நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினருடன் இன்று நடந்த என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர்.

    மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில், தெலுங்கானாவில் இருந்து சில நக்சலைட்டுகள், பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்ததாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

    ரெப்பன்பள்ளி அருகே உள்ள கோலமார்கா மலைப்பகுதியில் இன்று காலை சி-60 பிரிவு குழு ஒன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது. இதில், நான்கு ஆண் நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    மேலும், அவர்களிடம் இருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு கார்பைன், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், நக்சல் புத்தகம் மற்றும் பிற பொருட்களும் மீட்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.

    உயிரிழந்த நக்சலைட்டுகள் வர்கீஸ், மக்து, இருவரும் வெவ்வேறு நக்சல் குழுக்களின் செயலாளர்கள் மற்றும் படைப்பிரிவு உறுப்பினர்களான குர்சங் ராஜு மற்றும் குடிமெட்டா வெங்கடேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.
    • பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டாக அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்நிலையில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இதனை அடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வீரர்கள் கொண்டு வந்து உள்ளதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
    • பயங்கரவாதிகள் மேலும் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சோபியான் மாவட்டம் சைனாபுரா நகரில் முன்ஜா மர்க் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.

    இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • லலித் குமாரிடம் இருந்து துப்பாக்கி, நாட்டு ஆயுதம், மோட்டார் சைக்கிள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஆகியவை மீட்பு.
    • தப்பியவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    உத்தரப் பிரதசேம் மாநிலம், சப்ராலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குர்தி கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் காடுகளை நோக்கி தப்பிச்சென்ற மூவரையும் காவல்துறையினர் துரத்தினர். அப்போது, அவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேரில் லலித் குமார் என்பவர் பலியானார். மற்ற இருவரும் தப்பிவிட்டனர். தப்பியவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், துப்பாக்கிச் சூட்டில் கான்ஸ்டபிள் ராகுல் என்பவர் காயமடைந்தார். இவருக்கு கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் நீரன் குமார் ஜடான் கூறினார்.

    லலித் குமாரிடம் இருந்து துப்பாக்கி, நாட்டு ஆயுதம், மோட்டார் சைக்கிள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோபூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய அதே பயங்கவாதக் குழு ஆகும். அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
    • கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உள்பட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

    இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் கூறியதாவது:-

    ஸ்ரீநகர் நகரின் பெமினா பகுதியில் நடந்த என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் நடவடிக்கையில் போலீஸ் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

    என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை ஆராய்ந்ததில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் வசிக்கும் அப்துல்லா கவுஜ்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    ஏற்கவனே நடந்த சோபூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய அதே பயங்கவாதக் குழு ஆகும். அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்டிபோரா பகுதியில் இன்று அதிகாலை என்கவுன்டர் நடந்தது.
    • பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் என்கவுன்டரின்போது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதியை என்கவுன்டரில் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறையினர் பதிவிட்ட டுவிட்டர் பதிவில், " கண்டிபோரா பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்கொண்டு நடவடிக்கை நடந்து வருகிறது" என்றார்.

    ×