என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நுழைவு தேர்வு"
- டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) 8-ம் வகுப்பில் சேருவதற்கான ஆர்.ஐ.எம்.சி. தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.
- இத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு கட்டங்கள் கொண்டதாக இருக்கும்.
ேசலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது-
டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) 8-ம் வகுப்பில் சேருவதற்கான ஆர்.ஐ.எம்.சி. தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.
இத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு கட்டங்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம் கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.
விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01.06.2024 அன்று 11 1/2 வயது நிரம்பி யவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02.01.2011-க்கு முன்ன தாகவும் 01.07.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்ககூடாது. மேலும் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை , பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்திலும், முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண் 0427-2902903 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- ஜே.இ.இ. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் சிபிஎஸ்இ செய்முறை தேர்வை என்ன செய்வது என்று தவிக்கும் நிலை உள்ளது.
- தேர்வில் பங்கேற்க 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அடுத்து ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து என்ஜினீயரிங் படிக்க ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு 2 முறை நடத்தப்படுகிறது.
அதில் முதல் கட்ட ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு நாளை (24-ந்தேதி) தொடங்குகிறது. 31-ந்தேதி வரை இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 8 லட்சம் முதல் 9 லட்சம் வரை தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள்.
2-ம் கட்ட ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது. முதல்கட்ட தேர்வில் பங்கேற்றவர்களும், பங்கேற்காதவர்களும் 2-ம் கட்ட தேர்வை எழுத முடியும்.
ஜே.இ.இ. நுழைவு தேர்வு நடக்கும் நாட்களில் சில சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் செய்முறை தேர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
எனவே ஜே.இ.இ. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் செய்முறை தேர்வை என்ன செய்வது என்று தவிக்கும் நிலை உள்ளது.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்ச்சிக்கு மொத்த மதிப்பெண்ணில் செய்முறை தேர்வு மதிப்பெண்ணும் கட்டாயம் என்பதால் இந்த தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது மிகவும் அவசிய மாகும்.
எனவே ஜே.இ.இ. மெயின் தேர்வு நடைபெறும் நாட்களில் செய்முறை தேர்வுகளை நடத்தாமல் வேறு நாட்களுக்கு மாற்றும்படி மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நீட், செட், யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப், கேட்தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- முனைவர் பட்ட சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்பெறும் நுழைவு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
தஞ்சாவூர் :
தஞ்சை தமிழ்பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் தியாகராஜன் வெளியி–ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டச் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு (TURCET 2020) எழுதித் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க 1.8.2022 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
டார்செட் 2020-ல் தேர்ச்சி பெற்றவர்கள் முனைவர் பட்டச் சேர்க்கைக்கு 2022 ஜூலை பருவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அதன்பிறகு 2020 தேர்வுத் தகுதி செல்லாது. நீட், செட், யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப், கேட்தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2022 பருவத்திற்குப் பிறகு முனைவர் பட்டச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்பெறும் நுழைவுத் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்று பதிவாளர் முனைவர் தியாகராஜன் தெரிவித்தார்.
தற்போது ஆய்வியல் நிறைஞர் (எம்பில்) பட்டப் படிப்புகள், முதுகலைப் பட்டப் படிப்புகள், முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 15.8.2022 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2-ம் கட்ட ேஜ.இ.இ. நுழைவு தேர்வு விண்ணப்பப்படிவத்தை திருத்தம் செய்ய மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.
- முதற்கட்டமான பகுதி-1 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு ஏற்கனவே நடைபெற்று விட்டது.
சேலம்:
இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பகுதி 1, பகுதி 2 என 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமான பகுதி 1 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு ஏற்கனவே நடைபெற்று விட்டது.
இதையடுத்து பகுதி 2 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு (முதன்மை) 2022 நடத்துவதற்கான ஏற்பாடுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பில் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் பகுதி 2 ேஜ.இ.இ. நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தில் திருத்த செய்ய வேண்டி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்று அவர்களில் நலன் கருதி மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.
அதன்படி விண்ணப்ப தாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்ய நாளை (3 ந்தேதி) இரவு 11.50 மணி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.
விண்ணப்பப் படிவத்தில் மாணவ மாணவிகள் கவனமாக திருத்தம் செய்து பயனடையுமாறு என்.டி.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது. அதன்பிறகு, விவரங்களில் எந்தத் திருத்தமும் செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
சேலம்:
இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்.சி. (உபசரிப்பு மற்றும் ஓட்டல் மேலாண்மை) படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவு தேர்வு -2022 அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 4-ந்தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
சேலம், நாமக்கல்
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 4/2/2022 தொடங்கி, 3/5/2022 அன்று முடிவடைந்தது. இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ்-2 மாணவ- மாணவிகள் திரளானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவு தேர்வு கணினி வழியாக நாளை (18-ந்தேதி) நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, ேகாவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் சேலம், நாமக்கல் மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கோவையில் உள்ள மையத்தில் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற உள்ளது.
அனுமதி அட்டை
தேர்வுக்கான அனுமதி அட்டைகள் என்.டி.ஏ. இணையதளத்தில் வழங்கப்–பட்டுள்ளன. விண்ணப்ப–தாரர்கள் அனுமதி அட்டை–களை பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வேண்டும். மேலும் அதை சரிபார்த்து கொள்ளுமாறும், தேர்வு குறித்து வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக படிக்குமாறும் என்.டி.ஏ. அறிவுறுத்தி உள்ளது.
அனுமதி அட்டை தபால் மூலம் அனுப்பப்படாது. விண்ணப்பதாரர் அனுமதி கார்டை சிதைக்கவோ அல்லது அதில் உள்ள எந்தப் பதிவையும் மாற்றவோ கூடாது. அவற்றின் நகலை எதிர்கால குறிப்புக்காக நல்ல நிலையில் வைத்திருக்குமாறு என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்