search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரண்டை"

    • கூட்டத்தில் தலைமை கணக்காளர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.
    • சாலைகள் சீரமைக்கும் பணி, கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கரா தேவி முருகேசன், கமிஷனர் ரவிச்சந்திரன் (பொறுப்பு),பொறியாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கணக்காளர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுரண்டை செண்பக கால்வாயை சீரமைக்க வேண்டும், இரவு நேரங்களில் செண்பக கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழை நேரம் என்பதால் சாலைகளை சீரமைத்து, தண்ணீர் தேங்காதபடி முன்னேற்பாடுகளை செய்து வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு பகுதியிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து பதில் அளித்து சேர்மன் வள்ளி முருகன் பேசுகையில், சுரண்டை செண்பக கால்வாயை சீரமைத்து மேம்படுத்துவது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.சாலைகள் சீரமைக்கும் பணி மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நகராட்சி முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறது என்றார். 

    • ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
    • நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    தீபாவளியை முன்னிட்டு சுரண்டை நகராட்சி பணி யாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். பொறியாளர் முகைதீன், மேலாளர் வெங்கட சுப்பிரமணியன், கணக்காளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியா ளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன், வைகை கணேசன், அமுதா சந்திரன்,ஜேம்ஸ்,செல்வி, கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன், சங்கரநயினார், சசிகுமார், கோமதிநாயகம், டான் கணேசன், முத்துக்குமார், ஜோதிடர் தங்க இசக்கி, மோகன், ராஜன், ரஹீம், பவுல், கஸ்பா செல்வம் மற்றும் ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தாட்கோ வணிக வளாக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சுரண்டை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது.
    • சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூட்டுறவு பண்டகசாலை பொருட்கள் பாதுகாப்பு குடோன் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சிக் குட்பட்ட சங்கரன்கோவில் ரோட்டில் அமைந்துள்ள தாட்கோ வணிக வளாகம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாடு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    பொது மக்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படும் முன் அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் தாட்கோ வணிக வளாக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சுரண்டை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது.

    அதைத்தொடர்ந்து சுரண்டைக்கு வந்த தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளர் ஜெயபாலன், தனுஷ் குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., சுரண்டை சேர்மன் வள்ளிமுருகன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் (பொறுப்பு) ஆகியோர் தாட்கோ வணிக வளாக கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து பங்களா சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூட்டுறவு பண்டகசாலை பொருட்கள் பாதுகாப்பு குடோன் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது சுரண்டை நகராட்சி பொறி யாளர் முகைதீன், பணி மேற்பார்வையாளர் வினோத் கண்ணன், கவுன்சிலர் வேல்முத்து, மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், சுரண்டை நகர தி.மு.க. அவைத்தலைவர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன், சுரண்டை வார்டு செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், மாணவர் அணி ரமேஷ், சுந்தரபாண்டியபுரம் பேரூர் முன்னாள் செய லாளர் மாரியப்பன், டான் கணேசன், ராஜன் மற்றும் ஏராளமான தி.மு.க., காங்கி ரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தி.மு.க. தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற வர்த்தக அணி கடுமையாக உழைக்க வேண்டும்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும்.

    சுரண்டை:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சுரண்டையில் உள்ள மாவட்ட பொறுப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வர்த்தக அணி தலைவரும், கடையநல்லூர் நகராட்சி சேர்மனுமான மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். அமைப்பாளர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற வர்த்தக அணி கடுமையாக உழைக்க வேண்டும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் பிலிப் ராஜா, சுப்பையா பாண்டியன், சண்முகராஜ், முத்தரசு, ராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று புகழ்பெற்ற விஞ்ஞானிகளாக உள்ளனர்.

    சுரண்டை:

    சேர்ந்தமரம் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடந்தது.

    புதிய வகுப்பறை

    மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றிய குழு துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன், நாடார் மகாஜன சங்க துணை தலைவர் மதன் சுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பி ரமணியத்துரை வரவேற்றார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில், ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் மரக்கன்று நட்டு பேசினார்.அப்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று இஸ்ரோ மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாகவும், உயரிய பொறுப்புகளிலும் உள்ளனர்.பள்ளி மாணவர்களுக்காக இந்த கட்டிடத்தை கட்டிக் கொடுத்த மனிதநேயமிக்க மாண வர்களை உருவாக்கி யதும் இதே அரசு பள்ளி தான். முதல்-அமைச்சர் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு அமைத்து பள்ளி சிறப்பாக செயல்படும் வகையில் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    தொடர்ந்து புதிய கட்டிடத்தை கட்டி கொடுத்த பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமாதேவி, உறுப்பி னர்கள் காசிநாதன், பாக்கிய ராஜ் ,சரஸ்வதி, ஹரிஹரன் ஆகியோர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவில் சேர்ந்தமரம் கிளை தி.மு.க. செயலாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதி வேச முருகேசன், வீரசிகாமணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிற்றரசு,பிரேம் குமார் உட்பட பொதுமக்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழாசிரியை மதுமதிவதனா நன்றி கூறினார்.

    • போட்டிகளில் 20 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • மாணவி தமிழ் யாழினி கதை கூறுதலில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

    சுரண்டை:

    தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் விவேகானந்த கேந்திரம் சார்பில் நடைபெற்றது. இதில் ராஜேந்திரா விஸ்டம் நர்சரி பிரைமரி, மகரிஷி வேல்ஸ் பப்ளிக், எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ்,பாரத் வித்யா மந்திர், பாரத் மாண்டிசோரி, எஸ்.எம்.ஏ. மெட்ரிக், உள்ளிட்ட 20 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    போட்டியில் கலந்து கொண்ட ராஜேந்திரன் விஸ்டம் நர்சரி பிரைமரி பள்ளி மாணவி தமிழ் யாழினி கதை கூறுதலில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்தார். இதே பள்ளியை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி ஒப்பித்தல் போட்டியில் 4-வது இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ் ராம்,பள்ளி செயலாளர் சிவ டிப்ஜினிஸ் ராம் ,முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் முருகராஜன் ஆகியோர் பாராட்டினர்.

    • விழாவில் சுரண்டை நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு சேர்மன் வள்ளி முருகன் இனிப்புகளை வழங்கினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், தலைமை கணக்காளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுரண்டை நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு இனிப்புகளை சேர்மன் வள்ளி முருகன் வழங்கினார்.விழாவில் கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், வேல்முத்து, மாரியப்பன், ராஜேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண் காவலர்கள் ராஜேஸ்வரி, அன்பரசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • தெருவிற்குள் வரக்கூடாது என்று கூறி பாண்டி என்ற பாண்டியராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    சுரண்டை:

    சுரண்டை வரகுணராமபுரம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி அருகே பெண் முதல்நிலை காவலர்கள் ராஜேஸ்வரி மற்றும் அன்பரசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாண்டி என்ற பாண்டியராஜ் (வயது34) என்பவர் அவர்களை வழிமறித்து இந்த தெருவிற்குள் நீங்கள் வரக்கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்நிலை காவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன் விசாரணை நடத்தி பாண்டி என்ற பாண்டியராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

    • சுரேசுக்கும், அருணாதேவிக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
    • அருணா தேவி தனது கணவரை பிரிந்து முத்துக்குமாருடன் சென்று விட்டார்.

    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள துரைசாமியாபுரத்தை சேர்ந்தவர் சேர்மன். இவருடைய மகன் சுரேஷ்(வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணாதேவிக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    கள்ளக்காதல்

    இவருக்கும், சாம்பவர் வடகரையை சேர்ந்த பீடிக்கடையில் பணிபுரியும் ஊழியரான முத்துக்கு மார்(27) என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஓராண்டுக்கு முன்பு அருணா தேவி தனது கணவரை பிரிந்து முத்துக்குமாருடன் சென்று விட்டார். அவர்கள் 2 பேரும் சுரண்டை வரகுண ராமபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அவரது சகோதரர் செல்வத்தை அழைத்துக்கொண்டு சுரண்டை வரகுணராமபுரத்துக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக முத்துக்குமாரும், அருணாதேவியும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதனை கண்ட சுரேஷ் அவர்களை வழிமறித்து முத்துக்குமாரை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். அதனை தடுக்க முயன்ற அருணா தேவியை அரிவாளால் கையில் வெட்டினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று முத்துக்குமார் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அருணா தேவிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ், செல்வம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • உறுதிமொழி ஏற்ற பின் அருகில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
    • செண்பக கால்வாய் கழிவு நீர் ஓடையில் கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் தூய்மையே சேவை நிகழ்ச்சியின் மூலமாக பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் வள்ளிமுருகன் தலைமையில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவரும் இணைந்து பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்ற பின் அருகில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

    பின்பு சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் தூய்மையை சேவை நிகழ்ச்சியின் மூலமாக செண்பக கால்வாய் கழிவு நீர் ஓடையில் ஒட்டு மொத்த கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது. நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு ஓடையில் தேங்கி கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டன.

    • சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த7 பேர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக 2 கிலோ 400 கிராம் அளவிலான கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் சுரண்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் 7 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் சுரண்டை சிவ குருநாத புரத்தை சேர்ந்த காசிராஜன் (வயது 26), ஜோசப் (27), ராம்குமார் (23), வெனிஷ் (22), மதன் (22), மைக்கேல் பவின் (24) மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் விற்பனைக்காக 2 கிலோ 400 கிராம் அளவிலான கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 7 பேரையும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

    • தென்மண்டலத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் ராமநாதபுரத்தில் நடை பெறுகிறது.
    • மாநாட்டிற்கு இளைஞர் அணியினரை அதிக அளவில் அழைத்து செல்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    சுரண்டை:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.முக. இளை ஞரணி ஆலோசனை கூட்டம் சுரண்டையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் நடந்தது.

    மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், மாவட்ட தொண்டரணி அமைப் பாளர் இசக்கி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணா ராஜா வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி மாவட்ட தி.மு.க. சார்பிலும், மாவட்ட இளை ஞரணி சார்பிலும் அவரது உருவப்ப டத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    தலைமை கழகத்தால் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பாளராக நியமிக்க ப்பட்ட ஜெய பாலனுக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வாழ்த்து தெரி விப்பது, தென்மண்டலத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பா ளர்கள் கூட்டம் ராம நாதபுரத்தில் நடை பெறுகிறது.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுவதை முன்னிட்டு மாவட்ட கழக ஒத்துழைப்போடு ஒன்றிய, நகர, பேரூர் கழக செய லாளர் ஒத்துழைப்போடு வாக்குச்சாவடி பொறுப் பாளர்களை மேற்படி கூட்டத்திற்கு அழைத்துச் செல்வது, வருகிற டிசம்பர் மாதம் இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடத்த அனுமதி வழங்கிய தி.மு.க. தலைவருக்கு நன்றி தெரிவித்தும், மேற்படி மாநாட்டிற்கு இளைஞரணி செயலாளரின் அறிவுறு த்தலின்படி மாநாட்டிற்கு இளைஞர் அணியினரை அதிக அளவில் அழைத்து செல்வது, இல்லம் தேடி உறுப்பி னர் சேர்க்கையை ஒன்றிய, நகர, பேரூர் உள்பட அனைத்து இடங்க ளிலும் மேலும் அதிகப் படுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் இளைஞர் அணி துணை அமைப் பாளர்கள் சிவக்குமார் ஐவேந்திரன்கிருஷ்ணராஜ் சுப்பிரமணியன் முகமது அப்துல் ரஹீம் மற்றும் பகுத்தறிவு பேரவை ஆறு முகம் வக்கீல் சக்தி சுப்பிர மணியன் நன்றி கூறினார்.

    ×