என் மலர்
நீங்கள் தேடியது "நாசரேத்"
- நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
- முகாமில் 350 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.
நாசரேத்:
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.கணினி துறை தலைவி பேராசிரியை ஜெமில்டா ஆரம்ப ஜெபம் செய்தார். முகாமில் சுமார் 350 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர். இதில் 70 மாணவ, மாணவி களுக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன்,முதல்வர் ஜெயக்குமார், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஞானசெல்வன், பேராசிரியை ஜெனிபர் கிரேனா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- பாலாஜிக்கு அரசு ஒதுக்கீட்டில் இளங்கலை கால்நடை மருத்துவப் பிரிவில் இடம் கிடைத்துள்ளது.
- மாணவர் பாலாஜியை தாளாளர் எஸ்.சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
நாசரேத்:
நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படி ப்பில் வேளாண்மைத் தொழிற் கல்வி பிரிவில் பயின்ற மாணவர் பாலாஜி. இவருக்கு சேலம் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் மதிப்பெண் தகுதி அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டில் இளங்கலை கால்நடை மருத்துவப் பிரிவில் இடம் கிடைத்துள்ளது. இதற்காக மாணவர் பாலாஜியையும், பயிற்றுவித்த வகுப்பு ஆசிரியர்கள் ஜெய்சன் சாமுவேல், ஜெய்சன் பாபு ஆகியோரையும், தாளாளர் எஸ்.சுதாகர், தலைமையாசிரியர் வி.ஜெபகரன் பிரேம்குமார் மற்றும் ஆட்சி மன்ற குழுத்தலைவர் மர்காஷிஸ் டேவிட்வெஸ்லி, ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், நாசரேத் நகர மக்கள் பாராட்டினர்.
- ஏரலில் இருந்து நாசரேத் நகருக்கு வருவதற்கு புன்னைநகா் மற்றும் கடையனோடை பாதையை போக்குவரத் திற்கு வாகன ஓட்டிகள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனா்.
- தற்சமயம் கடையனோடை பாலம் பழுதடைந்து காணப்படுகிறது.
நாசரேத்:
தூத்துக்குடி, ஏரலில் இருந்து நாசரேத் நகருக்கு வருவதற்கு புன்னைநகா் மற்றும் கடையனோடை பாதையை போக்குவரத் திற்கு வாகன ஓட்டிகள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனா். கடையனோடை பாதையில் கடம்பா குளத்திற்கு செல்லும் கால்வாய் தண்ணீர் குறுக்காக செல்ல கட்டப்பட்ட பழமை யான பாலம், அத்துடன் குளத்திற்கு தண்ணீர் செல்வதற்கான மதகுகளும் உள்ளது.
தற்சமயம் பாலம் பழுதடைந்து உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 2 சிறிய இலகு ரக வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாத அளவிற்கு மிக குறுகலாக உள்ளது. இந்த பாலத்தை வாகனங்கள் எளிதாக கடக்கும் வகையில் அகலப்படுத்தி புதுப்பித்து கட்டினால் வாகன போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும். இதனை சீரமைத்து புதிய சாலை அமைத்தால் நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற் பேட்டையில் இருந்து தூத்துக்குடி, ஏரல் செல்ல எளிதாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாபு சங்கர் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி மாயமானார்.
- செருப்பை வைத்துகடந்த 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பாபு சங்கரின் எலும்புகள் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
நாசரேத்:
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கீழ தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பாபுசங்கர்(வயது 39).
மாயம்
தினமும் மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த பாபு சங்கர் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி மாயமானார். இதுதொடர்பாக நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மூக்குப்பீறி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மனித எலும்பு கூடு கிடப்பதாக நாசரேத் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு செருப்பு ஒன்றும் கிடந்தது.
அடையாளம் தெரிந்தது
தூத்துக்குடியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு எலும்புகள் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த செருப்பை வைத்து விசாரணை நடத்தியதில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பாபு சங்கரின் எலும்புகள் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் எதற்காக அங்கு சென்றார்? மதுபோதையில் அவர் இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாசரேத் குயின் தெருவை சேர்ந்த சுமதிபிரபா என்பவர் வீட்டிலும் நகைகள்-பணம் கொள்ளை போனது.
- அன்புராஜ் , அவரது தம்பி ரமேஷ், மற்றும் அய்யப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத்:
நாசரேத் கதீட்ரல் தெருவை சேர்ந்தவர் அகஸ்டின். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.
வீடுகளில் கொள்ளை
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், டி.வி. மற்றும் எலக்ட்ரிக் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
அதேபோல் நாசரேத் குயின் தெருவை சேர்ந்த சுமதிபிரபா என்பவர் வீட்டிலும் நகைகள்-பணம் கொள்ளை போனது.
3 பேர் கைது
இது தொடர்பாக புகாரின் பேரில் நாசரேத் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.
அதில் கொள்ளையில் ஈடுபட்டது நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த ரங்கபாலன் மகன் அன்புராஜ் (வயது22), அவரது தம்பி ரமேஷ் (19) மற்றும் சுத்தமல்லியை சேர்ந்த அய்யப்பன் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 நாட்களுக்கு முன்பு சுமதி பிரபா வீட்டை பூட்டிவிட்டு பாளையங்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.
- பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த நகை பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.
நாசரேத்:
நாசரேத் குயின் தெருவை சேர்ந்தவர் டேவிட்சன். இவரது மனைவி சுமதி பிரபா (வயது50). கணவர் இறந்துவிட்டதால் மகளுடன் வசித்து வருகிறார்.
நகை-பணம் கொள்ளை
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுமதி பிரபா வீட்டை பூட்டிவிட்டு பாளையங்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். பின்னர் மீண்டும் அவர் நாசரேத் சென்றார்.
அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த நகை பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக அவர் நாசரேத் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் ராய்சன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 21-ந் தேதி பணிக்கு சென்ற மின்ஊழியர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
- அந்தோணி ராஜை பழி தீர்ப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
நாசரேத்:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ஆனந்த பாண்டி (வயது 51). இவர் நாசரேத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 21-ந் தேதி பணிக்கு சென்ற இவர் மறுநாள் அலுவலக வளாகத்திற்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
மின் வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனந்த பாண்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் நாசரேத் அருகே உள்ள குப்பாபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்ற வாலிபர் சிக்கினார். இவரது தந்தை அதே மின் வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்துள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்சாரத்தில் அடிபட்டு இறந்துள்ளார்.
இதற்கு ஆனந்த பாண்டி தான் காரணம் என அந்தோணி ராஜ் கருதி உள்ளார்.
இந்த ஆத்திரத்தில் அவர் அந்தோணி ராஜை பழி தீர்ப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அந்தோணி ராஜிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் மூக்குப்பீறி பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
- போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
நாசரேத்:
நாசரேத் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவரது மனைவி சின்னம்மாள் (வயது 65). கணவன்-மனைவி நேற்று வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்க்க சென்றனர். பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இது தொடர்பாக சின்னம்மாள் நாசரேத் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.