என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அப்டா மார்க்கெட்"
- அப்டா திட்டம் மற்றும் மேம்பாடு பொன்னம்பலம் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தி பேசினார்.
- அப்டா மார்க்கெட் தலைவர் பால்ராஜ் ஏற்புரை வழங்கினார்.
என்.ஜி.ஓ.காலனி :
நாகர்கோவில் தேரே கால்புதூர் விவசாய விளைபொருள் உற்பத்தியா ளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் (அப்டா) 2023-2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று அப்டா மார்க்கெட் அலுவலக சங்க கூட்ட அரங்கத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் அப்டா சங்க கவுரவ ஆலோசகர் வர்க்கீஸ் வரவேற்று பேசினார். புதிய தலை வராக பால்ராஜ், பொதுச்செயலாளராக சுதேசன், பொருளாளராக சிவசங்கர், துணை தலை வர்களாக ராதாகிருஷ்ணன், கிருஷ்ணதங்கம், துணை செயலாளர்களாக ராஜா, கர்ணன், செயற்குழு உறுப்பி னர்களாக கோபால கிருஷ்ணன், வைகுண்ட மணி, சுந்தர்ராஜ், அய்யப் பன், செந்தில்குமார், சாகுல்ஹமீது, சண்முக வேல், மணிகண்டன், முருகன், சொர்ணம் பிள்ளை, ராஜேந்திரன், டேவிட், கணேசன், தங்கத்துரை, விஜயகுமார், பாபு, சுயம்புலிங்கம், பொன்லிங்கம் ஆகியோர் பதவி ஏற்றனர்.
பதவி ஏற்ற புதிய நிர்வாகிகளுக்கு வெற்றி சான்றிதழ்களை தேர்தல் குழு தலைமை அதிகாரி வக்கீல் இளம்பரிதி, அப்டா மார்க்கெட் சட்ட ஆலோசகர் வக்கீல் பெறி ஆகியோர் வழங்கினர்.
இவர்களுக்கு அப்டா திட்டம் மற்றும் மேம்பாடு பொன்னம்பலம் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தி பேசினார். அப்டா மார்க்கெட் தலைவர் பால்ராஜ் ஏற்புரை வழங்கினார்.
தேரேகால்புதூர் பஞ்சா யத்து தலைவர் சோமு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில செயல் தலைவர் டேவிட்சன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில துணை தலைவர் கருங்கல் ஜார்ஜ், தேர்தல் குழு தலைமை அதிகாரி இளம்பரிதி, அப்டா மார்க்கெட் சட்ட ஆலோசகர் வக்கீல் பெறி மற்றும் அப்டா பொதுக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள், உற்பத்தி யாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் குடும்பத்தினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் அப்டா துணை தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- முதல் விற்பனையை பேக்கரி உரிமையாளர் ஜெகனின் மனைவி ஷீபா தொடங்கி வைத்தார்.
- விற்பனையாகும் அனைத்து பேக்கரி வகைகளும் இங்கே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் தேரேகா ல்புதூர் அப்டா மார்க்கெட் அருகே இரட்டைப்பனை டீ ஸ்டால் இயங்கி வருகிறது. இதன் அருகே இரட்டை ப்பனை பேக்கரி நேற்று புதிதாக திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் மாநகராட்சி மேயரு மான மகேஷ் தலைமை தாங்கினார். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பேக்கரி உரிமையாளர் ஜெகன் வரவேற்றார். பேக்கரியை புதுகுடியிருப்பு எல்ஷட மிஷன் ஸ்தாபகர் அருட் சகோதரி றோசம்மாள் திறந்து வைத்தார். எல்ஷட மிஷன் தலைவர் ஜான் ஜெயக்குமார் ஜெபம் செய்தார். முதல் விற்பனையை பேக்கரி உரிமையாளர் ஜெகனின் மனைவி ஷீபா தொடங்கி வைத்தார்.
அதனை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவரும், பாரதிய ஜனதா பொருளா ளருமான முத்துராமன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேக்கரி உரிமையாளரின் குடும்பத்தி னர், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதிதாக திறக்கப்பட்ட பேக்கரியில் சிப்ஸ் வகை கள், இனிப்பு, கார வகைகள், பிஸ்கட், விதவிதமான அல்வா, இனிப்பு வகை, முறுக்கு, கடலை, பாரம்பரிய இனிப்பு வகைகள், பப்ஸ் வகைகள், கம்பெனி குளிர்பானங்கள், பாதாம் பால், பிரபல நிறுவனங்கள் தயாரிப்பான சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு விற்பனையாகும் அனைத்து பேக்கரி வகைகளும் இங்கே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்ப டுகிறது.
மேலும் பேக்கரியில் பலவிதமான கேக் வகைகள் ½ கிலோ முதல் பல்வேறு எடை பிரிவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆர்ட ரின் பேரிலும் கேக்குகள் விற்பனை செய்யப்படும் என உரிமையாளர் ஜெகன் தெரிவித்தார்.
- சம்பந்தப்பட்ட கடை களுக்கு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டது.இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைகளை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொ ண்டனர்.
- ஓட்டல்கள் பேக்கரிகள் உள்பட 7 கடைகளை இடித்து அகற்றினார்கள். மேலும் இரண்டு கடைகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கடைகள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
ஜூன். 17-
கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பகுதியில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து அந்த பகுதியில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இணைப்பு சாலை யில் ரவுண்டானா அமைக்கப்ப டுகிறது.இந்த ரவுண்டானா அப்டா மார்க்கெட்டில் முன்பகுதியில் அமைப்ப தற்கு கடைகள் இடையூறாக இருந்தது. இதையடுத்து அந்த கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சம்பந்தப்பட்ட கடை களுக்கு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டது.இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைகளை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொ ண்டனர். இன்று காலை ஜேசிபி எந்திரம் உதவியு டன் அப்டா மார்க்கெட் முன் பகுதியில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டது.
ஓட்டல்கள் பேக்கரிகள் உள்பட 7 கடைகளை இடித்து அகற்றினார்கள். மேலும் இரண்டு கடைகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கடைகள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்