search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரம்"

    • ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
    • ரத்தன் டாடா உடல் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

    உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    மறைந்த ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி 11,000 வைரக் கற்களை வைத்து அவரின் உருவத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடந்த 2019-ம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 காரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    உலகின் 2-வது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கனடா நிறுவனமான லுகாரா டைமண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1905-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் கல்லினன் வைரத்திற்கு பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும். போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த 2019-ம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 காரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரம் பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் லூயிஸ் உய்ட்டன் வாங்கியது. அதன் விலையை வெளியிடவில்லை.

    2016-ம் ஆண்டு இதே சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 1,109 காரட் வைரத்தை, 2017-ம் ஆண்டு கிராஃப் டைமண்ட்ஸின் தலைவரான லண்டன் நகைக்கடை வியாபாரி லாரன்ஸ் கிராஃப் $53 மில்லியனுக்கு வாங்கினார்.

    • வைர தொழிலின் மந்த நிலையால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • தினமும் 75 தொழிலாளர்கள் தற்கொலை எண்ணம் தொடர்பாக ஹெல்ப்லைனுக்கு கால் செய்துள்ளனர்.

    வைர உற்பத்தி குஜராத்தின் முக்கியமான தொழிலாளாகும். இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

    இதனால் ஏற்பட்ட விரக்தியால் பல தொழிலாளர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகியுள்ளது. ஆகவே தொழிலாளர்களை காக்கும் பொருட்டு குஜராத்தில் உள்ள வரை வைர தொழிலாளர் சங்கத்தால் தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவைக்கு கடந்த 20 நாட்களில் 1500 தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுள்ளனர். தினமும் 75 தொழிலாளர்கள் தற்கொலை எண்ணம் தொடர்பாக இந்த ஹெல்ப்லைனுக்கு கால் செய்துள்ளனர்.

    மேலும் கஷ்டப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வைர தொழிலாள சங்கம் உதவி செய்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 20 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி, 5 லிட்டர் எண்ணெய், சக்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தொழிலாளர் சங்கம் வழங்கியுள்ளது.

    வைர வியாபாரி லால்ஜி படேல், கஷ்டப்படும் 35 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக வெப்பம் மிகுந்த கிரகமாக புதன் உள்ளது.
    • புதன் கிரகத்திற்கு அடியில் வைர அடுக்குகள் 14 கி.மீ தடிமனில் உள்ளது.

    நமது சூரியகுடும்பத்தின் முதலாவது கிரகம் புதன் ஆகும். சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதால் அதிக வெப்பம் மிகுந்த கிரகமாக உள்ளது.

    இந்நிலையில், புதன் கிரகத்திற்குள் மிக அதிக அளவில் வைரம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

    புதன் கிரகத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பதாகவும், இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள்14 கி.மீ தடிமனில் இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், புதன் கோளில் உள்ள வைரத்தை சுலபமாக வெட்டி எடுக்க சாத்தியம் இல்லை என்று 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற அறிவியல் இதழில் தகவல் வெளியாகியுள்ளது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வைரக்கல் 19.22 காரட் எடை இருந்தது.
    • மதிப்பு ரூ.80 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டம் கிருஷ்ணா கல்யாண புராவை சேர்ந்தவர் ராஜு. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கல்குவாரி ஒன்றை ஏலத்திற்கு எடுத்தார். இதில் விலை உயர்ந்த வைரக்கல் ஒன்று கிடைத்தது.

    இதனை கண்ட ராஜு அதை உடனடியாக அரசு அதிகாரியிடம் கொடுத்தார். அந்த வைரக்கல் 19.22 காரட் எடை இருந்தது. அதன் மதிப்பு ரூ.80 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வைரக்கல்லை ஏலத்தில் விட முடிவு செய்தனர். அதில் வரும் பணம் முழுவதையும் ராஜுவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    எனது மனைவி குழந்தைகளுடன் ஏழ்மை நிலையில் உள்ளேன். தற்போது கிடைத்துள்ள வைரக்கல் மூலம் எனக்கு அதிக அளவில் பணம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் எனது குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பேன் என்றார்.

    • வைரமானது எஸ்கே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
    • சுமார் 20 கைவினைஞர்களால் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் பிரதமர் மோடியின் உருவம் கொண்ட வைரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வைரம் தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த கைவினைஞர்கள் 8 காரட் வைரத்தில் பிரதமர் மோடியின் படத்தை வடிவமைத்துள்ளனர். இந்த வைரம் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

    இந்த வைரமானது எஸ்கே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதன் மேலாளர் கூறுகையில், வைரமானது ஆரம்பத்தில் 40 காரட் லெப்ரான் வைரம். இருப்பினும் வடிவத்திற்காக வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட பிறகு அதன் அளவு 8 காரட்டாக குறைக்கப்பட்டது

    மேலும் இந்த வைரமானது 'மேக் இன் இந்தியா' பாணியில் உருவாக்கப்பட்டதாகவும், அது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் மேலாளர் கூறினார்.

    சுமார் 20 கைவினைஞர்களால் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் பிரதமர் மோடியின் உருவம் கொண்ட வைரம் தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கண்காட்சியை குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வியும் பார்வையிட்டார். கண்காட்சியில் இந்த நகை ஒரு கவர்ச்சி பொருளாக மாறியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராமத்தின் ஒரு மறைவான பகுதியில் கோவில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
    • சில குடும்பங்கள் இரவு நேரங்களிலும் தொடர்ந்து வைரங்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், சந்தர்லபாடு அருகே உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் வைர கற்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

    வைரக் கற்களை எடுப்பதற்காக தெலுங்கானா மாநிலம் உள்பட ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிமெட்லா வந்து திறந்த வெளியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்.

    கிருஷ்ண தேவராயர்கள், காகத்தியர்கள் மற்றும் நிஜாம்களின் ஆட்சியின் போது ஒரு காலத்தில் இந்த பகுதி நகரமாக இருந்துள்ளது.

    இந்த பகுதி அதிர்ஷ்டம் மற்றும் மர்மம் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் கிராமத்தின் ஒரு மறைவான பகுதியில் கோவில் இருப்பதாகவும் கூறுகின்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளி நகரை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஆறுமுகம் கொண்ட வைரக்கல் கிடைத்தது.

    ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் ஆரம்ப கட்டங்களில் இப்பகுதியில் வைரம் தேடுவதற்காக பொதுமக்கள் வருகை தருவது வாடிக்கையாகி வருகிறது.

    நிஜாம் ஆட்சியில் இருந்து தொடங்கி இந்த கிராமத்தில் வைரங்கள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் கிடைப்பது பிரபலமானது. இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் மழைக்காலங்களில் அதிகமான மக்கள் கிராமத்திற்கு வருகை தருகின்றனர். வைரங்களை வாங்க வியாபாரிகள் இந்த கிராமத்திற்கு படையெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் வயல்வெளிகள் மற்றும் திறந்த வெளிகளில் மக்கள் வைரங்களை தேடுவதற்கு அலை மோதுகின்றனர். அவர்கள் காலை முதல் மாலை வரையும் வைர வேட்டையில் ஈடுபடுகின்றனர். சில குடும்பங்கள் இரவு நேரங்களிலும் தொடர்ந்து வைரங்களை தேடி வருகின்றனர். வைரங்களை கண்டுபிடிப்பதற்காக மக்கள் அப்பகுதியில் மண்ணைத் தோண்டி சல்லடை போட்டு சளித்து கிடைக்கும் கற்களை பத்திரமாக சேகரிக்கின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஜமலாபுரத்தை சேர்ந்த ரங்கா ரெட்டி என்பவர் கூறுகையில்:-

    நான் சமீபத்தில் இந்த செய்தியை அறிந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக மண்ணை தோண்டி பார்த்தேன். ஆனால் எனக்கு வைரகற்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றார்.

    • துபாய் செல்லும் பயணிகளிடம் அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • எங்கிருந்து யாருக்கு வைரங்கள் கடத்தி செல்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு வைரங்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    துபாய் செல்லும் பயணிகளிடம் அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமாக பதிலளித்த 2 பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த ஒரு பையில் சாக்லேட் கவர்களால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரங்கள் இருந்தன.

    மொத்தம் 5 ஆயிரத்து 569.64 காரட் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 6.03 கோடி ஆகும். மேலும் அவர்களிடம் இருந்து 9.8 லட்சம் வெளிநாட்டு கரன்சி ரூ.1 லட்சம் இந்திய பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் எங்கிருந்து யாருக்கு வைரங்கள் கடத்தி செல்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு கிலோ வெள்ளியில் வைரஸ் பதிக்கப்பட்டுள்ளது.
    • 40 கலைஞர்கள் 35 நாட்களாக வடிவமைத்துள்ளனர்.

    வைரம் வியாபாரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரம் முன்னிலை வகிக்கிறது. நேற்று முன்தினம் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேசம் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சூரத்தில் உள்ள வைர வியாபாரிகள், சூரத்தில் உள்ள ராமர் கோவில் விடிவிலான வைர நெக்லஸை வடிவமைத்துள்ளனர்.

    இந்த வைர நெக்லஸ் 5 ஆயிரம் அமெரிக்கா வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 2 கிலோ எடை கொண்ட வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    40 கலைஞர்கள் 35 நாட்களாக இந்த நெக்லஸை வடிவமைத்துள்ளது. இது வணிக நோக்கத்திற்கானது அல்ல. நாங்கள் இதை ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்க இருக்கிறோம் என வைர வியாபாரி தெரிவித்துள்ளது. சூர்த்தில் உளள் ராமர் கோவில் போன்று இந்த நெக்லஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வயலில் வைரத்தை தேடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது தேன் நிறத்திலான கல் ஒன்று கிடைத்தது. அதை எடுத்த பெண் அங்குள்ள நகை கடைக்கு சென்று பரிசோதித்தார். அப்போது வைரக்கல் என தெரிய வந்தது.

    வயல் வெளியில் கிடைத்த வைரத்தை நகை வியாபாரி ரூ.25 லட்சத்திற்கு வாங்கினார். வயல்வெளியில் வைரம் கிடைத்த தகவல் அந்த ஊர் முழுவதும் பரவியது. இதனால் ஆண்கள், பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு வயல்களில் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வயலில் வைரத்தை தேடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் வயல்வெளியில் வைரத்தை தேடியதால் கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த தகவல் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் பரவியது.

    இந்நிலையில் பக்கத்து ஊரான மத நாதபுரத்தை சேர்ந்த விவசாயி தனது குடும்பத்தினருடன் அவரது வயல்வெளியில் வைரத்தை தேடினார். அவருக்கு 2 வைரக்கல் கிடைத்தது. தொடர்ந்து பொதுமக்கள் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    • விவசாயி ஒருவருக்கு தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரம் கிடைத்தது.
    • வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் விவசாயிகள் நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

    இந்த பகுதியில் உள்ள வயல் வெளிகளில் மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் கிடைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் கிடைத்த ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் நல்ல தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.

    அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்னூல் மாவட்ட விவசாயிகள் 2 விலை உயர்ந்த வைரக் கற்களை கண்டுபிடித்து நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் விவசாயி ஒருவருக்கு தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரம் கிடைத்தது. அதனை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் ரூ.2 கோடிக்கு விற்று ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி உள்ளார்.

    இதையடுத்து அந்த பகுதியில் வானில் இருந்து வைரக்கற்கள் விழுவதாக வதந்தி பரவியது. வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் விவசாயிகள் நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    கர்னூல் மாவட்ட விவசாயிகள் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு இரவு பகலாக குடும்பத்தினருடன் வயல் வெளிகளில் காத்துகிடக்கின்றனர்.

    அங்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைரக்கற்கள் கிடைக்கும் என காத்திருக்கின்றனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வைரம் கிடைப்பதாக கூறப்படும் கிராமங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • இந்த இளஞ்சிவப்பு நிற வைரம் அங்கோலாவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • அந்த வைரத்துக்கு ‘லுலோ ரோஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

    லுவாண்டா :

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலா வைரங்களை உற்பத்தி செய்யும் உலகின் முதல் 10 நாடுகளில் ஒன்றாக உள்ளது. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைரங்களை வெட்டி எடுக்கும் சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் அங்கோலாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லுலோ நகரில் ஆஸ்திரேலியாவின் லுகாபா வைர நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் மிகப்பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 170 காரட் என கணக்கிடப்பட்டுள்ளது.

    இது, உலகில் கடந்த 300 ஆண்டுகளில் கிடைத்த மிகப்பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம் என லுகாபா வைர சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லுலோ நகரில் கண்டெடுக்கப்பட்டதால், அந்த வைரத்துக்கு 'லுலோ ரோஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த இளஞ்சிவப்பு நிற வைரம் அங்கோலாவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    ×