search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிபோதையில்"

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.
    • பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரிய கொடி வேரி அணை பகுதி அருகே ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரன் (43), சேதராமன் (30), சுரேந்திரன்(29), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரேம் ராஜ் (40) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோல் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அளுக்குளி தேவேந்திர நகர் பகுதி அருகே அதே பகுதியை சேர்ந்த மதகன்குமார்(27) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

    இதேபோல் காசிபாளையம் இந்திரா நகர் பகுதி அருகே அதே பகுதியை சேர்ந்த பரணி (25) என்பவர் மது அருந்தி பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படு த்தும் வகையில் செய ல்பட்டதால் அவரையும் போலீசார் கைது செய்தனர். 

    • நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் நிலை தடுமாறு ரோட்டில் அருகே இருந்த சாக்கடையில் தவறி விழுந்தார்.
    • வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி திருப்பூர், ஓழகடம், கோமியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (35).சம்பவத்தன்று செந்தில் மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    வெள்ளோடு-பெருந்துறை சென்னிமலை ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் நிலை தடுமாறு ரோட்டில் அருகே இருந்த சாக்கடையில் தவறி விழுந்தார்.

    இதில் நெஞ்சி பகுதியில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்து கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குடிபோதையில் காவிரி கரை ஆற்றில் குளிக்க சென்றார்.
    • எதிர்பாராத விதமாக பார்த்திபன் நீரில் மூழ்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையம் சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (37). கடந்த 15 வருடமாக பார்த்திபனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் தனது தம்பியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பார்த்திபன் குடிபோதையில் காவிரி கரை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பார்த்திபன் நீரில் மூழ்கினார்.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சிறிது நேரத்தில் பார்த்திபன் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலிங்கராயன் வாய்க்காலில் போதையில் தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.
    • சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்ட சுந்தர்ரா ஜனை பிணமாக மீட்டனர்.

    ஈரோடு, 

    ஈரோடு அக்ரஹாரம் அடுத்துள்ள மணியகாரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(50). கூலி தொழிலாளியான இவர் நேற்றுமுன்தினம் மாலை நஞ்சப்பாநகரில் உள்ள தனது மனைவியை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது அளவுக்கு அதிகமாக மதுஅருந்தியதால் சுந்தர்ராஜ் பேரேஜ் அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் போதையில் தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.

    இதையடுத்து அங்கிருந்த வர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் தீயணைப்பு துறையினர் சென்று வாய்க்காலில் தேடினர். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்ட சுந்தர்ராஜனை பிணமாக மீட்டனர்.

    இது குறித்து கருங்க ல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.
    • சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர் ஆட்டோ ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆகியுள்ளது.

    தற்போது வெங்கடேஷ் தாயாருடன் தனியாக வசித்து வருகிறார்.

    குடிப்பழ க்கத்துக்கு அடிமையான அவர் சம்பவத்தன்று குடிபோதையில் மேலப்பாளையம் பகுதியில் ஊருக்கு பொதுவான கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    இந்த கிணறு சுமார் 100 அடி ஆழம் உடையது. அதில் சுமார் 60 அடி தண்ணீரும் உள்ளது.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.

    இச்சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.
    • அப்போது அவர் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.

    கோபி:

    கோபி செட்டி பாளையம் அருகே உள்ள பொலவக்காளி காளி பாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (49). இவரது மனைவி அலமேலு. கூலி தொழிலாளியான மூர்த்திக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று காலை மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.

    அப்போது அவர் பழையூர் பாட்டப்பமடை பள்ளம் பகுதியில் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தெரியவந்ததும் அலமேலு மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று மூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • செங்கோடம்பள்ளம் பாலத்தின் மேற்புற பகுதியில் மது போதையில் ரமேஷ் படுத்து தூங்கினார்.
    • திடீரென ரமேஷ் குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு செங்கோடம் பள்ளம் அரச மர விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாகாளி. இவரது மகன் ரமேஷ் (30). இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. ரமேசுக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. ரமேஷ் வீட்டுக்கு சரியாக செல்லாமல் மது போதை யில் ரோட்டோர ங்களில் படுத்து தூங்குவது வழக்கம்.

    நேற்று இரவு வழக்கம் போல் செங்கோடம்பள்ளம் பாலத்தின் மேற்புற பகுதியில் மது போதையில் ரமேஷ் படுத்து தூங்கினார். நள்ளிரவில் திடீரென ரமேஷ் குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.

    இதில் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் வந்தவர்கள் ரமேஷ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி ரமேஷ் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக அவரது உடல் ஈரோடு அரச ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பஸ் நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவருகிறது.
    • பஸ் நிலையத்தில் குடிமகன்களால் தினம் தினம் பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    தாளவாடி:

    தாளவாடி மலைப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.இப்பகுதி மக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர், ஆகிய பகுதிகளுக்குச் செல்ல தாளவாடி பஸ் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும்.

    இதனால் தாளவாடி பஸ் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பஸ் நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவருகிறது.

    அதேபோல் காலை பஸ் நிலையத்தில் ஆண்கள் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்பொழுது அங்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடியே பஸ் நிலையத்தில் நுழைந்தார்.

    அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது தள்ளாடியபடி விழுந்து தகாத வார்த்தையில் பேசினார்.

    பின்னர் அங்கு நின்று இருந்த பெண்ணிடம் தகராறு செய்தார். இதை பார்த்த வயதான மூதாட்டி ஒருவர் குச்சியை எடுத்து அவரை விரட்டினார். ஆனால் போதையில் தள்ளாடியபடியே இருந்தார்.

    ஆனால் அங்கு இருந்த மற்றவர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவே இல்லை.

    பஸ் நிலையத்தில் குடிமகன்களால் தினம் தினம் பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது.
    • சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதி பின்புறமுள்ள சிதம்பரனார் வீதியில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதில் சுமார் 7 அடி அகலமும் 30 அடி ஆழம் உடைய கிணறு உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில். கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, உள்ளே ஒருவர் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பல்லடம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து கயிற்றின் மூலம் அவரை மீட்டனர். பின்னர் பல்லடம் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கோவை மாவட்டம் சூலூர் தாலுகா, வதம்பச்சேரி ஊராட்சி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த மவுனராஜ், (வயது 30) என்பதும், குடிபோதையில் நண்பரை தேடி வந்தவர், தொட்டி என நினைத்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை குடிபோதையில் வாலிபர் திருடி சென்றார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

      ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் முத்து தெருவை சேர்ந்தவர் பூசார்அலி (47). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். பின்னர் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் பூசார்அலி தனது நண்பர் அணீஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிள் தேடி பவானி ரோடு வழியாக, பி.பி.அக்ரகாரம் அடுத்த பேரஜ் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக பூசார் அலியின் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் ஓட்டிக்கொண்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபரை மோட்டார் சைக்கி ளுடன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொ ண்டதில் அவர்பவானி சீனிவாசபுரத்தை சேர்ந்த சுலைமான் (20) என்பதும், குடிபோதையில் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தாரமங்கலம் அருகே குடிபோதையில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி பலியானர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள பாப்பம்பாடி சந்தை பேட்டை அருகே உள்ள அரசு மதுபான கடை அருகே நேற்று மாலை 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார்.

    இது குறித்து குடிமகன்கள் தாரமங்கலம் போலீசாறுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு சென்று தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் (48) என்பதும், அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதையில் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. ஆறுமுகம் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    ×