search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ் 2 தேர்வு"

    • இயற்பியலில் 22 மதிப்பெண்களும், வேதியலில் 33 மதிப்பெண்களும் மட்டுமே எடுத்துள்ளார்.
    • நீட் தேர்வில், வேதியியலில் 99.86 சதவீத மதிப்பெண்களும், இயற்பியலில் 99.89 சதவீத மதிப்பெண்களும் எடுத்துள்ளார்

    நீட் தேர்வு முறைகேடு நாட்டின் அரசியல் மற்றும் சமூக சூழலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குஜராத்தில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவி பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஃபெயில் ஆகியுள்ளார். அதற்கு நடத்தப்பட்ட மறு தேர்விலும் ஃபெயில் ஆகியுள்ளார்.

    கடந்த மே 5 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்பட்டது. அந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த  மாணவி ஒருவர் 720 க்கு 705 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

    ஆனால் அவர் கடந்த மார்ச் மாதம் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அதன்பின்னர் வெளியாகியுள்ளது. அதில் அறிவியல் பாடங்களில் அவர் ஃபெயில் ஆகியுள்ளார். அதற்காக அவர் சம்ப்ளிமெண்டரி எக்ஸாம் எனப்படும் மறு தேர்வு எழுதிய நிலையில் அதிலும் அவர் தோல்வியடைந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    இந்த மறு தேர்வில் அறிவியல் பாடங்களான இயற்பியலில் 22 மதிப்பெண்களும், வேதியலில் 33 மதிப்பெண்களும் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் நீட் தேர்வில், வேதியியலில் 99.86 சதவீத மதிப்பெண்களும்,  இயற்பியலில் 99.89 சதவீத மதிப்பெண்களும்,  உயிரளியலில் 99.14 மதிப்பெண்களும் பெற்று  மொத்தமாக 705/720 எடுத்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக இந்த வருட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

    • முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகையில், போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.
    • பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந் தேதி வெளியானது.

    இதில் புதுச்சேரியில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரி போலீசார் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவி களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தலை வாழை இலை போட்டு விருந்தளித்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. புதுச்சேரி திருபுவனை போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகை யில், திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.

    அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.

    மேலும் தனது கையால் தலை வாழை இலை போட்டு வடை, பாயாசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என அறுசுவையோடு உணவு பரிமாறி மாணவ- மாணவி களையும் பெற்றோர்களையும் நெகிழ வைத்தார்.

    வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்று லட்சியம் வைத்திருக்கிறீர்களோ அதை நோக்கியே உங்களது பார்வை இருக்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அறிவுரை வழங்கினார்.

    இந்தவீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாராட்டும் குவிந்து வருகிறது. 

    • கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
    • கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 2.87 சதவீதம் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது.

    இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் மாணவர்கள் 7801 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.34 சதவீதம் ஆகும். தேர்வு எழுதிய மாணவிகளில் 9,538 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 94.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 18,874 மாணவ, மாணவிகளில் 17,339 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 91.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 2.87 சதவீதம் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
    • பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.

    இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

    இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறுமதிப்பீடு, மறு கூட்டல் நாளை முதல் தொடங்குவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    உடனடி தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    • மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.
    • 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு.

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.

    இந்த தேர்வில், 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.

    இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர் எனவும் கூறப்பட்டது.

    இதற்காக, தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    தமிழ் பாடத்தேர்வான இன்று சுமார் 12,364 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தங்களின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்களிடம் வாழ்த்தும், ஆசிகளையும் பெற்றனர்.
    • பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் சிறந்த முறையில் தேர்வு எழுத வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பினர்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் பள்ளிகளில் நேரடியாக தேர்வு எழுதுகிறார்கள்.

    பள்ளிகளில் படிக்காமல் பயிற்சி வகுப்பு மூலம் 21 ஆயிரத்து 875 தனித் தேர்வர்களும், சிறை கைதிகள் 125 பேரும் எழுதுகின்றனர்.

    302 மையங்களில் நடைபெறும் பொதுத்தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வுக்கு முன்னதாக 9.30 மணிக்கு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டார்கள். 10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது.

    10.10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு அதனை மாணவர்கள் சரி பார்த்து படிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

    10.15 மணிக்கு தேர்வு தொடங்கி பகல் 1.15 மணி வரை நடடைபெறுகிறது.

    தேர்வு மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. முதல் நாளான இன்று தமிழ் பாடத்தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினார்கள்.

    தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் வெளியேற்றப்படுவதோடு 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்களா? என கண்காணிக்க 3200 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேர்வு மைய கண்காணிப்பாளர்களின் தீவிர மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு முறையாக தேர்வை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


    பொதுத் தேர்வை எவ்வித குழப்பமும் இல்லாமல் நடத்த அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தங்களின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்களிடம் வாழ்த்தும், ஆசிகளையும் பெற்றனர். அரசு மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் வெளிநபர்கள் யாரையும் தேர்வு நேரத்தில் அனுமதிக்கவில்லை. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் சிறந்த முறையில் தேர்வு எழுத வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பினர்.

    சென்னை மாவட்டத்தில் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இத்தேர்வு வருகிற 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. 5-ந்தேதி ஆங்கில தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு தேர்விற்கும் போதிய இடைவெளி விடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் தேர்விற்கு எளிதாக ஆயத்தமாக முடியும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது.
    • தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

    சென்னை:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இத்தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான தேர்வுக் கூட நுழைவு சீட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 20-ந்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று 'ஆன்லைன்-போர்டல்" என்ற வாசகத்தினை கிளிக் செய்து user ஐ.டி. பாஸ்வேர்டை கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இதே போல பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டினை 19-ந்தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மட்டும் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை எவ்வித குழப்பம் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.

    குறிப்பாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கேள்விகளின் வரிசை மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு மையத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏ, பி, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும்.

    இந்த 2 வகையான வினாத்தாள் வரிசை எண் மாற்றப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது.

    இது குறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்ட போது இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.

    • பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார்.
    • 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி நிறைவு பெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடர் குறித்து தற்போது வரை பல நாட்டு வீரர்களும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

    இந்நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை ஏற்கனவே இருமுறை தோற்கடித்து செஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார். அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இன்று எனது 12-ம் வகுப்பு தேர்வில் ஆங்கில தேர்வுக்கான கேள்வி தாளை கொடுத்தனர். அதில் வந்த கேள்வியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கேள்வி என்னவென்றால், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எவ்வாறு நடைபெற்றது என்பதை விவரித்து வெளிநாட்டில் படிக்கும் உங்கள் நண்பருக்கு கடிதம் எழுதுங்கள் என கேள்வித்தாளில் இடம் பெற்றிருந்தது என குறிப்பிட்டிருந்தார்.

    பிரக்யானந்தாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்விக்கு நீங்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றீர்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். முடிவுகள் வெளிவந்தவுடன் பகிரவும் என பதிவிட்டிருந்

    • தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 துணைத் தேர்வு வரும் ஜூன் 19-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது.
    • தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வுக்கே செல்லாதவர்கள் ஜூன் 19 முதல் 26-ந்தேதி வரை நடைபெறவுள்ள துணைத்தேர்வை எழுதலாம்.

    தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 துணைத் தேர்வு வரும் ஜூன் 19-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு நாளை (புதன்கிழமை)-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 8-ல் வெளியிடப்பட்ட பிளஸ்-2 பொதுத் தேர்வில் 47934 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற வில்லை. இதையடுத்து தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வுக்கே செல்லாதவர்கள் ஜூன் 19 முதல் 26-ந்தேதி வரை நடைபெறவுள்ள துணைத்தேர்வை எழுதலாம்.

    துணைத்தேர்வு எழுத மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் மே 11-ந்தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வுக் கட்டணம் மற்றும் இணைய பதிவுக் கட்டணம் சேவை மையம் அல்லது பள்ளியில் பணமாக பெறப்படுகிறது. இந்தத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

    நாளைக்குள் விண்ணப்பிக்கத் தவறுவோர் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) உரிய கூடுதல் ரூ.1,000 கட்டணத்துடன் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். சேவை மையங்களின் விவரங்கள், இணையவழியில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி, அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    • சுயநிதி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு கிடையாது.
    • மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை பெற்று வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் www.dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என உத்தரவு.

    சென்னை:

    2022-23-ம் கல்வியாண்டுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்க இருக்கிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். இந்த தேர்வை எழுத இருக்கும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட வேண்டிய தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி, செய்முறை கொண்ட பாடங்களை உள்ளடக்கிய பாடத் தொகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.225-ம், செய்முறை இல்லாத பாடங்களை உள்ளடக்கிய பாடத் தொகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.175-ம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தேர்வு கட்டணங்களில் இருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் மாணவர்கள், கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேசாத மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.சிஏ., எஸ்.எஸ்., எஸ்.டி., எம்.பி.சி. பிரிவை சேர்ந்த மாணவர்கள், அதேபோல், பி.சி., பி.சி.எம் பிரிவில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள மாணவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

    சுயநிதி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு கிடையாது. மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை பெற்று வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் www.dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
    • மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

    சென்னை:

    அரசு தேர்வுகள் இயக்குனர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்பட) பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

    ×