search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15 பேர் கைது"

    • பொங்கல் பண்டிகையையொட்டி தடை மீறி சேவல் சூதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • 2 சேவல்கள் ரூ.300 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி தடை மீறி சேவல் சூதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பேரூர் போலீசாருக்கு அந்த பகுதியில் உள்ள பரியல் மைதானத்தில் சேவல் சூதாட்டம் நடப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சேவல் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 சேவல்கள், ரூ.500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதே போல ஆனைமலை போலீசார் இருட்டுப்பள்ளம் பகுதியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சேவல்கள், ரூ.550 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி கிழக்கு போலீசார் மோதிபுரத்தில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 சேவல்கள், ரூ.500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கிணத்துக்கடவு போலீசார் எஸ்.மேட்டுப்பாளையத்தில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் ரூ.300 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    • அந்தியூர் அடுத்த தாமரைக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதேபோல் தாமரைக்கரை பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த தாமரைக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சப் -இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தியூர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி, தாமரைக்கரை பகுதியை சேர்ந்த சித்தன், பெருந்துறையை சேர்ந்த அருணாச்சலம், சேகர், சந்தோஷ், ராஜா, குமார், ஊசி மலையை சேர்ந்த கிரியன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 11,960 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தாமரைக்கரை பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 13 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    • தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ப்படுவதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கண்டமனூர், மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் மற்றும் போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் 15 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இதே குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

    ×