search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயங்க் அகர்வால்"

    • ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2-வது இடம் பிடித்தது.
    • ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.

    அனந்தபூர்:

    துலீப் கோப்பை தொடரின் 3-வது மற்றும் கடைசி ரவுண்ட் ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெற்றன. இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி, கெய்வாட் தலைமையிலான இந்தியா சி உடன் மோதியது.

    இதில் முதலில் ஆடிய ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சி அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல் அவுட்டானது.

    63 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஏ அணி 286 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ரியான் பராக் 73 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 53 ரன்னும் எடுத்தனர். இந்தியா சி சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சி அணி களமிறங்கியது. அந்த அணியின் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில் இந்தியா சி அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா ஏ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    மற்றொரு போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் மோதின முதலில் ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் சதமடித்து 106 ரன் குவித்தார்.

    இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 116 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 87 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா டி சார்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், ஆதித்யா தாக்கரே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிக்கி புல் 119 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அவுட்டானார்.

    இதையடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா பி அணி 115 ரன்களில் சுருண்டது. இதனால் 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா டி அணி வெற்றி பெற்றது.

    மொத்தமாக விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஏ அணி 2024 துலீப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    கெய்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2வது இடமும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி மூன்றாம் இடமும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.

    • சன்ரைசர்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
    • இன்றைய போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

    நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்னுக்கு மேல் குவித்து வியக்க வைத்த ஐதராபாத் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது.

    இருப்பினும் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறும்பட்சத்தில் அந்த அணி தடாலடியாக சரிவை சந்திக்கிறது.

    கடந்த 4 ஆட்டங்களில் 3 சறுக்கலை சந்தித்துள்ள ஐதராபாத் அணி முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் ஐதராபாத் நிர்ணயித்த 174 ரன் இலக்கை மும்பை அணி 17.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

    முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தது அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. எனவே அந்த அணி சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களது பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டியது முக்கியமானதாகும்.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 444 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (339), அபிஷேக் ஷர்மா (326), நிதிஷ்குமார் ரெட்டியும், பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமாரும் வலுசேர்க்கிறார்கள்.

    கடந்த சில ஆட்டங்களில் அபிஷேக் ஷர்மாவும், ஹென்ரிச் கிளாசெனும் நிலைத்து நின்று ஆடாதது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. மேலும் ஷபாஸ் அகமது, அப்துல் சமத் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

    லக்னோ அணி

    லக்னோ அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் ஐதராபாத்துக்கு இணையாக இருக்கும் லக்னோவும் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய ஆட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டும்.

    லக்னோ அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மண்ணை கவ்வியது. 236 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் 137 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் (36 ரன்), லோகேஷ் ராகுல் (25 ரன்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த மோசமான தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் லக்னோ அணி உள்ளது.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதம் உள்பட 431 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (ஒரு சதம், 2  அரைசதம் உள்பட 352 ரன்), நிகோலஸ் பூரன் (315 ரன்), குயின்டான் டி காக் நல்ல நிலையில் உள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர்

    மயங்க் யாதவ் காயம் காரணமாக ஆடமுடியாமல் போனதுடன், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மொசின் கான் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணியின் பந்து வீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    பந்து வீச்சில் யாஷ் தாக்குர், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கிறார்கள். குருணல் பாண்ட்யா ஏற்றம் காண வேண்டியது இன்றியமையாததாகும்.

    வெற்றிப்பாதைக்கு திரும்பி 7-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், ஷபாஸ் அகமது, அப்துல் சமத், கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன்.

    லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிலோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், குருணல் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக், மொசின் கான் அல்லது யாஷ் தாக்குர்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார்
    • தனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது

    ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    அப்போட்டியில் மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் போரல் விக்கெட்டை வீழ்த்தினார் ராணா. அதன் பிறகு அவர் மீண்டும் பிளையிங் கிஸ் கொடுக்க முயன்று பின்பு தன்னை கட்டுப்படுத்தினார். ஆனாலும் அதற்கு பதிலாக அவர் வெளியே போ என்றவாறு சைகை செய்தார்.

    இதனால் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிவீரர் ஹர்ஷீத் ராணாவுக்கு 100% அபராதம் மற்றும் ஒருபோட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • இரண்டு போட்டிகளில் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
    • 3-வது போட்டியில் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக மயங்க் அகர்வால் விளையாடி வருகிறார். இவர் இரண்டு போட்டிகளில் களம் இறங்கி அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 155 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டினார்.

    அதிவேகமாக பந்து வீசினாலும், துல்லியமாக பந்து வீசினார். இதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவரது பந்தில் ரன்கள் குவிக்க திணறினார். இரண்டு போட்டிகளில் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    ஆனால், 3-வது போட்டியில் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். இந்த நிலையில் நாளை மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் விளையாட அனைத்து வகையிலான டெஸ்டிலும் தேர்ச்சி பெற்று விட்டனர் என லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்கள் மோர்கல் தெரிவித்துள்ளார்.

    புள்ளிகள் பட்டியலில் லக்னோ 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    • அகர்வால் விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் பிளையிங் கிஸ் கொடுத்து கேலி செய்வார்.
    • மயங்க அகர்வாலுக்கு ரோகித் சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து கலாய்த்த புகைப்படம் வைராலாகி வருகிறது.

    ஐபிஎல் 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுப்பட்ட போது மும்பை அணி வீரர் ரோகித் சர்மாவும் ஐதராபாத் அணி வீரர் மயங்க் அகர்வாலும் சந்தித்து கொண்டனர். அப்போது மயங்க அகர்வாலுக்கு ரோகித் சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து கலாய்த்தார்.

    எதற்காக ரோகித் அப்படி செய்தார் என்றால், ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது ஐதராபாத் அணி வீரர் அகர்வால் விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் பிளையிங் கிஸ் கொடுத்து கேலி செய்வார். அதனை வைத்து ரோகித் மயங்க் அகர்வாலை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    மயங்க் அகர்வாலை கிண்டல் செய்த ராணாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் அகர்வால் விக்கெட்டை ராணா கைப்பற்றினார்.

    ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஐதரபாத் அணி பேட்டிங் செய்த போது அகர்வாலை விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் கேலி செய்யும் விதத்தில் சைகை காட்டினார். இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயங்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயங்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் மயங்க் அகர்வாலின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மயங்க் அகர்வால் குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி என எக்ஸ் தளத்தில் தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    அதில், நான் இப்போது நன்றாக உணர்கிறேன். மீண்டு வர தயாராகி வருகிறேன். குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி. பிரார்த்தனைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, அனைவருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

    இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். விமானத்தில் அமர்ந்திருக்கும் போது தண்ணீர் என்று தவறாக நினைத்து மயங்க் அந்த திரவத்தை தனக்கு முன்னால் குடித்ததாக மேலாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து மேற்கு திரிபுரா எஸ்பி கிரண் குமார் கூறுகையில், மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    • மயங்க் அகர்வால் அண்மையில் முடிந்த ரஞ்சி தொடரில் அதிக ரன் (9 ஆட்டத்தில் 990 ரன்) குவித்தவர் ஆவார்.
    • மத்தியபிரதேசம்- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடக்கிறது.

    கொல்கத்தா:

    இரானி கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு ரஞ்சி சாம்பியன் அணி, இதர இந்தியா அணியுடன் (ரெஸ்ட் ஆப் இந்தியா) மோதுவது வழக்கம். 2021-22-ம் ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற மத்தியபிரதேச அணிக்கு அப்போது இரானி கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிட்டவில்லை.

    ஏனெனில் அந்த சமயம் கொரோனா தாக்கத்தால் முந்தைய சீசனில் ஆட வேண்டிய சவுராஷ்டிராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனால் இந்த முறை மத்திய பிரதேச அணிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மத்தியபிரதேசம்- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை குவாலியரில் நடக்கிறது. இதற்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் அணியை வழிநடத்த உள்ளார்.

    இவர் தான் அண்மையில் முடிந்த ரஞ்சி தொடரில் அதிக ரன் (9 ஆட்டத்தில் 990 ரன்) குவித்தவர் ஆவார். அதே சமயம் மும்பை வீரர் சர்ப்ராஸ் கானுக்கு உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடிய போது கை நடுவிரலில் ஏற்பட்ட காயத்துக்கு 10 நாட்கள் வரை ஓய்வில் இருக்கும்படி டாக்டர் அறிவுறுத்தி இருப்பதால் இரானி கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் இடம் பெற்றுள்ளார்.

     

    ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வருமாறு:- மயங்க் அகர்வால் (கேப்டன்), சுதிப்குமார் காரமி, ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஹர்விக் தேசாய், முகேஷ் குமார், அதித் சேத், சேத்தன் சகாரியா, நவ்தீப் சைனி, உபேந்திர யாதவ், மயங்க் மார்கண்டே, சவுரப் குமார், ஆகாஷ் தீப், பாபா இந்திரஜித், புல்கித் நரங், யாஷ் துல். மத்திய பிரதேச அணி விக்கெட் கீப்பர் ஹிமன்ஷூ மந்திரி தலைமையில் களம் காணுகிறது. ரஜத் படிதார், வெங்கடேஷ் அய்யர், அவேஷ்கான் உள்ளிட்டோரும் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள்.

    • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது.
    • அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம்.

    16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் ஒரு போட்டியையும், வெளியில் சென்று ஒரு போட்டியையும் விளையாட இருப்பதினால் மிகச் சிறந்த தொடராக இத்தொடர் அமைய வாய்ப்புள்ளது. அதோடு இம்முறை குறிப்பிட்ட சில புதிய விதிமுறைகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தொடரானது சுவாரசியமாக நடைபெறும் என்று தெரிகிறது.

    இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது வரும் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் இம்முறை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே சன்ரைசர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனை இந்த ஏலத்தில் தேர்வு செய்து வாங்க இருக்கிறது.

    அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணி எந்த ஒரு வீரரை கேப்டனாக தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம். அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியை வழிநடத்திய விதமும், அவர் எடுத்த சில அதிரடியான முடிவுகளும் அவர் ஒரு பயமற்ற, சுயநலமற்ற வீரர் என்பதை வெளிக்காட்டுகிறது.

    எனவே நிச்சயம் அவரால் சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட முடியும். அதோடு வில்லியம்சனை ஏலத்தில் எடுக்க பெரியளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த வகையில் தங்களது மிடில் ஆர்டரை பலப்படுத்த அவரை நீங்கள் குறைந்த தொகைக்கு கூட ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

    என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

    அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலும் அவரது தலைமையிலான அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மயங்க் அகர்வால் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    • தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளதால் அகர்வால் நேரடியாக அணி வீரர்களுடன் இணைவார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முன் இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் டெஸ்ட் அணியில் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படிருந்தார். அவர் தற்போது இந்திய அணியில் இணையவுள்ளார். கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் உடல் நலம் பாதிப்படைந்துள்ள நிலையில் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மயங்க் அகர்வால் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளதால் மயங்க அகர்வால் நேரடியாக அணி வீரர்களுடன் இணைவார்.

    அகர்வால் ரஞ்சி டிராபியில் 21 டெஸ்ட் போட்டிகளில் 41.33 சராசரியுடன் 1,488 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும்.

    • கேஎல் ராகுல் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை.
    • ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார்

    இந்திய அணி கடந்த வருடம் (2021) ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து உள்ளது.

    முதல் பயணமாக கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, சமி, அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், சர்துல் தாகூர், பிரிதிஷ் கிருஷ்ணா, புஜாரா, ஹனுமன் விஹாரி, விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகியோர் லண்டன் சென்றடைந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பிறகு இரண்டாவது பயணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோர் லண்டன் செல்ல உள்ளனர்.

    இந்நிலையில் கேஎல் ராகுல் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அதனால் அவருக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நாளைக்குள் அவர் அணியில் இடம் பெறுவாரா? இல்லையா என்பது குறித்து தகவல் தெரியும். ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

    ×