search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்"

    • நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
    • இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுகிறது.

    இரணியல்:

    திங்கள்நகர்-நெய்யூர்-அழகிய மண்டபம் செல்லும் சாலையில் இரட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுவதால் இரட்டை ரெயில்வே மேம்பால பணிகள் நடை பெறும் இடத்தை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் கடந்த 26-ந்தேதி பார்வை யிட்டு வாகனங்கள் மாற்று பாதையில் செல்லவும் பணிகளை சுமார் 40 நாட்களில் விரைந்து முடிக்கவும் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், ரெயில்வே துணை முதன்மை பொறியாளர் பமிலா, குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    இந்நிலையில் நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது, திங்கள் நகரில் இருந்து திருவிதாங்கோடு, அழகிய மண்டபம் செல்லும் வாகனங்கள் திங்கள்நகர் ரவுண்டானா, இரணியல் சந்திப்பு, ஆழ்வார்கோவில், தக்கலை வழியாகவும், அழகிய மண்டபம், திரு விதாங்கோட்டில் இருந்து திங்கள்நகர் செல்லும் வாகனங்கள் திரு விதாங்கோடு, வட்டம், ஆழ்வார் கோவில், இரணி யல் சந்திப்பு திங்கள் நகர் வழியாகவும் செல்லும்படி ஒருவழி போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டு நாளை முதல் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்ப டுகிறது. ஆகவே பொது மக்கள் போக்குவரத்து காவல்துறைக்கும், ரெயில்வே நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தந்து மாற்று பாதையில் செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
    • இது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் வரை மீனவர்களின் படகுகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக மீனவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தங்களுடைய படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்து சரி செய்யும் பணிகள் மற்றும் வண்ணம் தீட்டுவது போன்ற பணி களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று நீரோடி முதல் ராஜாக்கமங்க லம் வரை உள்ள மீனவ கிராமங்களில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

    இந்த ஆய்வில் மீனவருடைய படகுகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா, கட லுக்கு செல்லக்கூடிய அளவுக்கு தரமான முறையில் படகு உள்ளதா, காப்பீடு செய்யப்பட்டுள்ளதா இது போன்ற எல்லா விதமான ஆவணங்களை சரிசெய் பார்த்து அவர்கள் அதற்கான ஒப்புதல் செய்கின்றனர்.

    இது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆய்வில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ள படங்களுக்கு மட்டும் தான் 100 லிட்டர் மண்எண்ணை மானியத்தில் வழங்கப்படு கிறது. கடலுக்கு சென்ற பிறகு ஏதாவது நேரிட்டால் அவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்குவது போன்றவற்றிற்கு இது ஒரு முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.
    • ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.

    இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வள்ளம் மற்றும் நாட்டு படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்களின் விலை"கிடுகிடு" வென கடுமையாக உயர்ந்து உள்ளது.

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆரோக்கியபுரம், கோவளம், கன்னியாகுமரி, வாவத்துறை, கீழ மணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நாட்டுப்படகு மற்றும் வள்ளங்களில் பிடித்து வரப்பட்ட மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

    கன்னியாகுமரி வாவத்துறை மீன் இறங்கு தளத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்கள் வாங்குவதற்காக குவிந்து இருந்தனர். மீன் வரத்து குறைவு காரணமாக இன்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    ரூ. 700 ஆக இருந்த ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1000-க்கும், ரூ.250 விலைபோன பாரை மீன் கிலோ ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்ற விள மீன் கிலோ ரூ.400-க்கும், ரூ.250க்கு விற்ற ஊலா மீன் கிலோ ரூ.350-க்கும், ரூ.250 ஆக இருந்த சங்கரா மீன் கிலோ ரூ.350-க்கும் விற்பனையானது.

    விசைப்படகுகள் மீன்பிடிதடை காலம் என்பதால் இன்னும் ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரை திரும்பும் மீனவர்கள்

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன் பிடிக்க நாளை முதல் தடை அமுலுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படுகிறது.

    இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் 2 மாதகாலம் களை இழந்து வெறிச்சோடி காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கும். இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள். வள்ளம் மற்றும் கட்டு மரங்களில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு இல்லை.

    இந்த 2 மாத காலமும் உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் அபாயநிலை ஏற்படும்.

    இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி அந்நிய செலாவணி வருவாய் இழப்பும் ஏற்படும். நாளை தடை காலம் தொடர்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விசைப்படகுகளுடன் நேற்று முதல் அவசர அவசரமாக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரைக்கு திரும்பிய வண்ணமாக உள்ளனர்.

    • ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் என்ற அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.
    • இவை இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    சொகுசு படகுகளை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பயனாக இந்த 2 அதிநவீனசொகுசு படகுகளையும் வருகிற 17-ந்தேதி முதல் படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
    • போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட் டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) 9-ம் நாள் திருவிழா நடைபெறு கிறது. நாளை (சனிக்கி ழமை) திருவிழா நிறைவ டைகிறது. இந்த திருவிழா வில் 8, 9, 10-ம் நாட்களின் போது ஏராளமான மக்கள் வருவார்கள். இதனால் ஆலய வளாகத்திலும், கேப் ரோட்டிலும் மக்கள் கூட் டம் அதிகமாக இருக்கும். இதனால் போக்குவ ரத்து நெசரிசல் ஏற்படும். என வே 9, 10-ம் நாள் திரு விழா க்களி ன்போ து போலீ சார் போ க்கு வரத்து மாற் றம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண் டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாகர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன் னிட்டு பொதுமக்கள் மற் றும் போக்குவரத்து நலன் கருதி போக்குவரத்து மாற் றம் செய்யப்படுகிறது. கன் னியாகுமரி, இருளப்பபுரம் மற்றும் ஈத்தாமொழியில் இருந்து பீச்ரோடு வழியாக நாகர்கோவில் வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக ஆயுதப் படை முகாம் ரோடு பொன்னப்ப நாடார் காலனி, கார்மல் பள்ளி, ராமன்புதூர், செட்டிக்குளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    வடசேரி, கோர்ட்டு ரோடு மற்றும் அண்ணா பஸ் நிலை யத்தி லிருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், பறக்கை, இருளப்பபுரம் மற் றும் ஈத்தாமொழி மார்க்க மாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு. பொதுப்பணித் துறை அலுவலக சாலை வழியாக செட்டிக்குளம் -சந் திப்பு.இந்து கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திரு விழாமுடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவ ரத்து மாற்ற த்திற்கு பொதுமக் களும், வாகன ஓட்டுனா களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கெள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 2019–-20ல், 12-க்கும் மேற்பட்ட புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளனர்.
    • ஈரோடு மாநகராட்சி , கோபி நகராட்சி பகுதியில் தீவிர தொழுநோய் கண்டுபிடிக்கும் முகாம் வரும், 16 முதல் செப்டம்பர் 3-ந் வரை நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 2019–-20ல், 12-க்கும் மேற்பட்ட புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளனர். அவ்வாறு கண்டறியப்பட்ட தாளவாடி, சிவகிரி, மொடக்குறிச்சி, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், கோபி, பவானி, நம்பியூர் ஆகிய 10 யூனியன்,

    ஈரோடு மாநகராட்சி , கோபி நகராட்சி பகுதியில் தீவிர தொழுநோய் கண்டுபிடிக்கும் முகாம் வரும், 16 முதல் செப்டம்பர் 3-ந் வரை நடக்க உள்ளது.

    இப்பணியில், 1,322 முன் களப்பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இவர்கள் வீடு,வீடாக சென்று ஆண்களை ஆண் களப்பணியாளரும், பெண்களை பெண் களப்பணியாளரும் பரிசோதனை செய்ய உள்ளனர்.

    ஆரம்ப அறிகுறியாக தோலில் சிவந்த அல்லது வெளிறிய உணர்ச்சியற்ற தேமல், கை மற்றும் கால்களில் மதமதப்பு, சூடு, குளிர்ந்த உணர்வு தெரியாமை, நீண்ட நாட்களாக ஆறாத புண், காது மடல் தடித்திருத்தல், புருவமுடி இல்லாமல் இருத்தல், உடலில் முடிச்சு, முடிச்சாக காணப்படுதல் உடனடியாக பரிசோதி க்கப்பட வேண்டும்.

    இதற்காக, அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லுாரி மருத்துவனைகளியலும் பரிசோதனை மேற்கெ ாள்ளப்படுகிறது. நோயின் தன்மைக்கு ஏற்ப ஆறு முதல், ஒரு ஆண்டுக்குள் முழுமையான சிகிச்சை பெறலாம்.

    இதனை கண்ட றிவதால், ஊனத்தை தடுக்கலாம். புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழுநோயாளிகளின் உடனிருப்போர், அருகில் வசிப்போர், உடன் பணி புரிவோருக்கும் தொழுநோய் தடுப்பு மருந்து வழங்கப்படும். மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும். இந்தத் தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதை வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் நாளை (19-ந் தேதி) முதல் ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திலிருந்து ஈரோடு வரும் அனைத்து பஸ்கள் மட்டும் அண்ணமார் பெட்ரோல் பங்க் வந்தடைந்து நாடார் மேட்டிலிருந்து இடது புறமாக திரும்பி ரீட்டா பள்ளி, சாஸ்திரி நகர் மற்றும் ரெயில்வே மேம்பாலம் வழியாக வந்து சென்னிமலை ரோடு வழியாக மாநகர் பகுதியை அடையலாம்.

    இதேபோல் ஈரோட்டில் இருந்து கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் காளைமாடு சிலை, லோட்டஸ் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

    அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளும் ரிங்ரோடு வழியாக முத்துகவுண்டன் பாளையம், ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் ஆர்ட்ஸ் காலேஜ் வழியாக திண்டல் வந்தடைந்து மாநகருக்குள் செல்லலாம்.

    இதேபோல் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதையான அண்ணமார் பெட்ரோல் பங்க், நாடார் மேடு, சாஸ்திரி நகர் வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×