என் மலர்
நீங்கள் தேடியது "ஓ.பி.எஸ்"
- போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பதட்டம் நீடித்தது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனுார் மூலக்கடை சந்திப்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை இருந்தது.
1996-ல் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த சாலை புறவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டபோது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டது.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபின் புதிதாக எம்.ஜி.ஆர். வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிலையின் கல்வெட்டில் தங்கள் பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் புகார் தெரிவித்தனர்.
தங்களின் பெயரும், வில்லியனுார் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பெயரும் இடம்பெற வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதனிடையே புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், நேற்று முன்தினம் எந்த முன் அறிவிப்புமின்றி கட்சி நிர்வாகிகளுடன் சென்று எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார்.
இதையடுத்து அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் இன்று மீண்டும் அந்த சிலையை திறக்க உள்ளதாக அறிவித்தனர். இதற்கு புதுவை அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த சிலைக்கும், மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது என போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வில்லியனுார் புறவழிச்சாலை சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
காலை 10 மணிக்கு மேல் ஒருபுறம் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க.வினரும், மறுபுறம் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தலைமையில் உரிமை மீட்பு குழுவினரும் திரண்டனர்.
மேலும் அவர்கள் எதிர் எதிராக கோஷம் எழுப்பியதால் அங்கு கடும் பதட்டம் ஏற்பட்டது. அப்போது போலீசார் ஓம்சக்தி சேகரிடம், சிலைக்கு மாலை அணிவிக்க எந்த தடையும் இல்லை, ஆனால் திறப்பதற்கு அனுமதியில்லை என தெரிவித்தனர்.
ஓம்சக்தி சேகரும், அவரின் ஆதரவாளர்களும் இதனை ஏற்கவில்லை. போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பதட்டம் நீடித்தது.
இதையடுத்து ஓம்சக்தி சேகர் தலைமையிலான உரிமை மீட்பு குழுவினர் சிலையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஓம்சக்தி சேகர் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.சை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- முனுசாமிக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ்.
கோவை
அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் கோவை மாநகர், மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.சை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அம்மாவால் விரட்டி அடிக்கப் பட்டவர் முனுசாமி. முனுசாமிக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ்.
ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க வில் உழைக்கவில்லை என்று சொல்கிறார்.ஆனால் ஜெயலலிதா, ஓபிஎஸ் கட்சிக்கு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என்றார். விசுவாசம் மிக்க தொண்டன் என்ற பெயரை ஜெயலலிதாவிடம் வாங்கியவர் ஓ. பன்னீர்செல்வம். அவரை பற்றி பேச யாருக்கும் தகுதி யோக்கியதை கிடையாது.
எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவரது ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன்.
கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டுப்போனதாக புகார் தெரிவித்துள்ளார்கள். ஆனால் கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை. கடந்த தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி.
சசிகலா தற்போது கட்சியின் உறுப்பினர். எப்போதும் போல அவர் இருப்பார். மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒளிமயமான ‘ஒற்றை தலைமையே , தலைமை ஏற்க வாருங்கள், என வாசகங்கள் அடங்கி உள்ளன.
- இந்த போஸ்டர் தற்போது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
வேதாரண்யம்:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவாதம் சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் என ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வேதாரண்யம் வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கி முன்னாள்தலைவர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர் .
அதில் ஒளிமயமான 'ஒற்றை தலைமையே , தலைமை ஏற்க வாருங்கள், என வாசகங்கள் அடங்கி உள்ளன. இந்த போஸ்டர் தற்போது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.