search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்டரி வாகனம்"

    • சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • எந்திரமும் பயன்படுத்தப்படாமல் முடங்கி ஓரங்கட்டப்பட்டு கிடக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் சிறப்பு பெற்றது. இதனை ரசிப்பதற்காக தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாட்டினர் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வரும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகளின் வசதிக்காக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட பேட்டரி வாகனம் கடற்கரை கோவில் வளாகத்தில் இயங்கி வந்தது.

    தற்போது இந்த வாகனம் பழுதடைந்து அங்குள்ள வளாகத்தில் பலமாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு

    உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதேபோல் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி தூளாக்கும் எந்திரம் ஒன்றும் அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த எந்திரமும் பயன்படுத்தப்படாமல் முடங்கி ஓரங்கட்டப்பட்டு கிடக்கிறது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றகோரிக்கை எழுந்து உள்ளது.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, பொது நிறுவனங்கள் அதன் சமூக பொறுப்பு நிதியில் பல லட்சம் ரூபாய் செலவில், வாங்கி கொடுக்கும் பொருட்களை தொல்லியல்துறை முறையாக பராமரித்து பயன் படுத்துவது இல்லை. இதனை தொண்டு நிறுவனங்களும் கண்டு கொள்வதில்லை.

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் பேட்டரி வாகனம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் எந்திரத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது
    • ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சாவியை வழங்கி பணியினை தொடங்கி வைத்தனர்

    ஆரணி:

    மேற்கு ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆகாரம், தேவிகாபுரம் தச்சூர், ஓண்ணுபுரம, அப்பநல்லூர், அத்திமலைபட்டு, குன்னத்துர் மலையம்பட்டு ஆகிய 27 ஊராட்சிகளுக்கு ஸ்வச் பாரத் மிஷன் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் 42 பேட்டரி வாகனங்கள் குப்பை சேகரிக்க பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் பங்கேற்றார். மேலும் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களிடம் குப்பை சேகரிக்கும் வாகனத்தின் சாவியை வழங்கி பணியினை தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் துணை சேர்மன் வேலாயுதம், ஓன்றிய கவுன்சிலர்கள் பகுத்தறிவு, கீதா மோகன், கீதாசரவணன், ஏழுமலை மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் துரை மாமது, மோகன், ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை
    • பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019க்கு இணங்க பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் கேட்டு கொண்டது.

    01.01.2023 முதல் 31.12.2025ம் ஆண்டு வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை வழங்க அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழைய சர்க்கார்பதி கிராமத்தில் இருந்து சேத்துமடை வருவதற்கு போக்குவரத்து வசதி கிடையாது.
    • முதல்கட்டமாக பழைய சர்க்கார்பதி கிராமத்திற்கு அந்த பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனைமலை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை பகுதியில் பழைய சர்க்கார்பதி பழங்குடியின கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 5-ம் வகுப்பு வரை செயல்படும் தொடக்கப்பள்ளியும் உள்ளது. மேல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் அடர்ந்த வனத்திற்கு நடுவே சுமார் 7 கிலோ மீட்டர் பயணித்து சேத்துமடை பகுதிக்கு வர வேண்டும்.

    பழைய சர்க்கார்பதி கிராமத்தில் இருந்து சேத்துமடை வருவதற்கு போக்குவரத்து வசதி கிடையாது. மாணவர்கள் நடந்தே இங்கு வந்து படித்து வருகின்றனர். பஸ் வசதி இல்லாத காரணத்தால் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படிப்பை தொடரமுடியாமல் கைவிட்டுள்ளனர்.

    சமீபத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் இந்த கிராமத்தை சேர்ந்த 34 பழங்குடியின மாணவர்கள் எழுதவில்லை.

    இந்த நிலையில் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதியும், அவர்களின் கல்வியை மேம்படுத்தவும் தொண்டு நிறுவனம் சார்பில் சி.எஸ்.ஆர். திட்ட நிதியில் இருந்து ரூ.2.5 லட்சத்தை ஒதுக்கீடு செய்து ஓட்டுநர் மற்றும் 12 மாணவர்களுடன் பயணிக்கும் வகையில் பேட்டரி வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.

    முதல்கட்டமாக பழைய சர்க்கார்பதி கிராமத்திற்கு அந்த பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நாகரூத்து, சின்னார்பதி, தம்மம்பதி, கோழிகமுத்தி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களுக்கும் பேட்டரி வாகனம் வழங்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறுகையில், தங்களைப் போல் இல்லாமல் தங்கள் தலைமுறைகளாவது கல்வி கற்று உயர்நிலை அடையவேண்டும் என்பது தங்கள் கனவாக உள்ளது. இதற்கு பஸ் வசதி தடையாக நிற்பது தங்களுக்கு வேதனை அளித்தது. தற்போது தனியார் நிறுவனங்கள் பேட்டரி வாகனம் வழங்கியிருப்பதால், எங்களது கிராம மாணவர்கள் உயர்கல்வி கற்பதில் போக்குவரத்து ஒரு தடையாக இருக்காது என பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×