search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்"

    • நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இன்றைய இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது.
    • இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது.

    நேற்று [ஜூலை 2] மும்பை பங்குச் சந்தை குறியீட்டு [BSE] சென்செக்ஸ் 79,856 என்று சாதனையை எட்டிய பின்னர் 31 புள்ளிகள் குறைந்து 79,441 என்ற புள்ளிகணக்கில் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் [NSE] நிஃப்டி குறியீடு 24,124 என்ற புள்ளிகணக்கில் நிலைபெற்று முடிவடைந்தது.

    இந்நிலையில் நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகணக்கிலும் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 24,296 என்ற புள்ளிகணக்கிலும் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     

    HDFC வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.  

     

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன்தயாள் உபாத்யாய கிரா மின் கவுசல்ய யோஜனா (கிராமப்பபுற திறன் பயிற்சி) போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் வினாக்கள், தகவல்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அழைப்பு மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். தமிழகத் தின் எந்த பகுதியில் இருந்தும் தொலைபேசி அல்லது கைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு திட்ட விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி பெற முடியும்.

    குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சி கள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுய உதவிக்குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்கு தல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியன குறித்தும் விளக்கங்கள் பெறலாம்.

    மேலும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளை ஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறு வனங்கள் மூலம் வழங்கப் படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். அதேபோல் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இளைஞர்கள், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங் கள், தகுதிகள், பயிற்சியின் போது வழங்கப்படும் வசதிகள் ஆகியன குறித்தும் தகவல்கள் பெறலாம்.

    எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் 155330 அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்று பயன டையலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • குமரி மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து தான் அதிக அளவு கஞ்சா விற்பனைக்கு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்ப னையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறார்கள். கஞ்சா விற்பனை தொடர் பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் ஹெல்ப் லைன் செயல்படு கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

    7010363173 என்ற எண் ணுக்கு பொதுமக்கள் நேரடி யாகவும் போன் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கள் மற்றும் கல்லூரி களிலும் இந்த ஹெல்ப் லைன் எண்ணை கொண்டு சேர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    கஞ்சா புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக மாணவ- மாணவி கள் இந்த தொலை பேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். போலீசார் உடனடி நடவடிக்கை மேற் கொள்வார்கள். குமரி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா விற்பனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த ஆண்டு இதுவரை 891 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 516 பணம், 27 வாக னங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கை பொருத்தமட்டில் இதுவரை 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 287 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    144 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 97 பேரின் வங்கி கணக்குகள் முடக் கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை 57 பேர் குண்டர் சட் டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் கஞ்சா வியாபாரிகள்ஆகும். குமரி மாவட்டத்தில் தற்போது கஞ்சா விற்பனை குறைந் துள்ளதால் அதன் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது.

    குமரி மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து தான் அதிக அளவு கஞ்சா விற்பனைக்கு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    அதை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கஞ்சாவை கண்காணிக்க 4 சப்-டிவிஷன்களிலும் 7 தனிப் படை அமைக்கப்பட்டு நடவ டிக்கை மேற் கொள்ளப்பட்டு வரு கிறது. கஞ்சா விற்ப னையை தடுக்க மாணவ- மாணவிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    ஈரோடு:

    கடலூரை சேர்ந்த ஆயுத ப்படை போலீசார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் மோகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

    எனவே கந்து வட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாகவே, அல்லது போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண் 9655220100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் தகவல் தருபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×