search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரணமாக"

    • அம்மாபேட்டை பகுதியில் உள்ள அய்யாசாமி பார்க்கில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைத்து பஞ்சாமிர்தத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அக்கமாகுளம் அடுத்த நாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி . இவரது மகன் பஞ்சாமிருதம் (வயது 26). டிரைவர்.

    பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

    இவர் சேலம் தாதகாப்பட்டியில் வசித்து வரும் தனது சகோதரர் காளிமுத்து என்பவருடன் தங்கியிருந்து சேலம் மாநகராட்சியில் ஒப்பந்த டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் பஞ்சாமிர்தம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள அய்யாசாமி பார்க்கில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென பரவியது. உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் பஞ்சாமிர்தம் வலியால் அலறி துடித்தபடி அங்கும், இங்குமாக ஓடினார்.

    அந்த வழியாக சென்றவர்கள், இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பதட்டத்தில் கூச்சலிட்டு அக்கம், பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைத்து பஞ்சாமிர்தத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பரிதாபமாக இறந்தார்

    இதை அறிந்த சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற எண்.2 நீதிபதி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று பஞ்சாமிர்தமிடம் வாக்குமூலம் வாங்கினார்.

    இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பஞ்சாமிர்தம் இன்று காலை 6.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    விசாரணை

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஞ்சாமிர்தம் குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்ததாக போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ேவறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதை வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் நாளை (19-ந் தேதி) முதல் ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திலிருந்து ஈரோடு வரும் அனைத்து பஸ்கள் மட்டும் அண்ணமார் பெட்ரோல் பங்க் வந்தடைந்து நாடார் மேட்டிலிருந்து இடது புறமாக திரும்பி ரீட்டா பள்ளி, சாஸ்திரி நகர் மற்றும் ரெயில்வே மேம்பாலம் வழியாக வந்து சென்னிமலை ரோடு வழியாக மாநகர் பகுதியை அடையலாம்.

    இதேபோல் ஈரோட்டில் இருந்து கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் காளைமாடு சிலை, லோட்டஸ் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

    அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளும் ரிங்ரோடு வழியாக முத்துகவுண்டன் பாளையம், ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் ஆர்ட்ஸ் காலேஜ் வழியாக திண்டல் வந்தடைந்து மாநகருக்குள் செல்லலாம்.

    இதேபோல் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதையான அண்ணமார் பெட்ரோல் பங்க், நாடார் மேடு, சாஸ்திரி நகர் வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×