என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233879"

    • நாளை மதியம் கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்துவிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • என்ன காரணத்துக்காக டெல்லி சென்றுள்ளார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணி அளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாளை மதியம் சென்னை வந்துவிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    என்ன காரணத்துக்காக டெல்லி சென்றுள்ளார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

    • அமைதியை உலகெங்கும் பரப்பிய முகமது நபி பிறந்த இத்திருநாளை நினைவுகூர்ந்து, போற்றிக் கொண்டாடி மகிழ்வோம்.
    • அனைத்து மக்களும் இத்திருநாளை மகிழ்வுடனும், பரஸ்பர அன்புடனும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    'மிலாதுன் நபி' திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய உளங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அமைதியை உலகெங்கும் பரப்பிய முகமது நபி பிறந்த இத்திருநாளை நினைவுகூர்ந்து, போற்றிக் கொண்டாடி மகிழ்வோம்.

    அனைத்து மக்களும் இத்திருநாளை மகிழ்வுடனும், பரஸ்பர அன்புடனும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • தி.மு.க. அமைச்சர்கள் மீது அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பெரிய ஆதாரங்களை கொடுத்து விட்டு வந்துள்ளாராம்.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கவர்னர் ரவி சமீபத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆள் ஆளுக்கு மனதில் தோன்றியதை எல்லாம் சொல்லி பரபரப்பை அதிகப்படுத்தி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி விவாதிக்கப்படுகிறது.

    உண்மையில் கவர்னர் ரவி எதற்காக டெல்லி சென்று இருக்கிறார்?

    * தி.மு.க. அமைச்சர்கள் மீது அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பெரிய ஆதாரங்களை கொடுத்து விட்டு வந்துள்ளாராம். இதுபற்றி விவாதிக்கவே கவர்னரை அமித்ஷா அழைத்துள்ளார் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

    * பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கவர்னர் ரவி சமீபத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தென் இந்தியாவில் எப்படி செயல்படுகிறது என்பதை மத்திய உள்துறைக்கு விரிவான விளக்கமாக கொடுத்தது கவர்னர் ரவிதான். எனவே அதுபற்றி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கவே டெல்லியில் இருந்து கவர்னருக்கு அழைப்பு வந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

    * தமிழக அரசின் மசோதாக்களில் சிலவற்றை கவர்னர் ரவி இன்னமும் ஏற்காமல் உள்ளார். குறிப்பாக பல்கலைக்கழக வேந்தர் பற்றிய விவகாரம். இது தொடர்பாக டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கவே அவர் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளையும் கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
    • டெல்லியில் 3 நாட்கள் தங்கி இருக்கும் கவர்னர் ரவி வருகிற 30-ந்தேதி (வெள்ளி) சென்னை திரும்புகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையை தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கோவை, சேலம், ஈரோடு, கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டி.ஜி.பி.சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

    மத்திய மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா கூறும் போது, 'இந்த சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

    இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார். இன்று மாலையில் டெல்லி செல்லும் கவர்னர் ரவி நாளை டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

    மேலும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் 3 நாட்கள் தங்கி இருக்கும் கவர்னர் ரவி வருகிற 30-ந்தேதி (வெள்ளி) சென்னை திரும்புகிறார்.

    பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னரின் திடீர் டெல்லி பயணமும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சென்னை வந்திருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி உள்ளார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருந்தபோது தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசி இருந்தார்.

    சென்னை:

    சென்னை வந்துள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.

    தஞ்சையில் நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை வந்திருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி உள்ளார். அவருடன் மத்திய இணை மந்திரி எல்.முருகனும் உடன் சென்றிருந்தார். இவர்கள் இருவரும் சுமார் 30 நிமி டங்களுக்கு மேல் கவர்னருடன் பேசிக் கொண்டிருந்தனர்.

    தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வரும் வேளையில் தமிழக அரசு இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியாக மாநில கல்வி கொள்கைக்கான குழு அமைத்துள்ளதால் அதுபற்றியும் இவர்கள் விரிவாக ஆலோசித்ததாக தெரிகிறது.

    ஏற்கனவே கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருந்தபோது தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது மற்றும் தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசி இருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக இப்போது பேச்சுவார்த்தை அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாரத நாட்டுக்காக ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனர். பாராத நாடு முழுவதும் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.
    • சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் சிப்பாய் புரட்சி 216-வது நினைவு தினத்தையொட்டி இன்று காலை வேலூர் கோட்டை அருகே அலங்கரிக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ராணுவ இசை முழக்கத்துடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து வேலூர் கோட்டை வளாகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்‌. ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    பாரத நாட்டுக்காக ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனர். பாராத நாடு முழுவதும் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம். சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

    தமிழ் மிகவும் பழமையான மொழி, சக்திவாய்ந்த மொழி. தமிழ் மக்களை போன்று பேச வேண்டும் என்பது எனது ஆசை, நிச்சயம் ஒருநாள் பேசுவேன்.

    சிப்பாய் கழகம் என குறிப்பிடுகிறார்கள் ஆனால் நான் இதை வெள்ளையர்களை விரட்ட ஏற்பட்ட புரட்சியாக கருதுகிறேன். சாதி மதத்தை கடந்து போராடியுள்ளனர்.

    இந்த மண்ணில் தான் வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர் போன்றவர்கள் சிறந்த போராட்ட வீரர்களாக இருந்துள்ளனர்.

    இவர்கள் போராடவில்லை எனில் நாம் இப்போது இருப்பது போல இருக்க முடியாது.

    சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை இன்றைய இளைஞர்கள் நினைத்து பார்க்க வேண்டும். அப்போது தான் நாடு முன்னேறும்.

    ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னே நாம் கல்வியில் சிறந்து விளங்கினோம்.

    வில்லியம் பெனிடிக் 1800-களில் இந்திய கல்வியை ஆராய குழு அமைத்தார். அதில் இந்தியா கணக்கு, வரலாறு, கலை, வானியல் போன்ற படிப்புகளில் மேலோங்கி இருந்ததை அறிந்தார்கள்.

    சிப்பாய் புரட்சி சடங்கு சம்பிரதாயத்தை எதிர்த்து போராடியதாக கூறுகிறார்கள் அதை நான் ஏற்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அவர்கள் உயர் அதிகாரிகளை நாடி இருப்பார்கள். ஆனால் இது சுதந்திரத்துக்காக நடைபெற்றது. இது தான் நாடு முழுவதும் போராட்டமாக பரவியது.

    வேலூர் சிப்பாய் புரட்சி ஒரு தேசம் தழுவிய போராட்டம். புரட்சி தொடங்கிய அன்றே சுதந்திர போராட்டமாக தொடங்கியது.

    1806-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி தான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம்.

    நேதாஜிபடைக்கு சிப்பாய் வேண்டிய போது முதலில் ஆட்களை அனுப்பியது வேலூர்.

    75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் இந்நேரத்தில் அனைத்து சுதந்திர போராட்டக்காரர்களையும் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் ஒரு சிலரை மட்டுமே நினைத்து பார்க்கிறோம்.

    பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் சூப்பர் நாடாக மற்ற நாடுகள் இந்தியாவை பார்க்கிறது. இதற்கு உதாரணம் தான் கொரோனா காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 150 நாடுகளுக்கு வழங்கியுள்ளோம்.

    பிரதமருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர் மீதான பார்வையிலேயே இந்தியா நிலை குறித்து தெரியும்.

    நமது 100-வது சுதந்திர தினத்தில் உலகை ஆளும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கனவு.

    வேலூர் ஒரு வீரபூமி, இந்திய ராணுவத்தில் உள்ள அதிகமானோர் வேலூரை சேர்ந்தவர்கள் உள்ளனர். பல ராஜாக்கள் ஆண்டிருந்தாலும் நாம் ஒரே குடும்பமாக இருந்தோம் ஆங்கிலேயர்கள் தான் நம்மை பிரித்தாண்டார்கள்.

    விந்திய மலையை அடிப்படையாக வைத்து வடக்கில் உள்ளவர்கள் ஆரியர்கள் என்றும், தென்பக்கம் இருப்பவர்கள் திராவிடர் என்றும் இருந்தது. முன்பு மகாராஷ்டிரா உட்பட தென்பக்கம் திராவிட நாடாக இருந்தது. இது ஒரு புவியியல்.

    ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது 600 நாடுகளாக பிரிய இருந்தது. அதை ஒன்று சேர்த்தவர் இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேல்.

    அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க போகிறது என்பதை நோக்கி நகர்கிறோம். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதை உணர வேண்டும்.

    100-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் போது நாம் வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் இதை கடைபிடிக்க வேண்டும். மற்ற விகிதாச்சாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

    ஆரியம், திராவிடம் என்பது இனம் சார்ந்தது அல்ல இடம் சார்ந்தது மட்டும் தான். அதுவும் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தை கவர்னர் ஆர்.என். ரவி பார்வையிட்டார்.

    • வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தூணில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
    • நாளை காலை 7 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டுச் சென்று காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

    சென்னை:

    ஆங்கிலேயர்களுக்கு எதிரான வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் ஜூலை 10-ந்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் வேலூரில் நினைவு கூறும் வகையில் வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தூணில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

    இதற்காக நாளை காலை 7 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டுச் சென்று காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கவர்னருடன் தமிழக அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    வேலூரில் அன்றைய தினம் முன்னாள் படை வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோருடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார்.

    • அமர்சேவா சங்கத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களுக்கு தலைமை விருந்தினரான கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி கவுரவித்தார்.
    • தென்காசி மாவட்டத்திற்கு மாநில அளவில் மட்டும் அல்லாது இந்திய அளவில் மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது.

    தென்காசி:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நெல்லை வழியாக தென்காசி சென்றார்.

    தென்காசி மாவட்டம் கோவிந்தபேரியில், பத்மஸ்ரீ விருது பெற்ற ஷோகோ கார்ப்பரேசன் நிறுவனர் ஸ்ரீதர்வேம்புவை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் அவரது சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின் குற்றாலம் அரசு விடுதியில் தங்கினார்.

    இன்று காலை தென்காசி ஆய்க்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் அமர்சேவா சங்கத்தின் செயலாளர் சங்கரராமன் அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிறப்புரை ஆற்றினார்.

    தொடர்ந்து அமர்சேவா சங்கத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களுக்கு தலைமை விருந்தினரான கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தென்காசி மாவட்டத்திற்கு மாநில அளவில் மட்டும் அல்லாது இந்திய அளவில் மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது. இங்கு அமைந்துள்ள அமர்சேவா சங்கம் மனித நேயத்தை மக்களுக்கு எடுத்துரைக்கிறது.

    சமூகத்தில் நீண்ட காலமாகவே, எனக்கு நடக்க முடிகிறது. என்னால் எனது வேலையை செய்யமுடிகிறது. எனக்கு இது போதும் என்ற நினைப்புகளை கொண்ட மக்கள் தான் உள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

    மாற்றுத்திறனாளி மனிதர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும் நம்மை போன்று பொதுவான உரிமைகள், எதிர்பார்ப்புகள் இந்த சமூகத்தில் உள்ளன.

    தற்போது அமர்சேவா சங்கத்தின் தலைவரான ராமகிருஷ்ணன் வாழ்நாளை மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்காக அர்ப்பணித்தவர். அவரது 40 ஆண்டுகால சேவை மிகவும் பாராட்டத்தக்கது. அவரை வாழ்வில் முன்மாதிரியாக கொண்டு இன்னும் நிறையே பேர் வர வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மறுவாழ்விற்கு இவர் மேற்கொண்ட பங்களிப்பின் காரணமாகவே இவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இவரை கண்டு நான் பிரம்மிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன்பின்னர் சோலார் திட்டத்தை அர்ப்பணித்த கவர்னர் ஆர்.என்.ரவி, மாற்றுத்திறனாளிகளுக்கான பல்நோக்கு பயிற்சி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். முடிவில் சங்கத்தின் இணை செயலாளர் விஸ்வநாதன் கணேசன் நன்றி கூறினார்.

    ×