search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை இறப்பு"

    • வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது‌.
    • கிரிஜா என்பவர் கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம், கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.

    கடலூர்: 

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது‌. அதன்படி இன்று காலை நடந்த கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்‌.

    இன்று காலை வெளிநாடு வாழும் தமிழர் நலச் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் நூருல்லா தலைமையில் வடலூர் பார்வதிபுரம் சேர்ந்த கிரிஜா கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம், கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், எனது தந்தை அன்பு (வயது 54) கடந்த 2017 ஆம் ஆண்டு அரேபியாவில் உள்ள ரியாத்திற்கு வேலைக்கு சென்றார். கடந்த செப்டம்பர் 21- ந் தேதி எனது தந்தை அன்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். எனவே தமிழக அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி இறந்த தந்தை அன்பு உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    • 10 ஆண்டுகளுக்கு முன்பு தாய் இறந்துவிட்டார்.
    • தந்தை ஜெயசீலன் கூலி வேலை செய்து வந்தார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி ஜெயசீலன் (46). இவரது மனைவி மகேஸ்வரி தம்பதியினருக்கு சக்திவேல் (17)ரஞ்சித் (15) வரலட்சுமி (11) ஆகிய 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உமாமகேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    இந்நிலையில் 10 ஆண்டுகளாக ஜெயசீலன் கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் படிக்க வைத்து காப்பாற்றியுள்ளார்.

    தற்பொழுது சக்திவேல் 12-ம் வகுப்பு ரஞ்சித் 10-ம் வகுப்பு வரலட்சுமி 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் கூலி வேலை செய்து கொண்டிருந்த ஜெயசீலன் நேற்று முன்தினம் இரவு திடீர் உடல்நிலை குறைவால் இறந்தார்.

    அதிர்ச்சியடைந்த குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். தந்தையின் இறுதி சடங்கு செய்யகூட பணம் இல்லாமல்நிலைகுலைந்து நின்றனர்.

    இதனைக் கண்ட ராட்டிணமங்கலம் புதிய காலனி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணம் வசூல் செய்து இறுதி சடங்குகளை செய்தனர்.

    தாயை இழந்து தந்தையின் அரவணைப்பால் 10 ஆண்டு காலம் வாழ்ந்து வந்த மகள் மற்றும் மகன்கள் தந்தையின் இறுதி சடங்கை செய்வதற்கு கூட பணம் இல்லாமல் பரிதாபமாக நின்ற சம்பவம் ராட்டிணமங்கலம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இது மட்டுமன்றி 3 குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக உள்ளன.

    அவர்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும் என உதவி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×