என் மலர்
நீங்கள் தேடியது "கைது."
- ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன.
- போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள்.
சென்னையில் இன்று காலை ஒரு மணிநேரத்தில் 7 பெண்களிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் தப்பி சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.
இதில் நகை பறித்து தப்பியவர்கள் விமான நிலையம் நோக்கி சென்று இருப்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் பற்றிய விபரங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதில் ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த விமானங்கள் புறப்படுவதை நிறுத்தினர்.
மேலும் விரைந்து சென்று ஐதராபாத் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் ஏறி சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒரு வாலிபரை பிடித்தனர். இதேபோல் மும்பை செல்ல தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்த மற்றொரு வாலிபரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் 2 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் நகை பறிப்பில் ஈடுபட்டு விட்டு விமானத்தில் தப்பி செல்ல முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். மேலும் போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் இதுபோல் பலமுறை வந்து நகை பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் அவர்களுடன் மேலும் சிலரும் சேர்ந்து இந்த நகைபறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களது கூட்டாளிகள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இன்று நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 வடமாநில வாலிபர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணைக்கு பின்னரே அவர்களுடன் தொடர்பில் உள்ள கொள்ளைகும்பல் மற்றும் இது போல் அவர்கள் ஏற்கனவே நகைபறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? என்பது தெரிய வரும் என்றனர். சென்னையில் நகை பறித்து விட்டு விமானத்தில் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள் பிடிபட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது.
- பலத்த காயமடைந்த கமலா மயங்கி கீழே விழுந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி பேடரபள்ளியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி கமலா (23). இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த கமலாவின் இடது கையை வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த கமலா மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை தங்கை மஞ்சுளா மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மஞ்சுளா ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்
- 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கடை பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
- போலீஸ் சமயோசிதமாக செயல்பட்டு போட்டோ எடுத்து வைத்திருந்ததால் மேற்கொண்டு அவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கொடுவாயில் தனியார் ஒருவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கடை பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் தங்களது முயற்சியைக் கைவிட்டு திரும்பி நடந்து வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அவிநாசிபாளையம் ரோந்து போலீஸ் தயாளன் என்பவர் அவர்கள் மீது சந்தேகப்பட்டு நீங்கள் யார்? எந்த ஊர்? என விசாரித்துள்ளார். அவர்கள் தாங்கள் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், செங்கல் இறக்குவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசுக்கு மேலும் சந்தேகம் வலுக்கவே அவர்கள் இருவரையும் தனது செல்போன் மூலம் போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டது குறித்த தகவல் நேற்று காலை அவினாசிபாளையம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் அவர்கள் இருவரும் பிடிபட்டனர். அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த ஹரி நாயக் (வயது 20), பிருந்தா நாயக் (22) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தக்க சமயத்தில் போலீஸ் சமயோசிதமாக செயல்பட்டு போட்டோ எடுத்து வைத்திருந்ததால் மேற்கொண்டு அவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. சமயோசிதமாக செயல்பட்ட போலீஸ்காரர் தயாளனை பல்லடம் துணை காவல் கண் கண்காணிப்பாளர் சவு மியா, போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
- சொந்தமான சரக்கு வேன்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது.
- விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கும் பனியன்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆயிரம் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அட்டைப் பெட்டிகளில் பன்டல் செய்யப்பட்டு, அமெரிக்கா அனுப்பப்படுவதற்காக, அருள்புரத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சரக்கு வேன்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து கப்பல் மூலம் அமெரிக்கா அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அனுப்பப்பட்ட பண்டல்களில் 1,300 பனியன்கள் குறைவாக இருப்பதாக அமெரிக்க நிறுவனம் தனியார் பனியன் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியது. இதுகுறித்து பனியன் நிறுவனத்தினர் ஆய்வு செய்தபோது சரக்கு வேனில் இருந்து பனியன்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பனியன் நிறுவன மேலாளர் சதீஷ் என்பவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காரணம் பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே பனியன் நிறுவனத்தில் சரக்குகளை ஏற்றிச் சென்ற வேன் ஏஜென்ட் சிவா என்பவர் அந்த வழியே வந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அவரை போலீசார் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் பனியன்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இது குறித்த விசாரணையில் அவர் கூறியதாவது:-
வால்பாறையைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சிவா(32) திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த காத்தான் மகன் சிவக்கண்ணன்(36) அதே பகுதியைச் சேர்ந்த பூமி பாலன் மகன் ஜெயபால்(34) ஆகிய மூவரும் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான சரக்கு வேன்களில் பனியன் அட்டைப் பெட்டிகளை கொண்டு சென்றனர்.
அப்போது அருள்புரத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகம் செல்லும் வழியில் அட்டைப்பெட்டிகளில் இருந்து 1,300 பனியன்களை திருடியதும், அவற்றை வெளி வியாபாரிடம் விற்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.1.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தனது 19 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
- இளம்பெண் குளிப்பதை பலமுறை வீடியோ எடுத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தனது 19 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வதுதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சரவணன் தனது மனைவியின் மகளான 19 வயது இளம்பெண் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். நேற்று தற்செயலாக செல்போனை அந்தப் பெண் பார்த்தபோது தனது மகளின் குளியல் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இளம்பெண் குளிப்பதை பலமுறை வீடியோ எடுத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பெண்ணின் தாயார் அவினாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பீகார் மாநிலத்தை சேர்ந்த பாரத்சகினி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மேற்கண்ட 4 பேரையும் பிடித்து கைது செய்தனர்.
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள தாண்டாகவுண்டன்புதூர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பாரத்சகினி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியை சேர்ந்த காளிமுத்து மகன் திலோத் (வயது 22), கரூரை சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் சண்முகவேல் ( 23),திருச்சியை சேர்ந்த ரவி மகன் விஷ்வா ( 22), செந்தில்குமார் மகன் அறிவழகன் ( 22) ஆகிய 4 பேரும் சேர்ந்து செல்போனை பறித்து சென்றதாக தெரிகிறது.
இது குறித்து பாரத்சகினி பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில்சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஷ்வரி, மற்றும் போலீசார் அன்பரசன், கார்த்திகேயன்,மயில்சாமி,சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மேற்கண்ட 4 பேரையும் பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- வீட்டில் 30 கிலோ பட்டாசுகள் அனுமதி யின்றி இருந்ததது தெரியவந்தது.
- பட்டாசு களை வைத்து இருந்ததாக நவுசாத்தை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே சென்னசந்திரத்தில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் அனுமதியின்றி வைத்தி ருபபதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அதில் நவுசாத் (வயது 36) என்பவரின் வீட்டில் 30 கிலோ பட்டாசுகள் அனுமதி யின்றி இருந்ததது தெரியவந்தது.
இதையடுத்து பட்டாசு களை வைத்து இருந்ததாக நவுசாத்தை போலீசார் கைது செய்தனர்.
- வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
- 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவிட்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், இண்டூர் போலீசார் நாகர்கூடல்- பண்டஅள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அவர்கள் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சொரக்காப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 53), சஞ்சீவபுரத்தை சேர்ந்த சரவணன் (40) என்பது தெரிய வந்தது.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக தருமபுரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் சந்தன கட்டைகளுடன் சிக்கிய 2 பேரை கைது செய்து தருமபுரி வன அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் சந்தன கட்டைகளை கடத்திச் செல்வது உறுதியானது.
இதையடுத்து 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவிட்டார்.
கடத்தப்பட்ட சந்தன கட்டைகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வனத்துறை யினர் பறிமுதல் செய்தனர்.
சந்தன கட்டை கடத்தலில் சிக்கிய 2 பேரும் அவற்றை எங்கே கொண்டு செல்கிறார்கள்? சந்தன கட்டைகளை வாங்கி விற்பவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
- ஆண் நண்பர், மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்தப்பெண் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் பல்லடம் அருகே உள்ள அருள் புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பெண்ணின் ஊர் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் நல்லூர் காவல் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களைப் பின்தொடர்ந்து பைக் மற்றும் 3 கார்களில் வந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் அந்த ஆண் நண்பர், மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவர் மகன் ராமகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரது மகன் விக்னேஷ் இருவரையும் பல்லடம் பனப் பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ரூ.1,150ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்,ஆக.22-
வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெள்ளகோவில், மூலனூர் ரோடு, ஈஸ்வரன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அங்குராஜ் (வயது 25),கோபிநாதன் (27), மகாதேவன் (37), கார்த்தி( 28) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,150ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரியலூர் ஆண்டிமடம் அருகே வீட்டு கடன் வாங்கி தருவதாக 12 பேரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த ஆசாமி சிக்கினார்
- கேரளா, கோவை , ஈரோடு பகுதியில் பதுங்கிய நபரை பொறி வைத்து பிடித்த போலீசார்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பட்டணம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 33) இவர் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் சிறுகளத்தூர்,பொன்பரப்பி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 12 பேரிடம் வீட்டுக் கடன் வாங்கி தருவதாக ஒவ்வொருவரிடமும் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை பெற்றார். பின்னர் வங்கியில் கடன் பெற்று தராமல் காலம் தாழ்த்தினார். கடந்த 3 ஆண்டுகளாக ஒருவருக்கு கூட கடன் பெற்று தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் மணிவேல் பணத்தை கொடுக்க மறுத்தார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட இளவரசன் உள்ளிட்டவர்கள் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவேலை தேடினர். போலீசார் தேடுவதை மோப்பம் பிடித்த அவர் கோவை, கேரள மாநிலம் பாலக்காடு, ஈரோடு என தலைமறைவாக சுற்றித்திரிந்தார். போலீசார் செல்போன் டவர் மூலம் அவரை பின்தொடர்ந்தனர். கடைசியாக ஈரோட்டில் ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த மணிவேலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அதன் பின்னர் அரியலூர் கொண்டு வந்து அவரிடம் விசாரணை நடத்தி செந்துறை குற்றவியல் நீதிபதி ஏக்னஸ் ஜெப கிருபா முன்பு ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது மது பாட்டில்களை பதுக்கி விற்பது தெரியவந்தது.
- அவரிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
நாகர்கோவில் :
வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் தலைமையிலான போலீசார் நாடான்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர், போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது மது பாட்டில்களை பதுக்கி விற்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.