search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திணறல்"

    • 3 நாட்கள் ஆன பிறகும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
    • கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தின் பின் பக்கம் உள்ள கடலில் கடந்த 2-ந்தேதி வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டி ருந்தது. இது குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த வாலிபரின் பிணத்தை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பொதுமக்களின் உதவியுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி முழ்கி இறந்தாரா? அல்லது வேறு எங்காவது வைத்து அவரை கொலை செய்துவிட்டு பிணத்தை கொண்டு வந்து கடலில் வீசினார்களா? அல்லது அவர் வேறு எங்காவது கடலில் மூழ்கி இறந்து அவரது உடல் அலையில் இழுத்து கொண்டுவரப்பட்டு கன்னியாகுமரி கடற்கரை யில் கரை ஒதுங்கியதா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடநாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த வாலிபர் யார்? என்பது குறித்து 3 நாட்கள் ஆன பிறகும் இன்னும் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போலீ சார் திணறி வருகிறார் கள். கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த வாலிபரின் சட்டை மற்றும் பேண்டில் எந்தவித அடையாள அட்டைகளும் இல்லாததால் இந்த நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    • கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் மூச்சு விட சிரமப்பட்டு திடீரென பலியானார்.
    • இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் பேரவூரணி சங்கமங்களம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (22). இவர் ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் நேரு வீதியில் தங்கி தனியார் கார்மெண்சில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் அவரது அறையிலேயே இருந்தார். அன்று மாலை அவரது சகோதரர் வந்து பாலமுருகனை பார்த்தபோது மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    இதையடுத்து பாலமுருகனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாலமுருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×