என் மலர்
நீங்கள் தேடியது "ஓவியம்"
- அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- தாரா மக்கள் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.
ஆசாத் ஆட்சியின் வீழ்ச்சி
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்தது.
இதற்கிடையே அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பிரச்சனைகள், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. ரஷியாவின் உதவியுடன் அப்போது தனது ஆட்சியை ஆசாத் காப்பற்றிக்கொண்டார்.

அதிபர் பஷர் அல் ஆசாத்
உலக சக்தியான ரஷியாவின் உதவியுடன் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை தொடரவே செய்தது. அதன் விளைவாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் முக்கிய நகரங்களையும் கடைசியாக டமாஸ்கஸ் உட்பட அலெப்போ, ஹமா, தாரா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
'எஜாக் எல் டோர், யா டாக்டர்'
2011 ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஒரு இளைஞனின் 14 வயது பள்ளிச் சிறுவனின் புரட்சிகரமான செயல் நாட்டின் தலைவிதியையே மாற்றியமைத்துள்ளது.2011 சிரியா உள்நாட்டு போரின் பிறப்பிடமாக விளங்கும் தாரா நகரத்தில் இந்த கதை தொடங்குகிறது.
நாடு முழுவதும் மக்கள் மனதில் அடக்கி வைத்திருந்த எதிர்ப்பு சிறுவனின் கிராஃபிட்டி ஓவியமாக முதல் வடிவம் பெற்றது. தாரா நகரை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் மௌவியா சியாஸ்னே, அதிபர் ஆசாத் உடைய புகைப்படத்தைப் பள்ளி சுவரின் கிராஃபிட்டி ஓவியமாக வரைந்து அவரின் மருத்துவ பட்டத்தை குறிப்பிட்டும் வகையில் ['எஜாக் எல் டோர், யா டாக்டர்'] ['இது உங்களின் முறை டாக்டர்'] என்று எழுதுகிறான். இது உள்ளூர் காவல்துறையினரின் கண்ணில் படவே, மௌவியாவும் அவனது நண்பர்களும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.

26 நாட்கள்
ஆசாத்தின் முகபாரத் [ரகசிய போலீஸ்] அவர்களைக் காவலில் வைத்து 26 நாட்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறார்கள். தாரா மக்கள் மத்தியில் இந்த செய்தி காட்டுதீ போல் பரவி கோபத்தை ஏற்படுத்துகிறது. சிறுவர்களை விடுதலை செய்யவேண்டி அவர்களின் பெற்றோர்களும், தாரா மக்கள் பலரும் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.
26 நாட்கள் சித்திரவதைக்குப் பின்னர் விடுதலையான சிறுவர்களின் படங்கள் சிரியா முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. தாராவில் மட்டுமின்றி சிரியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மார்ச் 15, 2011 சிரியா முழுவதும் "எதிர்ப்பு தினம்" அனுசரிக்கப்படுகிறது. இது பின்னர் நாடு தழுவிய இயக்கமாக மாறுகிறது. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கிளர்ச்சி > போராட்டம்
எதிர்த்து பேசுவோரைச் சிறையில் அடைத்தனர் அவ்வாறு அடைக்கப்பட்ட எண்ணற்றோரைச் சித்திரவதைக்கு உட்படுத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் ஆயுதங்களை ஏந்தி கிளர்ச்சியாளர்களாக மாறுகின்றனர்.
அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 13 மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.
ரஷியாவின் உதவியால் அப்போது தப்பிய ஆசாத் ஆட்சி தற்போது கடந்த வாரம் திடீரென புத்துயிர் பெற்ற கிளர்ச்சியால் ஒரே வாரத்தில் வீழ்ந்துள்ளது. இதனால் நேற்று வரை கிளர்த்தியாளர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் இனி ஆட்சியாளர்கள் என்று குறிப்பிடப்படுவார்கள்.

- நீர் வண்ண ஒவிய கண்காட்சி புதுச்சேரி செயின்ட் தெரேசா வீதியில் உள்ள வண்ண அருவி கூடத்தில் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.
- கண்காட்சியை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து ஓவியங்களை பார்வையிட்டார்.
ஓவியர் ஏழுமலையின் மண்ணின் மனம் என்ற தலைப்பிலான நீர் வண்ண ஒவிய கண்காட்சி புதுச்சேரி செயின்ட் தெரேசா வீதியில் உள்ள வண்ண அருவி கூடத்தில் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.
கண்காட்சியை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து ஓவியங்களை பார்வையிட்டார். அப்போது தான் வரைந்த ஓவியங்களை ஓவியர்கள், பார்வையாளர்களிடம் காண்பித்து அந்த ஓவியம் வரையப்பட்ட சூழலை விளக்கி கூறியதாவது:-
1962-ல் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் படம் வரைந்த போது வெளியேறுமாரு மறைமுகமாக கூறினார்கள். அதனால் வரதராஜ பெருமாள் கோவிலில் சென்று படங்கள் வரைந்து வந்து அதை காட்டினேன். உடனே ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஓவியம் வரைய அனுமதித்தனர்.
1962-ல் மதுரையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரே சிட்டிங்கில் மதுரை காமாட்சி கோவிலை வரைந்தேன். யாராலும் இதை 20 வயதில் வரைய முடியாது.
1986-ல் சிந்து பைரவி படம் ஓடி 200 நாள் வெற்றி விழா மதுரையில் நடந்தது.அப்போது என்னை பார்க்க ஒருவர் வந்தார். அவர் 1962-ல் திண்டுக்கல்லில் என்னுடன் சாப்பிட்டதை குறிப்பிட்டார். அவர் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. கன்னியாகுமரியில் ரூ.2-க்கு வாடகைக்கு அறை எடுத்து தங்கி பிரம்மாண்டமாக வந்த அலைகளை பார்த்து 400 அலைகளை மனதில் வைத்து வெள்ளை பெயிண்டை பயன்படுத்தாமல் ஓவியம் வரைந்தேன்.இதுவரை 192 படங்களில் நடித்துள்ளேன். இந்தியா முழுவதும் நான் சுற்றி வரைந்த ஓவியங்களுக்கான செலவு ரூ.7,500 தான். இன்னொரு பிறவி எடுத்தால் ஓவியமாக பிறக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அல்ல. இவ்வாறு சிவக்குமார் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2019 ஆம் ஆண்டு சந்தீப் புதோலியா என்ற நபரை இப்பெண் திருமணம் செய்துள்ளார்.
- திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் 27 வயது பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். முதலில் இதை தற்கொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவளது கணவர் மற்றும் மாமியார் தான் தங்கள் மகளின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.
2019 ஆம் ஆண்டு சந்தீப் புதோலியா என்ற நபரை இப்பெண் திருமணம் செய்துள்ளார். கணவரின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் வரதட்சணை கொடுக்க பெண்ணின் தந்தை தெரிவித்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொடுமைப்படுத்த, இது தொடர்பாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளிக்க பின்னர் இருவீட்டாரும் சமரசத்துக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்தது அவளது மாமியாருக்கு பிடிக்கவில்லை என்று பெண்ணின் தந்தை தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த கொலையை நேரில் பார்த்த அப்பெண்ணின் 4 வயது மகள், தாயை அடித்துக்கொன்று தந்தை தூக்கில் தொங்கவிட்டது போன்று ஓவியம் வரைந்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
- ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- மாணவர்கள் ஒன்றிணைந்து 75 நிமிடத்தில் 75 அடி நீளத்தில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.
உடுமலை :
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ஓவியம் வரையும் நிகழ்ச்சி எஸ்.கே.பி., பள்ளியில் நடத்தப்பட்டது.தேஜஸ் ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் சக்கரபாணி தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியர் சதீஷ்குமார், வரவேற்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
ஓசோன் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாணவர்கள் ஒன்றிணைந்து 75 நிமிடத்தில் 75 அடி நீளத்தில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அறிவியல் அலுவலர் லெனின்தமிழ்க்கோவன், விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்திருந்தார். அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.முடிவில் என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.
- திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
- 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் நடத்த ஏதுவாக ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.இதன் முகப்பில் தமிழருக்கும் திருப்பூர் மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையிலான சிமென்டில் புடைப்பு சிற்பம் அமைக்கப்பட்டு, இது பார்வையாளர்களை கவரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
அதில் பண்டை தமிழரின் ஆடல், பாடல்களை குறிப்பிடும் வகையில் ஆண், பெண் இருவரும் ஜோடியாக இணைந்து திருவிழா ஒன்றில் நடனம் ஆடுவது, வண்ணங்களில் தோரணம் கட்டி, களைகட்டிய ஊர்த்திருவிழா, மத்தளம் இசைத்தபடி பெண் கலைஞர்கள், கிராம கோவில்களில் நடக்கும் அன்றைய நாட்டிய நடன நிகழ்ச்சி.திருப்பூர் மாவட்டத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் களம் காண தயாராக இருக்கும் காங்கயம் காளை, பின்னலாடையின் அடையாளமாக வெவ்வேறு நிறங்களில் பளிச்சிடும் நூல் ரகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி வந்து செல்பவர்கள் ஓவிய வடிவமைப்பை உற்று கவனித்து வியந்து செல்கின்றனர்.
- ருதரப்பா நகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி உள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
உடுமலை, ஆகஸ்ட்.2
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருதரப்பா நகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியும் உள்ளது. மாணவ மாணவியர் இருபாலரும் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி சுவர்களில் சுற்றுச்சூழலை காப்போம் மரம் வளர்ப்போம். நீரை பாதுகாப்பது அவசியம் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியம் வரைவதால் மாணவர்களுக்கு மனம் ஒரு நிலைப்படும். எனவே மாணவர்களுக்கும் ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்படுத்தப்பட்டது என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
- பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே சாலை விதி, காவல் உதவி செயலி உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவிய போட்டி
- ஓவியங்களில் சிறந்த ஓவியங்களை கண்டறிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது
நாகர்கோவில்:
குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே சாலை விதி, காவல் உதவி செயலி உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் பங்கேற்று ஓவியங்கள் வரைந்ததுடன் அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனப்பி வைத்தனர். அந்த வகையில் 3 ஆயிரம் ஓவியங்கள் அனுப்பி வைக் கப்பட்டன.
இந்த ஓவியங்களில் சிறந்த ஓவியங்களை கண்டறிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. இந்த கமிட்டி தேர்வு செய்த சிறப்பான ஓவியங்களை வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
- பிரதமர் மோடி, அண்ணா, கருணாநிதி உருவங்களை வரைந்து அசத்தல்
- நல்லாசிரியர் விருது பெற்றவர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் வை. கோபால கிருஷ்ணன் என்ற கோபால் (வயது 67), ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்.
இவர் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் போது மாணவர்களை வைத்து ஆண்டுதோறும் ஓவிய கண்காட்சிகளை நடத்தி வந்து உள்ளார்.
நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ள வை. கோபாலகிருஷ்ணன் ஓய்வுக்கு பிறகு வீட்டில் முடங்கி கிடக்க கூடாது என்று ஓவியக்கலையில் சிறப்பு படைப்புகளை படைக்க தொடங்கினார்.
சாதாரணமாக வரையும் ஓவிய படைப்புகளில் இருந்து மாறுபட்டு வண்ண மணலைக் கொண்டு மணல் ஓவியம் வரையும் கலையில் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப்படங்களை மணல் ஓவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.
தான் வரையும் மணல் ஓவிய படைப்புகளை கண்காட்சிபடுத்தியும் வருகிறார். இந்த மணல் ஓவியங்களை உருவாக்குவ தற்காக கன்னியாகுமரி கடற்கரையில் கிடைக்கும் கருப்பு, சிவப்பு, ரோஸ், வெள்ளை போன்ற பல வண்ண கலர் மணல்களை சேகரித்து வைத்துள்ளார்.
இந்த பல வண்ண மணல்களைக் கொண்டு மகாத்மாகாந்தி, பாரதியார், பிரதமர் நரேந்திர மோடி, முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முகதோற்ற உருவங்களை மணல் ஒட்டோவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அரசியல் தலைவர்களின் மணல் ஓவியங்களை வரை வதற்கு முன்பு பென்சில் மூலம் அட்டையில் "ஸ்கெட்ச்" போட்டு முன் வரைவு செய்து அதன் மேல் பலவண்ண மணல் களை ஒட்டி இந்த மணல் ஓவியத்தை வரைந்து உள்ளேன்.
நான் படைத்த மணல் ஓவியங்கள் மற்றும் செய்தித்தாள் காகித ஒட்டோ வியங்களை காமராஜர் பிறந்த தினமான வருகிற 15-ந்தேதிஅன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சிய கத்தில் நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் கண்காட்சி யில் இடம் பெற உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் கன்னியாகுமரியில் நடந்தசினிமா படப்பிடிப்புக்கு வந்த நடிகர் சூர்யாவிடம் அவரது தந்தை நடிகர் சிவகுமாரின் உருவத்தை இவர் மணல் ஓவியமாக வரைந்து அவரிடம் நேரில் சென்று கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர்.
- நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி சார்பில் என் குப்பை, எனது பொறுப்பு, என் நகரம் -எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.
அலகு -2 மாணவர்கள் ஒருக்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான உழவர் சந்தை சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக்கை விடு... துணிப் பையை எடு... மரம் வளர்ப்போம் போன்ற ஓவியத்தை வரைந்தனர். மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர். கண்கவர் விழிப்புணர்வு ஓவியம் அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.