search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் தொடர்பு முகாம்"

    • வேதாளை மக்கள் தொடர்பு முகாமில் 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு மாற்று திறனாளி உதவித்தொகை ஆணைகள், 4 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை ஆணைகள், 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை ஆணை, 25 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள், 4 பயனாளி களுக்கு முழுப்புலம் பட்டா மாறுதல் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 26,585 மதிப்பிலான விலை யில்லா தையல் இயந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு ரூ. 10,036 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகள்,

    வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 690 மதிப்பிலான தென்னங் கன்று திரவ உயிரி உரங்களையும், தோட்டக்கலைத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.800 மதிப்பிலான மரக்கன்றுகள் என மொத்தம் 52 பயனாளிகளுக்கு 1.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

    முன்னதாக அரசு துறைகளின் சார்பில் மேற் கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம் , ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அல்லா பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
    • 155 பயனாளிகளுக்கு ரூ.13.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    வருசநாடு:

    மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். இந்த முகாமுக்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு 54 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் வேளாண்மை துறை, மாநில வாழ்வாதார இயக்கம், சுகாதார துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.38 லட்சம் மதிப்பீட்டில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மருத்துவ பெட்டகங்கள் என மொத்தம் 155 பயனாளிகளுக்கு ரூ.13.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முகாமில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    • மயிலாடும்பாறை நரியூத்து கிராமத்தில் வருகிற 11-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
    • பல்வேறு குறைகளுக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறை நரியூத்து கிராமத்தில் வருகிற 11-ந் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    ஆண்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேசன் அட்டை, விபத்து நிவாரணம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, விவசாயம் மற்றும் போக்குவரத்து துறை தொடர்பாக மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் பங்கேற்றார்.
    • அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மதுரை

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் பேய்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் சங்கீதா கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 250 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 6 ஆயிரத்து 394 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    ஊரக பகுதிகளை தன்னி றைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்க ளுக்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, சுகாதாரம் ஆகிய திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

    விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டு செய்வதன் மூலம் அதிக வருவாய் பெறலாம். இதற்காக அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்பு முகாமில் அமைச்சர், கலெக்டர் பங்கேற்றனர்.
    • 194 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்து 14 ஆயிரத்து 55 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் கே.நெற்புகப் பட்டி குரூப் சொக்கலிங்கம் புதூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு 166 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் தகுதி யுடைய 126 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்த கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 5 பணிகள் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், வருவாய் துறையின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 14 ஆயிரத்து 400 மதிப்பீட்டிலும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.16 ஆயிரத்து500 மதிப்பீட்டிலும் கூட்டுறவுத்துறை சார்பில் மொத்தம் ரூ.39 லட்சத்து 95 ஆயிரத்து 700 மதிப்பீட்டில் கடனுதவிகளும் உள்பட மொத்தம் 194 பயனாளி களுக்கு ரூ.61 லட்சத்து 14 ஆயிரத்து 55 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சரண்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், சொக்கலிங்கம் புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பெருமாள், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முருகமலை நகரில் வருகிற 9-ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
    • பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    பெரியகுளம் அருகே ஏ.புதுக்கோட்டை முருகமலை நகரில் வருகிற 9-ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொைக, புதிய ரேசன்அட்டை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விபத்து நிவாரணம்,

    விவசாயத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து ெகாள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • மக்கள் தொடர்பு முகாமில் ரூ.65 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • கலெக்டர், எம்.எல்.ஏ. பவர்டிரில்லர்களை வழங்கினர்.

    மானாமதுரை

    சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 124 பயனாளிகளுக்கு ரூ.64.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினர்.

    இதில் 26 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து17ஆயிரத்து 119 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகை ஆணைகளும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் மருந்து பெட்டகம் மற்றும் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58 ஆயிரத்து 550 மதிப்பீட்டில் சக்கர நாற்காலிகளும், 2 மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலான மகளிர் குழுவுக்கான சுழல் நிதிக்கான ஆணையும், 02 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான பவர்டி ரில்லர்களையும், தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 22 ஆயிரத்து 573 மதிப்பீட்டிலான கேசிசி கரும்பு கடனுதவிகளும், 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.28லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத் துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத் துறை) ஒன்றியக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், திருப்புவனம் வட்டாட்சியர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலச்சிந்தலைச்சேரி கிராமத்தில் வருகிற 12ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
    • உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் இதர துறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தேவாரம் உள்வட்டம் பண்ணைப்புரம் வருவாய் கிராமம் உட்கடை மேலச்சிந்தலைச்சேரி கிராமத்தில் வருகிற 12ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.

    உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேசன் அட்டை, ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவத்துத்துறை மற்றும் இதர துறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
    • தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெற செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் இளையாத்தங்குடி உள்வட்டம் தெற்கு இளையாத்தங்குடி குரூப், விராமதி கிராமத்தில், நாளை 7-ந் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் நாளை (26-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • நிலக்கோட்டை தாலுகாவில் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
    • இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெற நிலக்கோட்டை தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நிலக்கோட்டை,ஏப்.18-

    நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பகுதிகளில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை,ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் மனுக்கள் பெரும் மக்கள் தொடர்பு முகாம் திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.

    நிலக்கோட்டை ஒன்றியத்திற்கு 19 -ந்தேதி நிலக்கோட்டை ஹெச்-என்.பி.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மங்கள் பகவான் மண்டபத்தில்நடைபெறஉள்ளது. வத்தலகுண்டு ஒன்றியத்திற்குவருகின்ற 20-ந்தேதி வத்தலகுண்டு பேரூராட்சி அருகே உள்ள சமுதாயக்கூடத்தில் நடக்க இருக்கிறது.இம்முகாமில்மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டு அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளுக்கும் மனுக்கள் பெற உள்ளனர்.

    எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெறநிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார். முகாமில் 93 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 54 ஆயிரத்து 573 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் ஜெயகுமார், தனி துணை வட்டாட்சியர் மாரிசெல்வராஜ், மண்டல துணை வட்டாட்சியர் முருகேசன், வருவாய் அலுவலர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×