search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
    X

    பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

    • தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 துணைத் தேர்வு வரும் ஜூன் 19-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது.
    • தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வுக்கே செல்லாதவர்கள் ஜூன் 19 முதல் 26-ந்தேதி வரை நடைபெறவுள்ள துணைத்தேர்வை எழுதலாம்.

    தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 துணைத் தேர்வு வரும் ஜூன் 19-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு நாளை (புதன்கிழமை)-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 8-ல் வெளியிடப்பட்ட பிளஸ்-2 பொதுத் தேர்வில் 47934 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற வில்லை. இதையடுத்து தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வுக்கே செல்லாதவர்கள் ஜூன் 19 முதல் 26-ந்தேதி வரை நடைபெறவுள்ள துணைத்தேர்வை எழுதலாம்.

    துணைத்தேர்வு எழுத மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் மே 11-ந்தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வுக் கட்டணம் மற்றும் இணைய பதிவுக் கட்டணம் சேவை மையம் அல்லது பள்ளியில் பணமாக பெறப்படுகிறது. இந்தத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

    நாளைக்குள் விண்ணப்பிக்கத் தவறுவோர் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) உரிய கூடுதல் ரூ.1,000 கட்டணத்துடன் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். சேவை மையங்களின் விவரங்கள், இணையவழியில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி, அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×