என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இசைக்கலைஞர்"

    • 1987 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரான ஸ்டார்மர், மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றார்
    • ஆப்பிரிக்கா, கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.

    பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தம் உள்ள  650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று 14 வருடங்கள் களைத்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. கடந்த 2010 முதல் ஆட்சியில் இருந்த ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு மிகவும் பின்னடைவை சந்தித்து படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிராமராக பதிவியேற்க உள்ளார்.

    61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர் தனது இளமைப் பருவத்தில் ப்ளூட், பியானோ, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞராக இருந்துள்ளார். தனது இளம் வயதிலேயே சோசியலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கெய்ர் தனது 16 வயதில் தொழிலாளர் கட்சியின் இளம் சோசியலிஸ்ட் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்கிறார்.

    லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற கெயர் ஸ்டேமர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்றார். 1987 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரான ஸ்டேமர், மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றார். ஆப்பிரிக்கா, கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.

    1990 களில் மெக் லைப்ல் என்ற நிறுவனம் சுற்றுசூழல் முறைகேடுகளில் ஈடுபட்டதை எதிர்த்தவர்களுக்காக வாதாடினார். பின்னர் 2008 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் வேல்ஸ் அரசு வழக்கறிங்கர்களுக்கான இயக்குனர் பதவியில் அமர்ந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டிலே அவரின் முழுமையான அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. 2015 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு லண்டலில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பினுக்கு மிகவும் நெருக்கமானவராக கெய்ர் ஸ்டார்மர் இருந்தார்.

    கடந்த 2019 பாரளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிட்டு கெய்ர் வெற்றிபெற்றார். கெய்ரின் வெற்றியுடன் தொழிலாளர் கட்சியின் புதிய சகாப்தம் தொடங்கியது.

    கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெக்ஸிட் என்ற திட்டத்தின்மூலம் பிரிட்டன் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது. ஆனால் அதற்கு எதிரின நிலைப்பாட்டை கொண்டவர் கெய்ர். கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியிடன் கிநைட்ஹூட் மற்றும் சர் பட்டம் பெற்றார். கெய்ர் ஸ்டார்மர் எப்போதும் தான் ஒரு உழைப்பாளி வர்க்கப் பின்னணி கொண்ட நபர் என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் உசேனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

    பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இதுகுறித்து ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா இன்று தெரிவித்திருந்தார்.

    இந்தியரான ஜாகிர் உசேன், அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் ஹுசைனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.

    மேலும், கடந்த ஒரு வாரமாக ஜாகிர் உசேன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், இன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    சாகிர் உடல்நிலை குறித்து அவரது நண்பர் ராகேஷ் கூறுகையில், "அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் அவரது நிலைமை குறித்து கவலைப்படுகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்தார்.

    • ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெங்களூரில் வேலை பார்த்து வந்தார்.
    • ஒட்டன்சத்திரத்திரம் திரும்பிய அவர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் ஆனந்த் (வயது 21). இவர் இசைக்கலைஞராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக பெங்களூரில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊர் திருவிழாவுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் வந்தார். நேற்று இரவு பஸ்நிலையம் பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரெயில் இவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இன்று காலை அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் இதைப் பார்த்து ஒட்டன்சத்திரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×